Published:Updated:

`பாட்டுப்பாடி மாணவர்களை வரவேற்றோம்!’ - அரசுப் பள்ளி தலைமையாசிரியர் அசத்தல், அட்மிஷனுக்கு போட்டி

அம்மையநாயக்கனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி

இந்த அரசுப்பள்ளியில், பாடப்புத்தகங்களில் உள்ள க்யூ.ஆர் கோட் மூலமாக வீடியோ காட்சிகளைக் காண்பித்து மாணவர்களுக்கு பாடம் நடத்தப் படுகிறது. ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகளைவிட இப்படி வீடியோ மூலம் பாடம் கற்பதை மாணவர்கள் ஆழமாக உள்வாங்கிக்கொள்வதாகக் கூறுகின்றனர்.

`பாட்டுப்பாடி மாணவர்களை வரவேற்றோம்!’ - அரசுப் பள்ளி தலைமையாசிரியர் அசத்தல், அட்மிஷனுக்கு போட்டி

இந்த அரசுப்பள்ளியில், பாடப்புத்தகங்களில் உள்ள க்யூ.ஆர் கோட் மூலமாக வீடியோ காட்சிகளைக் காண்பித்து மாணவர்களுக்கு பாடம் நடத்தப் படுகிறது. ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகளைவிட இப்படி வீடியோ மூலம் பாடம் கற்பதை மாணவர்கள் ஆழமாக உள்வாங்கிக்கொள்வதாகக் கூறுகின்றனர்.

Published:Updated:
அம்மையநாயக்கனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி

தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு, பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு பூக்களைக் கொடுத்தும் சாக்லேட்டுகளைக் கொடுத்தும் பல பள்ளிகளில் ஆசிரியர்கள் வரவேற்றனர். ஆனால், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அம்மையநாயக்கனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் தலைமையாசிரியர் மாணவர்களை வரவேற்ற விதம் மக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றது.

விடுமுறைக்குப் பிறகு மீண்டும் இந்தப் பள்ளிக்கு வரும் மாணவர்களையும், புதிதாகப் பள்ளியில் சேர்ந்துள்ள மாணவர்களையும் பாட்டுப் பாடி அப்பள்ளியின் தலைமையாசிரியர் வரவேற்றார். இந்த நெகிழ்ச்சியான சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களை மிகவும் கவர்ந்தது.

பாட்டுப் பாடும் தலைமையாசிரியர்
பாட்டுப் பாடும் தலைமையாசிரியர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``அரசோட பள்ளிக்கு வாங்க
பிள்ளைகளை சேர்த்துவிட்டுப் போங்க
கல்வியில், வேலைவாய்ப்பில் 7.5 சதவிகிதம்
தமிழ் வழியில் படித்தாலே
20 சதவிகிதமும் இடமுண்டே!”

- இப்படி, அம்மையநாயக்கனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் நுழைவுவாயில் பகுதியில் நின்று பள்ளி மாணவர்களை வரவேற்றுக் கொண்டிருந்தார் தலைமையாசிரியர் ஆர்தர். அவரிடம் பேசினோம்.

``1995-ல் ஆசிரியப் பணியில் சேர்ந்தேன். 11 ஆண்டுகளாக தலைமையாசிரியராகப் பணியாற்றி வருகிறேன். வகுப்பில் மாணவர்களுக்குப் பாடங்களை பாடல் மூலமாகவே நடத்தும் வழக்கம் உண்டு. குறிப்பாக திருக்குறள், பாரதியார் பாடல்களை பாடிக்காட்டி கற்பிப்பேன். இது மாணவர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடக்கத்தில் இப்பள்ளியில் 175 மாணவர்கள் மட்டும் படித்தனர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இருக்கும் வகுப்பறைகளையும் ஆசிரியர்களையும் கொண்டு மாணவர்களுக்கு சிறப்பான கல்வியைக் கொடுத்தோம். அதுமட்டுமல்லாது மாணவர்களை அருகே உள்ள பால்பண்ணை, வங்கி, ரயில்வே நிலையம், காவல் நிலையம் அழைத்துச் சென்று அங்குள்ள நடைமுறைகள் குறித்தும் விளக்குவோம். கலைநிகழ்ச்சிகள் அனைத்திலும் அனைத்து மாணவர்களும் பங்கேற்க உத்வேகமும் பயிற்சியும் அளித்து அவர்களின் திறமையை வெளிக்கொண்டு வருகிறோம். மேலும் டெங்கு, கொரோனா போன்ற விழிப்புணர்வு பாடல்களை இயற்றி அதை மக்களிடம் கொண்டு சேர்க்கிறோம்.

ஆர்தர்
ஆர்தர்

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கில வழிக் கல்வி வந்த பிறகு அருகே உள்ள கொடைரோடு, ராஜதானிகோட்டை, புதூர், செட்டியபட்டி, மாலையக்கவுண்டன்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாய மற்றும் கூலித் தொழிலாளர்கள் தங்களின் பிள்ளைகளை இங்கு வந்து சேர்க்கத் தொடங்கினர். கடந்த ஆண்டு மட்டும் தனியார் பள்ளி மாணவர்கள் 56 பேர் எங்கள் பள்ளியில் சேர்ந்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எங்கள் பள்ளியில் 9 வகுப்பறைகளும் 9 ஆசிரியர்களும் உள்ளனர். அதேபோல 4 டிவிகள் உள்ளன. பாடப்புத்தகங்களில் உள்ள க்யூ.ஆர் கோட் மூலமாக வீடியோ காட்சிகள் மூலமாகவும் மாணவர்களுக்கு பாடம் நடத்துகிறோம். ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகளைவிட வீடியோ மூலம் பாடம் கற்பிப்பதை மாணவர்கள் ஆழமாக உள்வாங்கிக்கொள்கிறார்கள்.

வகுப்பறை
வகுப்பறை

தனியார் பள்ளிக்கு நிகரான கல்வியைக் கொடுப்பதால் தற்போது மாணவர் சேர்க்கைக்கு பெற்றோர்கள் போட்டி போடுகின்றனர். தற்போது 318 பேர் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

எங்கள் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர், குடிநீர் சேகரிப்பு காரணமாக எங்கள் பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு இல்லை. இதை மாணவர்கள் மூலம் அவர்களின் பெற்றோர்களுக்கு சொல்ல வைக்கிறோம். ஏனென்றால், பக்கத்து ஊர்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைவாக இருப்பதால் தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்படுகிறது. மாணவர்களுக்கு வெறும் பாடங்களை மட்டும் போதிக்காமல், அவர்கள் சமூகப் பார்வையும் கொண்டிருக்க வேண்டும் என்ற நோக்கில் அவர்களை உருவாக்கி வருகிறோம்’’ என்றார்.

வீடியோ மூலம் பாடம் கற்றல்
வீடியோ மூலம் பாடம் கற்றல்

அப்பள்ளி மாணவனின் அம்மா ஒருவர், ``பிரைவேட்டு ஸ்கூலவிட எங்க ஊரு ஸ்கூல் நல்லா இருக்கு. இருந்தாலும், இங்லீஸ் மீடியம் தொடங்கி இதுவரைக்கும் டீச்சர் போடாம இருக்காங்க. பசங்க உக்கார கிளாஸ் ரூம் பத்தல. கவர்மென்டு கூடுதலா பில்டிங் கட்டிக் கொடுத்தா நல்லா இருக்கும்'' என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism