Published:Updated:

அமெரிக்கக் குழந்தைகளுக்கு நிதிக் கல்வி! - ஆன்லைனில் வித்தியாசமான அனுபவம்

குழந்தைகளுக்கு
நிதிக் கல்வி
பிரீமியம் ஸ்டோரி
குழந்தைகளுக்கு நிதிக் கல்வி

குழந்தைகளுக்கு பள்ளியிலேயே நிதிக் கல்வியைத் தரத் தொடங்கினால், பிற்காலத்தில் நிதிச் சுதந்திரம் பெற்றவர்களாக இருப்பார்கள்!

அமெரிக்கக் குழந்தைகளுக்கு நிதிக் கல்வி! - ஆன்லைனில் வித்தியாசமான அனுபவம்

குழந்தைகளுக்கு பள்ளியிலேயே நிதிக் கல்வியைத் தரத் தொடங்கினால், பிற்காலத்தில் நிதிச் சுதந்திரம் பெற்றவர்களாக இருப்பார்கள்!

Published:Updated:
குழந்தைகளுக்கு
நிதிக் கல்வி
பிரீமியம் ஸ்டோரி
குழந்தைகளுக்கு நிதிக் கல்வி
ம் வாழ்க்கையில் தனிமனிதனின் முன்னேற்றத்துக்கு அடிப்படையாக இருப்பது நிதிக் கல்வி. ஆனால், இந்த நிதிக் கல்வி பள்ளிகளிலோ, கல்லூரிகளிலோ கற்றுத் தரப்படுவதில்லை.

எம்.பி.ஏ-வில் அதுபற்றி விரிவாகச் சொல்லித் தரப்பட்டாலும், நம்மில் எத்தனை பேர் பல லட்சங்களைக் கட்டி எம்.பி.ஏ படிக்க முடியும்? நிதிக் கல்வியின் தேவை பள்ளிக்குழந்தைகளுக்குச் சென்று சேர வேண்டும் என்பதற்காகக் கடந்த சில ஆண்டுகளாகவே வாய்ப்பு கிடைக்கும் பள்ளி கல்லூரியிலும், அலுவலகங்களில் வேலை பார்க்கும் ஆண் பெண்ணிடமும் பேசி அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன்.

அமெரிக்கக் குழந்தைகளுக்கு நிதிக் கல்வி! - ஆன்லைனில் வித்தியாசமான அனுபவம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பல பள்ளி, அலுவலகங்களுக்கு நானே நேரில் சென்று நிதிக் கல்வி குறித்த வகுப்பைக் கொஞ்சம் சிரமப்பட்டு எடுத்தபோது, வெபினார் மூலமாக வகுப்பெடுக்கும் வழக்கம் வந்தது எனக்கு மிகவும் வசதியாகப் போனது. இருந்த இடத்தில் இருந்துகொண்டு உலகம் முழுக்க உள்ள குழந்தைகளுக்கு நிதிக் கல்வி வகுப்பு எடுக்கும் வாய்ப்பு உருவானது.

அமெரிக்கக் குழந்தைகளுக்கு நிதிக் கல்வி! - ஆன்லைனில் வித்தியாசமான அனுபவம்

ஹலோ அமெரிக்கா!

ஆகஸ்ட் மாதம் 23, 24, 25 ஆகிய தேதிகளில் அமெரிக்கா வாழ் இந்தியச் சிறுவர் சிறுமியருக்கு (வயது 10 முதல் 15 வரை) ‘ஃபைனான்ஸ் 1-0-1 ஃபார் கிட்ஸ்’ என்ற பெயரில் கூகுள் மீட்டில் ஒரு நிதிக் கல்வி நிகழ்ச்சியை அறிவித்தேன். அமெரிக்காவில் உள்ள ஆயிரக்கணக்கான தமிழ்க் குடும்பங்களில் உள்ள குழந்தைகளுக்கு நிதிக் கல்வி தொடர்பான அடிப்படையைக் கற்றுத்தர முயற்சி செய்வதே என் நோக்கம். ‘இது என்ன புதுசா இருக்கே’ எனக் குழந்தைகள் ஒருபக்கம் தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ள, லாக்டெளனில் பிள்ளைகளின் துறுதுறுப்பைச் சமாளிக்க முடியாமல் தவித்த பெற்றோர்களும் ‘இது உருப்படியான விஷயம்தான். குழந்தைகள் கற்றுக்கொள்ளட்டும்’ என்று சம்மதம் தெரிவித்தார்கள். எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே விண்ணப்பங்கள் வந்தன.

குடும்பப் பின்னணிகளிலும் பிள்ளைகளின் புரிந்துகொள்ளலிலும் அதிக வேறுபாடுகள் இருந்த நிலையில் ஒவ்வொரு பிள்ளைக்கும் தனிக் கவனம் மிக அவசியம் என்று பட்டது. மேலும், இதுபோன்ற விர்ச்சுவல் வகுப்புகளில் நம் கையில் அதிக கன்ட்ரோல் இருக்காது; குழந்தைகளின் கவனத்தை ஈர்ப்பதும், தக்கவைத்துக் கொள்வதும்கூட பிரம்மப்பிரயத் தனமாக இருக்கும். ஆகவே வந்த விண்ணப்பங்களில் 10 குழந்தைகளை மட்டும் (10 மற்றும் 11 வயது) தேர்வு செய்து நிகழ்ச்சி நடத்த முடிவானது. மொத்தம் மூன்று நாள்கள்; ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரம் என்று பவர் பாயின்ட் பிரசன்டேஷனுடனும் வீடியோக்கள், க்விஸ் நிகழ்ச்சிகளுடனும் தயாரானது அமெரிக்கவாழ் இந்தியச் சிறார்களுக்கான நிதிக் கல்வி.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மில்லினர்ஸ் இன் தி மேக்கிங்? நோ ப்ளீஸ்!

இந்த நிகழ்ச்சிக்கான பாடத் திட்டத்தைத் தயாரிக்கும் முன்பாக அங்குள்ள சில பெற்றோர்களிடம் ஒரு கருத்துக் கணிப்பு எடுத்தேன். அமெரிக்க ஆங்கிலேயப் பெற்றோர் விஷயம் எப்படியோ, அமெரிக்கவாழ் இந்தியப் பெற்றோரைப் பொறுத்தவரை, தங்கள் பிள்ளைகள் எதை அறிந்துகொள்ள வேண்டும், எப்படி, எப்போது அறிந்துகொள்ள வேண்டும் என்பதில் மிகக் கவனமுடன் இயங்குகிறார்கள்.

அமெரிக்கக் குழந்தைகளுக்கு நிதிக் கல்வி! - ஆன்லைனில் வித்தியாசமான அனுபவம்

ஒரு வகுப்புக்கு ‘மில்லினர்ஸ் இன் தி மேக்கிங்’ (கோடீஸ்வரர்கள் உருவாகிறார்கள்) என்று தலைப்புக் கொடுப்பதாக நான் கூறியதும் பெற்றோர்களில் ஒருவர் “மில்லினர் என்ற வார்த்தை சிறுவர்கள் மனதில் வேண்டாத ஆசைகளை விளைவிக்கும். ப்ளீஸ், அதைத் தவிர்க்க முடியுமா..?’’ என்று கேட்டனர்.

அதே போல, ஹாரி பாட்டர் கதாபாத்திரத்தில் நடித்திருந்த டானியெல் ராட்க்ளிஃப் தன் 14 வயதில் ரூ.60 லட்சம் சம்பாதித்த விஷயத்தைப் பிள்ளைகளிடம் கூறுவதையும் தவிர்க்க விரும்பினார்கள். அது வீணாகப் பிள்ளைகள் மனதில் தாழ்வு மனப்பான்மையையும் நிராசையையும் உருவாக்கக்கூடும் என்று கருதினார்கள். ஆனால், பலரின் கனவு இலக்காகத் திகழும் அமெரிக்காவில் குடியேறி, கைநிறைய சம்பாதிப்பவர்கள்கூட ‘சிறு வயதில் நிதிக் கல்வி பெற்றிருந்தால் வாழ்க்கை இன்னும் எளிதாக, அர்த்தமுள்ளதாக இருந்திருக்கும்’ என்று எண்ணுகிறார்கள். அதனாலேயே அதைத் தங்கள் குழந்தைகளுக்குத் தர விரும்புகிறார்கள் என்பது தெளிவாகப் புரிந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பட்டை தீட்டப்படும் வைரங்கள்!

