Published:Updated:

`நியமித்த IIM இயக்குநர் தகுதியற்றவர்தான்!' - உண்மையை ஒப்புக்கொண்ட மத்திய அரசு

IIM-Rohtak

இந்த ஆண்டு பிப்ரவரி 9-ம் தேதி, அவர் தனது ஐந்தாண்டு பதவிக் காலத்தை முடித்தவுடன், தனது கல்வி தகுதி குறித்த பிரமாணப் பத்திரத்தை வழங்குவதாக உறுதியளித்து கல்வி அமைச்சகத்துக்கு கடிதம் எழுதினார்.

`நியமித்த IIM இயக்குநர் தகுதியற்றவர்தான்!' - உண்மையை ஒப்புக்கொண்ட மத்திய அரசு

இந்த ஆண்டு பிப்ரவரி 9-ம் தேதி, அவர் தனது ஐந்தாண்டு பதவிக் காலத்தை முடித்தவுடன், தனது கல்வி தகுதி குறித்த பிரமாணப் பத்திரத்தை வழங்குவதாக உறுதியளித்து கல்வி அமைச்சகத்துக்கு கடிதம் எழுதினார்.

Published:Updated:
IIM-Rohtak

இந்தியாவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் (IIM-Rohtak), மேலாண்மைக் கல்வியில் முதன்மை நிறுவனமாகும். பொதுவாகவே ஓர் உயர்ந்த பதவியில் இருப்பவருக்கான கல்வி தகுதி அவசியம். ஆனால் இதன் இயக்குநராக பணிபுரியும் தீரஜ் ஷர்மாவிற்கு போதுமான கல்வி தகுதி இல்லை என்ற குற்றசாட்டு எழுந்துள்ளது.

 தீரஜ் ஷர்மா
தீரஜ் ஷர்மா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இது குறித்து திங்களன்று, கல்வி அமைச்சகமானது பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் ஒரு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தது. அதில் முதல் வகுப்பு இளங்கலை பட்டம் இயக்குநர் வேலைக்கு தகுதியாக கருதப்படும் நிலையில், தீரஜ் ஷர்மா இளங்கலை படிப்பில் இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். ஆனாலும் அவர் அவர் ஐஐஎம்-இன் இயக்குநராக நியமிக்கப்பட்டார் என குறிப்பிட்டுள்ளது. பல மறுப்பிற்கு பிறகு மத்திய அரசு, தான் நியமித்த `ஐஐஎம் இயக்குநர் குறைந்தபட்ச கல்வித் தகுதியை பூர்த்தி செய்யவில்லை' என்று நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த ஆண்டு பிப்ரவரி 9-ம் தேதி, அவர் தனது ஐந்தாண்டு பதவிக் காலத்தை முடித்தவுடன், தனது கல்வி தகுதி குறித்த பிரமாணப் பத்திரத்தை வழங்குவதாக உறுதியளித்து கல்வி அமைச்சகத்துக்கு கடிதம் எழுதினார். அதில் 1997-ல் டெல்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டமும், 1999-ல் பி.ஆர் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் மற்றும் 2006-ல் லூசியானா டெக் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்று, ஏழு வருடங்கள் ஒரு புகழ்பெற்ற நிறுவனத்தில் முழு நேரப் பேராசிரியராகப் பணியாற்றியதாக குறிப்பிட்டு இருந்தார்.

IIM-Rohtak
IIM-Rohtak

ஆனால் மூன்று முறை கடிதம் அனுப்பி தன்னுடைய இளங்கலை பட்டத்தை அமைச்சகம் சமர்ப்பிக்க சொல்லியும் அவர் வழங்கவில்லை. நிலைமை இப்படி இருக்க, புதிய திருப்பமாக, ஐஐஎம் சட்டத்தின் கீழ் இந்த ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி அன்று இன்ஸ்டிட்யூட்டின் போர்டு ஆஃப் கவர்னர்ஸில் (BoG) ஷர்மா இரண்டாவது முறையாக மீண்டும் நியமிக்கப்பட்டார்.

ஷர்மா எவ்வாறு நியமிக்கப்பட்டார், இதன் பின்னணி என்ன என்பது குறித்து அமைச்சகம் இப்போது விசாரித்து வருகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism