Published:Updated:

தாம்பத்யம்: ஃபோர்ப்ளே போலவே ஆஃப்டர்ப்ளேயும் ஏன் அவசியம்?! |#VisualStory

hug ( pixabay )

தாம்பத்யம்: ஃபோர்ப்ளே போலவே ஆஃப்டர்ப்ளேயும் ஏன் அவசியம்?! I #VisualStory

pixabay

தாம்பத்ய உறவுக்கு முந்தைய ஃபோர்ப்ளே பலரும் அறிந்தது, பலருக்கும் பிடித்தமானது. ஆனால், உறவுக்குப் பிந்தைய ஆஃப்டர்ப்ளேயும் (Afterplay) அவசியம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
தாம்பத்யம்: ஃபோர்ப்ளே போலவே ஆஃப்டர்ப்ளேயும் ஏன் அவசியம்?! |#VisualStory
pixabay

உறவுக்கு முந்தைய விளையாட்டுகள்போல உறவுக்குப் பிந்தைய விளையாட்டுகளும் செக்ஸில் இருக்க வேண்டும். அப்படியிருந்தால்தான் தாம்பத்தியம் ருசிக்கும். பொதுவாக, உறவுக்குப் பின்னான அணைப்பை வைத்தே, அவர்கள் புதிதாகத் திருமணமானவர்களா, திருமணமாகிப் பல வருடங்கள் கடந்துவிட்டனவா என்பதைக் கண்டறிந்து விடலாம்.

Couple
Couple
Photo by Womanizer Toys on Unsplash

அதாவது, உறவு முடிந்தபிறகு அணைத்தபடியே படுத்துக்கிடந்தால் அவர்கள் புதிதாகத் திருமணமானவர்கள். உறவு முடிந்தபிறகு மனைவிக்கு முதுகைக் காட்டியபடி கணவன் தூங்க, மனைவியோ தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தால், திருமணமாகி சில பல வருடங்கள் கடந்தவர்கள்.

couple
couple
pixabay

விந்து முந்துதல் போலவே உலகளவில் ஆண்களுக்கு இருக்கிற இன்னொரு பிரச்னை மனைவி உச்சக்கட்டம் அடைந்துவிட்டாளா, இல்லையா என்பதை எப்படிக் கண்டறிவது என்பதுதான்.

தாம்பத்யம்: ஃபோர்ப்ளே போலவே ஆஃப்டர்ப்ளேயும் ஏன் அவசியம்?! |#VisualStory
pixabay

பெரும்பான்மையான ஆண்கள் உறவு முடிந்ததும் தூங்க ஆரம்பித்துவிடுவார்கள். பெண்களோ, இதுல எனக்கு சந்தோஷம் கிடைச்சுதா, இல்லையா என்ற யோசனையுடன் தூக்கம் வராமல் தவித்துக் கொண்டிருப்பார்கள்.

Confused couple
Confused couple
Pixabay

ஒருவேளை மனைவியிடம், `உச்சகட்டம் அடைந்தாயா?’ என்று கேட்டு, அதற்கு அவள் இல்லையென்று சொல்லிவிட்டால், என்ன செய்வது என்கிற பயத்திலேயே பல ஆண்கள் இந்தக் கேள்வியைக் கேட்க மாட்டார்கள்.

தாம்பத்யம்: ஃபோர்ப்ளே போலவே ஆஃப்டர்ப்ளேயும் ஏன் அவசியம்?! |#VisualStory
pixabay

இன்னொரு பக்கம், பெண்களில் பலரும் உச்சகட்டம் என்றால் என்ன என்பதே தெரியாமல் `சந்தோஷமா இருந்தேன்' என்று சொல்லிடுவார்கள். சிலர் கணவன் மனம் நோகக்கூடாது என ஆர்கஸம் அடைந்துவிட்டதாகச் சொல்வார்கள். இப்படிப்பட்ட தம்பதிகளுக்கான தீர்வுதான்... ஆஃப்டர்ப்ளே.

தாம்பத்யம்: ஃபோர்ப்ளே போலவே ஆஃப்டர்ப்ளேயும் ஏன் அவசியம்?! |#VisualStory
pixabay

இதுவும் ஃபோர்ப்ளே மாதிரிதான். ஒருவேளை ஆண்களுக்கு விந்து முந்துதல் பிரச்னை இருந்து, அதனால் மனைவி உச்சகட்டம் அடையவில்லையெனில், உறவு முடிந்தபிறகும் தொடுதல், அணைத்தல், முத்தமிடுதல் என்று இருந்தால், மனைவி ஆர்கஸம் அடைய வாய்ப்புகள் அதிகம்.

தாம்பத்யம்: ஃபோர்ப்ளே போலவே ஆஃப்டர்ப்ளேயும் ஏன் அவசியம்?! |#VisualStory
pixabay

முடிந்தால் உறவுக்குப் பிறகு இருவரும் சேர்ந்து குளிக்கலாம். அது இன்னமும் நெருக்கத்தை ஏற்படுத்தும். கூடவே மனைவியைப் பலமுறை உச்சகட்டத்தை அடைய வைக்கவும் செய்யும்.

love couple
love couple
pixabay

ஒருவேளை கணவன் - மனைவி இருவரும் ஆர்கஸமடைந்திருந்தாலும்கூட ஆஃப்டர்ப்ளே செய்வது அன்பை அதிகரிக்கும்.