Published:Updated:

உக்ரைனிலிருந்து திரும்பும் மருத்துவ மாணவர்கள்; அவர்கள் எதிர்காலம் இனி என்னாகும்?

Indian students from ukraine ( AP Photo/Altaf Qadri )

இந்த மருத்துவ மாணவர்கள் மீண்டும் அங்கே சென்று படிப்பதற்கான சாத்தியம் வாய்க்குமா, மருத்துவக் கல்லூரிகள் எல்லாம் இயங்கும் நிலையில் இருக்குமா, மறுபடியும் மாணவர்கள் அந்த நாட்டிற்குள் நுழைவதற்கான சட்டபூர்வ நடவடிக்கைகள் எப்படியிருக்கும் என்பது பற்றிய கவலைகள் எழுந்துள்ளன.

உக்ரைனிலிருந்து திரும்பும் மருத்துவ மாணவர்கள்; அவர்கள் எதிர்காலம் இனி என்னாகும்?

இந்த மருத்துவ மாணவர்கள் மீண்டும் அங்கே சென்று படிப்பதற்கான சாத்தியம் வாய்க்குமா, மருத்துவக் கல்லூரிகள் எல்லாம் இயங்கும் நிலையில் இருக்குமா, மறுபடியும் மாணவர்கள் அந்த நாட்டிற்குள் நுழைவதற்கான சட்டபூர்வ நடவடிக்கைகள் எப்படியிருக்கும் என்பது பற்றிய கவலைகள் எழுந்துள்ளன.

Published:Updated:
Indian students from ukraine ( AP Photo/Altaf Qadri )

ரஷ்யாவின் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கும் உக்ரைனில் சுமார் 20,000 இந்திய மாணவர்கள் சிக்கிக்கொண்டுள்ளனர். இவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் சுமார் 5,000 பேர். சில நூறு மாணவர்கள் இந்தியாவுக்குத் திரும்பினாலும், இன்னும் பல மாணவர்கள் அங்கே சிக்கிக்கொண்டுள்ளனர்.

Indian students from ukraine
Indian students from ukraine
AP Photo/Rajanish Kakade

இவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்து வரப்படுவார்கள் என்று நம்புவோம். இந்நிலையில் அங்கே மருத்துவம் படித்து வந்த மாணவர்கள் இந்தியாவுக்குத் திரும்பினால் இவர்களின் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வியெழுந்துள்ளது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உக்ரைனின் வளங்கள், கட்டடங்கள் என அனைத்தையும் குண்டுகள் வீசி நிர்மூலமாக்கி வருகிறது ரஷ்யா. இந்நிலையில் இந்த மருத்துவ மாணவர்கள் மீண்டும் அங்கே சென்று படிப்பதற்கான சாத்தியம் வாய்க்குமா, மருத்துவக் கல்லூரிகள் எல்லாம் இயங்கும் நிலையில் இருக்குமா, மறுபடியும் மாணவர்கள் அந்த நாட்டிற்குள் நுழைவதற்கான சட்டபூர்வ நடவடிக்கைகள் எப்படியிருக்கும் என்பது பற்றிய கவலைகளும் எழுந்துள்ளன. இந்நிலையில் உக்ரைனில் படிக்கும் மாணவர்களை இந்திய மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து படிக்க வைக்க வழிவகை செய்ய வேண்டும் என்ற குரலும் எழுந்துள்ளது.

Ukraine
Ukraine
Niall Carson/PA via AP

இது தொடர்பாக மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வே.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``இந்தியா முழுவதும் 575 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. ஒரு கல்லூரிக்கு சுமார் 25 பேரை சேர்த்தால் கூட 15,000 மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு கிடைக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த மாணவர்களுக்கு இந்தியாவில் படிக்க இடம் வழங்காவிட்டால் அவர்களது படிப்பு வீணாகி எதிர்காலமே சூன்யமாகிவிடும். இந்த இக்கட்டான சூழலில் நமது மாணவர்களுக்கு ஒட்டுமொத்த இந்தியாவும் எல்லாவிதங்களிலும் உதவிகரமாக இருக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

பொது மருத்துவர் அருணாசலம்
பொது மருத்துவர் அருணாசலம்

உக்ரைனில் தற்போதைய நிலையில் மருத்துவ மாணவர்களின் எதிர்காலம் பற்றி ரஷ்ய மருத்துவ சங்கத்தின் தலைவரும் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துருமான அருணாசலத்திடம் கேட்டோம்.

``மருத்துவப் படிப்பைப் பொறுத்தவரை எங்குமே இணைய வழி வகுப்புகள் கிடையாது. நேரடி வகுப்புகள் மட்டும்தான் நடத்துவார்கள். நேரடி வகுப்புகளின் நேரத்தை வேண்டுமானால் குறைத்துக்கொள்வார்கள்.

காரணம், மருத்துவமனையில் மாணவர்கள் நோயாளிகளை இத்தனை மணி நேரங்கள் பரமாரிக்க, சிகிச்சையளிக்க வேண்டும் என்ற கட்டாயம் பாடத்திட்டத்தில் இருக்கிறது.

ஆக எத்தனை நாள் ஆனாலும் இந்த மாணவர்கள் மீண்டும் உக்ரைனுக்கு சென்றுதான் படிப்பைத் தொடர முடியும். என்னைப் பொறுத்தவரை இது ஒரு குறுகியகால பிரச்னையாகத்தான் இருக்கும். தற்போது இந்த மாணவர்களின் வருகைக்கான செலவை அரசு ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், இவர்களைத் திருப்பி அனுப்புவதற்கான செலவுகளை ஏற்பாடு செய்வதற்கு மாணவர்களின் பெற்றோருக்குத்தான் சிரமம் ஏற்படும். நான் ரஷ்யாவில் படித்தபோது எங்களுக்கு ரஷ்ய மொழியைக் கற்றுக் கொடுத்தார்கள். அதுமட்டுமன்றி கம்யூனிசத்தையும் கற்றுத் தந்தார்கள்.

Ukraine
Ukraine
AP Photo/Felipe Dana

இவ்வாறு கற்றுக் கொடுத்ததால் நம் நாட்டிலிருந்து படிக்கச் சென்ற மாணவர்களில் பலர் இன்று புரட்சியாளர்களாகவும், சமூக ஆர்வலர்களாகவும், அமைச்சர்களாகவும், பல அரசியல் கட்சிகளையும் உருவாக்கியுள்ளார்கள். எக்காரணம் கொண்டும் உக்ரைனில் இருந்து திரும்பியிருக்கும் மருத்துவ மாணவர்கள் வேறு எந்தப் படிப்பையும் தேர்வு செய்யவேண்டாம். மீண்டும் அங்கேயே சென்று இவர்களது கல்வியைத் தொடரலாம்" என்றார்.

இதுகுறித்து கல்வியாளர் நெடுஞ்செழியனிடம் கேட்டபோது, ``தற்போது ரஷ்யா எந்த மாதிரியான கொள்கையைக் கொண்டு வரும் என்பது தெரியாது. இதை எவ்வாறு சரி செய்யப்போகிறார்கள் என்று எதுவுமே சரிவரத் தெரியாத நிலையில் மாணவர்கள் நேரத்தை வீணாக்காமல் ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டியது அவசியமாகும். இந்த மாணவர்கள் நமது நாட்டில் அவர்களது மருத்துவப் படிப்பைத் தொடர்வதற்கான வாய்ப்பும் மிக மிகக் குறைவு. ஆகையால் மாணவர்கள் ஒரு நல்ல முடிவை எடுத்து வேறு வழியைப் பார்ப்பது நல்லது.

கல்வியாளர் நெடுஞ்செழியன்
கல்வியாளர் நெடுஞ்செழியன்

இதுபோன்ற சம்பவங்கள் பல்வேறு நாடுகளில் நிகழ்ந்திருக்கும் நிலையில், பெற்றோர்கள் மருத்துவப்படிப்பு என்பதற்காகவே பிள்ளைகளை வேறு நாடுகளுக்கு அனுப்பிப் படிக்க வைக்கிறார்கள். மருத்துவப் படிப்பு மட்டும்தான் வாழ்க்கை கிடையாது, அதைத் தாண்டி எத்தனையோ வாய்ப்புகள் இருக்கின்றன. முதலில் மாணவர்களுக்கு அவர்களது ஆரோக்கியமும் பாதுகாப்பும்தான் முக்கியம். அதன்பிறகுதான் கல்வியும் மற்றவை எல்லாமும்" என்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism