Published:Updated:

`காந்தி எப்படி தற்கொலை செய்துகொண்டார்?' - சர்ச்சையான குஜராத் பள்ளியின் கேள்வி

காந்தி
News
காந்தி

சட்டவிரோத மதுபானம் குறித்த மற்றொரு கேள்வியும் குஜராத் கல்வி அதிகாரிகளை கோபப்படுத்தியுள்ளது

Published:Updated:

`காந்தி எப்படி தற்கொலை செய்துகொண்டார்?' - சர்ச்சையான குஜராத் பள்ளியின் கேள்வி

சட்டவிரோத மதுபானம் குறித்த மற்றொரு கேள்வியும் குஜராத் கல்வி அதிகாரிகளை கோபப்படுத்தியுள்ளது

காந்தி
News
காந்தி

குஜராத் மாநிலத்தில் பள்ளிமாணவர்களிடையே தேர்வின்போது கேட்கப்பட்டிருக்கும் கேள்வி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குஜராத்தில், `சுவலாம் சஹாலா விகாஸ் சங்குல்’ என்ற அமைப்பின் கீழ் இயங்கிவரும் பள்ளிகளில் இன்டர்னல் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. அதில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இன்டர்னல் தேர்வு நடைபெற்றுள்ளது. இதில், `காந்தி எப்படி தற்கொலை செய்துகொண்டார்?’ என்ற கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, இந்தத் தேர்வில் சட்டவிரோத மதுபானம் குறித்த மற்றொரு கேள்வியும் குஜராத் கல்வி அதிகாரிகளை கோபப்படுத்தியுள்ளது.

 தேர்வு
தேர்வு

சுஃபாலம் ஷாலா விகாஸ் சங்குல் என்பது காந்திநகரில் அரசு மானியங்களைப் பெறும் சில சுயநிதிப் பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் அமைப்பாகும். அதேபோல, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வில், `உங்கள் பகுதியில் மதுபானங்களின் விற்பனை அதிகரித்து வருவது குறித்தும், கள்ளச்சாராய விற்பனை குறித்து புகார் கடிதம் ஒன்றை காவல்துறை மேலதிகாரிக்கு எழுதவும்” என்று கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. இது குஜராத் மாநில கல்வி அதிகாரிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக காந்திநகர் மாவட்ட கல்வி அதிகாரி பாரத் வதேர் பிடிஐக்கு அளித்த பேட்டியில், ``அந்தப் பள்ளிகளில் சனிக்கிழமை நடந்த இன்டர்னல் தேர்வில் மோசமான வினாக்கள் கேட்கப்படிருக்கின்றன. இந்த கேள்விகள் ஏற்றுக்கொள்ளமுடியாதவை. இதுதொடர்பான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தேர்வு
தேர்வு

அறிக்கை கிடைக்கப்பெற்றதும், நிச்சயம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த கேள்வித்தாள், `சுவலாம் சஹாலா விகாஸ் சங்குல்’ அமைப்பின் நிர்வாகத்தினர் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கும் மாநில கல்வித்துறைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்று அவர் விளக்கமளித்துள்ளார்.