பெற்றோரின் இந்த எண்ணங்கள் விளைவித்த ஆச்சர்யத்தைவிட பிள்ளைகளின் அறிவாற்றலும் ஆர்வமும், ஒழுங்கும் அதிக ஆச்சர்யத்தைத் தந்தன. பிள்ளைகள் சரியான நேரத்துக்கு வந்தது மட்டுமல்ல, வந்து அமர்ந்தவுடன், ஹெட்ஃபோனை சரிசெய்து, கம்ப்யூட்டரில் ம்யூட் பட்டனை அழுத்தி தங்கள் தரப்பிலிருந்து எந்தவித இடையூறும் இல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டார்கள். கேள்விக்குப் பதில் தெரிந்தாலும், சொல்வதற்கு அவசரப் படாமல் தங்கள் முறை வரும் வரை கையை உயர்த்திப் பிடித்து, அமைதி காத்தார்கள். அனுமதி கிடைத்த பின் அன்ம்யூட் செய்து பேசினார்கள். முதல் நாள் க்ளாஸ் முடிவில் ‘என்ன கற்றுக்கொண்டீர்கள்?’ என்ற கேள்விக்கு அனைவரும் விதம்விதமாகப் பதில் கூறினர். ஒரு சிறுவன் ‘தேவையான பொருள்களைத்தான் பெற்றோரிடம் கேட்க வேண்டும்; ஆசைக்காக வாங்குவது தவறு என்கிறீர்களே? எங்கள் தேவைகளைப் பெற்றோர்களே பூர்த்தி செய்துவிடுகிறார்கள்; அப்புறம் நாங்கள் எதைக் கேட்பது?’ என்று கேட்டு அசர வைத்தான். நம் குழந்தைகள் ஒன்றுக்கு பத்துமுறை கேட்டால் மட்டுமே ஒரு பொருள் கிடைக்கும். அதனால்தானோ பொருள்களை வாங்குவதைத் தாண்டி அவர்களால் யோசிக்க முடிவதில்லையோ என்னவோ!

அமெரிக்கக் குழந்தைகளுக்கு நிதிக் கல்வி! - ஆன்லைனில் வித்தியாசமான அனுபவம்

இரண்டாம் நாள் சேமிப்பு பற்றி பேசும்போது, ‘யார் யார் எந்தெந்தக் காரணங்களுக்காகச் சேமிக்கப்போகிறீர்கள்?’ என்ற கேள்வி வந்தது. குழந்தைத்தனமான சில பதில்களுக்கு நடுவே மூன்று பிள்ளைகள் காலேஜ் படிப்புக்காகச் சேமிக்கப்போவதாகக் கூறியது, தங்கள் உயர்கல்விக்கு தாங்களே சேமிக்கும் அமெரிக்கக் கலாசாரம் அமெரிக்கவாழ் இந்தியரிடமும் உருவாவதைக்காட்டியது. ஒரு சிறுவன் மட்டும் ‘நான் எதிர்காலத்தில் இந்தியப் பிரதமராக எண்ணியுள்ளேன். தேர்தல் பிரசாரத்துக்கு அதிக பணம் தேவைப்படும்; அதற்காகவே சேமிப்பேன்’ என்று வித்தியாசமாகப் பதிலளித்து கலகலப்பூட்டினான்.

மூன்றாம் நாள் முடிவதற்குள் நண்பர்களின் பணப் பிரச்னைகளுக்குத் தீர்வு சொல்லும் அளவுக்கு பிள்ளைகள் முன்னேறிவிட்டார்கள். அவர்களில் பலருக்கும் பட்ஜெட், சேமிப்பு, வங்கிகள், கடன், வட்டி போன்ற பல வார்த்தைகளின் அர்த்தம் ஏற்கெனவே தெரிந்திருந்ததும் ஒரு காரணம். விலை உயர்ந்த ஷூ வாங்கலாமா அல்லது விலை உயர்ந்த ஸ்கூல் பேக் வாங்கலாமா என்ற கேள்விக்கு ஒரு சிறுமி ‘ஷூ சைஸ் சீக்கிரம் மாறிவிடும்; அதில் அதிக பணம் போடுவது வேஸ்ட்’ என்று பெரிய மனுஷிபோல் பேசியது, மற்றக் குழந்தைகளிடமும், எதையும் யோசித்து வாங்க வேண்டும் என்ற கருத்தை வேரூன்றச் செய்தது.

வகுப்பு முடிந்து இரண்டு நாள்களுக்குப் பின்னும் சில பிள்ளைகள் காலை 10 மணியானால் கம்ப்யூட்டரைத் திறந்து ஒருவேளை வகுப்பு நடக்கிறதோ என்று ஆவலாகப் பார்ப்பதாகப் பெற்றோர் மெயில் அனுப்பி இருந்தது குழந்தைகளுக்கு இதில் இருக்கும் ஆர்வத்தைக் காட்டியது.

இந்த வகுப்புகளிலிருந்து குழந்தைகள் கற்றுக் கொண்டது ஒருபுறம் இருந்தாலும், நான் கற்றுக்கொண்டது - நம் குழந்தைகள் இந்தியாவில் இருந்தாலும், அமெரிக்காவில் இருந்தாலும் அறிவாற்றலிலும் ஆர்வத்திலும் ஒரு படி முன்னேதான் இருக்கிறார்கள். இந்தக் குழந்தைகளுக்குப் பள்ளியில் படிக்கும்போதே நிதிக் கல்வியைத் தரத் தொடங்கினால், பிற்காலத்தில் நிதிச் சுதந்திரம் பெற்றவர்களாக இருப்பார்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism