Published:Updated:

அரசுப் பள்ளி மாணவர்களின் காகித நுண்ணோக்கி! #MyVikatan

அரசுப் பள்ளி மாணவர்கள்
அரசுப் பள்ளி மாணவர்கள்

மனு பிரகாஷ் அவர்களின் வழிமுறையைப் பின்பற்றி Foldscope எனும் காகித நுண்ணோக்கியை வடிவமைத்த அரசுப் பள்ளி மாணவர்கள்."

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

நுண்ணோக்கி, தொலைநோக்கி இவையெல்லாம் விலை அதிகமானவை. தொடக்கப்பள்ளி அளவில் எப்போதாவது அதை மாணவர்களுக்கு காட்சிப்படுத்தலாம் என்ற பொதுவான பார்வையே எனக்கும் இருந்தது. ஆனால், STEM செயல் திட்டத்தில் வெற்றி பெற்று OSF அமைப்பிடம் திருப்பூர், மேட்டுப்பாளையம் அரசுப் பள்ளிக்கென தொலைநோக்கி பரிசாகப் பெற்ற பின், தொலைநோக்கி என்பது எமது மாணவர்களின் அன்றாட வாழ்வில் ஓர் அங்கமாகவே மாறிவிட்டது. அடுத்ததாக நுண்ணோக்கி (Microscope) மூலமும் மாணவர்களைப் பார்க்கச் செய்தால், அவர்களின் உலகம் இன்னும் விரிவடையும் எனும் சிந்தனை எழுந்தது.

அரசுப் பள்ளி மாணவர்களின் காகித நுண்ணோக்கி! #MyVikatan

Microscope என்பது பத்திரமாக பீரோவில் பூட்டி வைக்கக்கூடிய பொருளாக அல்லாமல், Telescope போன்று அன்றாட வாழ்வில் மாணவர்கள் எளிதில் பயன்படுத்தக்கூடிய ஒன்றாக மாற வேண்டும் எனும் எண்ணம் எழுந்தது. அப்போதுதான் மனு பிரகாஷ் கண்டறிந்த மடிப்பு நோக்கியான Foldscope-ஐ மாணவர்களை வடிவமைக்கச் செய்யலாம் எனும் யோசனை ஏற்பட்டது!

மடிப்பு நோக்கி (Foldscope) என்பது ஒரு காணியல் நுண்ணோக்கி (Microscope) ஆகும். இது காகிதத் தாள்கள், லென்ஸ்கள் போன்ற விலை குறைந்த எளிய பொருள்களைக் கொண்டு உருவாக்கப்படுகிறது. இதை அமெரிக்காவின் ஸ்டான் ஃபோர்ட் (Stanford University) பயோ இன்ஜினியரிங் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றும் இந்தியரான மனுபிரகாஷ் மற்றும் அவரின் PhD மாணவரான ஜிம் ஆகியோர் இணைந்து கண்டுபிடித்தனர். இது மிகவும் மலிவான விலையில் (1 அமெரிக்க டாலர்) உருவாக்கப்பட்ட நுண்ணோக்கி ஆகும். அறிவியலை எளிமைப்படுத்தும், மலிவானதாக்கும் எளிய அறிவியல் (Frugal Science) என்னும் இயக்கத்தின் ஒரு பகுதியாக இக்கண்டுபிடிப்பு உள்ளது.

அரசுப் பள்ளி மாணவர்களின் காகித நுண்ணோக்கி! #MyVikatan

துளையிடப்பட்ட அட்டைக்கற்றை, கோளஆடி, ஒளிசிந்தும் இருமைவாய், ஒளிப்பரவலாக்கும் அமைப்பு, கண்ணாடி வில்லை ஆகியவற்றை ஒருங்கிணைத்து மடிப்புநோக்கி உருவாக்கப்படுகிறது. 8 கிராம் எடையுள்ள ஒரு மடிப்பு நோக்கி 140 மடங்கு முதல் 2,000 மடங்கு வரை உருப்பெருக்குகிறது. ஒரு காந்தமும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ளதால் மடிப்புநோக்கியை அலைபேசி கருவியுடன்கூட ஒட்டவைத்துக்கொள்ள முடியும்.

துளையிடப்பட்ட அட்டைக்கற்றை, கோளஆடி, ஒளிசிந்தும் இருமைவாய், ஒளிப்பரவலாக்கும் அமைப்பு, கண்ணாடி வில்லை ஆகியவற்றை ஒருங்கிணைத்து மடிப்புநோக்கி உருவாக்கப்படுகிறது. 8 கிராம் எடையுள்ள ஒரு மடிப்பு நோக்கி 140 மடங்கு முதல் 2,000 மடங்கு வரை உருப்பெருக்குகிறது. ஒரு காந்தமும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ளதால் மடிப்புநோக்கியை அலைபேசி கருவியுடன்கூட ஒட்டவைத்துக்கொள்ள முடியும். மடிப்பு நோக்கியைக் கொண்டு Leishmania donovani, Escherichia coli போன்ற ஒட்டுண்ணிகளைக்கூடக் காண முடியும். ஒவ்வொரு தனிமனிதனுக்கும் ஒரு நுண்ணோக்கி என்பது Foldscope-ஐ கண்டறிந்த மனு பிரகாஷ் அவர்களின் லட்சியம்.

அரசுப் பள்ளி மாணவர்களின் காகித நுண்ணோக்கி! #MyVikatan

என்னுடைய ஒவ்வொரு மாணவனும் கையில் ஒரு நுண்ணோக்கியை வைத்திருக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு. அதன் ஒரு பகுதியாக ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் இருவர் மனுபிரகாஷ் அவர்களின் வழிமுறையைப் பின்பற்றி Foldscope எனும் காகித நுண்ணோக்கியை வடிவமைத்துள்ளனர். Foldscope பற்றிக் கூறி நாம் அதைச் செய்யலாமா? என்றதுமே மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் அதைப் பற்றி கேட்க ஆரம்பித்துவிட்டனர். இதைத் தயாரிக்கும் வழிமுறைகள் மற்றும் தயாரிக்கத் தேவையான பொருள்கள் ஆகியவற்றை மட்டுமே நான் வழங்கினேன். மாணவர்கள் இருவர் மிகுந்த ஆர்வத்துடன் இதைச் செய்து முடித்துள்ளனர். முயன்று தவறி கற்றல் என்பது உண்மையிலேயே மிகுந்த பயன் அளிக்கக்கூடியதுதான் இப்போதைக்கு ஒரு Foldscope மட்டுமே செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாணவனுக்கும் ஒவ்வொரு நுண்ணோக்கி என்னும் இலக்கை நோக்கி பயணிக்கிறோம்.

- அகன்சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு