Published:Updated:

சென்னை ஐஐடி-யில் சாதியப் பாகுபாடா... என்ன நடக்கிறது உள்ளே?! - அதிரவைக்கும் தகவல்கள்!

சென்னை ஐஐடி-யில் மாணவர்களுக்கு இடையே ஒரு பிரிவு இருக்கிறது. ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான ஒரு மனநிலை இருப்பதே இந்தப் பிரிவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது ஐஐடி. ஐஐடி-களில், கடந்த சில ஆண்டுகளாக டாப் ரேங்க்கிங்கில் இருப்பது ஐஐடி மெட்ராஸ். அப்படிப்பட்ட ஒரு முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனத்தில் சாதியப் பாகுபாடு இருப்பதாக, நீண்டநாள்களாகச் சர்ச்சை தொடர்ந்துவருகிறது. தற்போது உதவிப் பேராசிரியர் ஒருவரின் கடிதத்தால் அந்தச் சர்ச்சை மீண்டும் வெடித்திருக்கிறது.

ராஜினாமா கடிதம்
ராஜினாமா கடிதம்

மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் துறையைச் சேர்ந்த விபின் என்ற அந்த உதவிப் பேராசிரியர், தன்னுடைய ராஜினாமா கடிதத்தை ஐஐடி நிர்வாகத்துக்கு அனுப்பியிருக்கிறார். அந்தக் கடிதம் சக ஆசிரியர்களாலும் மாணவர்களாலும் வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது, ``2019 மார்ச் மாதம், நான் இங்கு பணிக்குச் சேர்ந்ததிலிருந்து, பல நேரங்களில் சாதியப் பாகுபாட்டை எதிர்கொண்டிருக்கிறேன். அதனால் ஐ.ஐ.டி-யிலிருந்து விலகும் முடிவை நான் எடுத்திருக்கிறேன். எனக்கு மட்டுமல்ல, இன்னும் சிலரும் பாகுபாட்டைச் சந்தித்திருக்கின்றனர். ஹியூமானிட்டீஸ் துறையின் அதிகாரத்தில் இருக்கும் சில தனிநபர்கள் என்மீது இந்தப் பாகுபாட்டைக் காட்டினர் . எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி பிரிவு ஆசிரியர்களின் குறைகளைக் கேட்க தனிக்குழு அமைக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது’’ என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார் விபின்.

இந்தக் கடிதம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய அடுத்த நாளே, 22 வயது ஆராய்சி உதவியாளர் உன்னி கிருஷணன் என்ற இளைஞர், எரிந்தநிலையில ஐஐடி மெட்ராஸ் வளாகத்தில் கண்டெடுக்கப்பட்டிருக்கிறார். கேரளாவைச் சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானியின் மகனான உன்னி கிருஷ்ணன் மரணத்தில் மர்மம் இருந்தாலும், போலீஸ் தரப்பில் தற்கொலை என்றே கூறப்படுகிறது. உன்னி கிருஷ்ணன் தங்கியிருந்த அறையில், தற்கொலைக் கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டிருப்பதாகவும், அதில் மன அழுத்தம்தான் தனது முடிவுக்குக் காரணம் என உன்னி கிருஷ்ணன் எழுதியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

உதவிப் பேராசிரியர் விபின்
உதவிப் பேராசிரியர் விபின்

சாதி, மதப் பாகுபாடு, மன அழுத்தம், தற்கொலைகள்... ஐஐடி-க்கு எவ்வளவோ ஹைலைட்ஸ் இருந்தாலும், இந்த மூன்று விஷயங்கள் அடிக்கடி சர்ச்சையைக் கிளப்பிக்கொண்டேதான் இருக்கின்றன. ஐஐடி மெட்ராஸ் கேம்பஸில் அப்படி என்னதான் நடக்கிறது... சாதியப் பாகுபாடு இருக்கிறதா... என்ன பிரச்னை... அதிரவைக்கும் உண்மைத் தகவல்களை, கீழ்க்காணும் வீடியோவில் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு