Published:Updated:

புதிய சட்டக் கல்லூரிகள் தொடங்க 3 ஆண்டுகள் தடை! - பார்கவுன்சில் அறிவிப்பும் பின்னணியும்

பார் கவுன்சில்
News
பார் கவுன்சில்

நாட்டில் சிறப்பான சட்ட சேவை ஆற்றுவதற்குப் போதுமான அளவு சட்டக் கல்லூரிகள் உள்ளதாகவும், அவற்றின் கல்வி மற்றும் கற்பிக்கும் தரத்தை மேம்படுத்துவதே இன்றைய அவசரத் தேவையாக உள்ளதாக பார் கவுன்சில் தெரிவித்துள்ளது.

பார் கவுன்சில் ஆஃப் இந்தியா (BCI), நாட்டில் மூன்று ஆண்டுகளுக்கு புதிதாக சட்டக் கல்லூரிகள் தொடங்குவதற்கான அனுமதி வழங்குவதை நிறுத்திவைப்பதாக அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பில், சட்டக் கல்லூரிகள் காளான்கள் போல வளர்ந்துவருவதை முக்கிய காரணமாக தெரிவித்துள்ளது. இதற்கு யுஜிசி (UGC) மற்றும் மாநில அரசுகளின் அலட்சியமே காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சட்டப் படிப்பு
சட்டப் படிப்பு

எனினும், இந்தத் தடை தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள் இல்லாத மாநிலங்களில் அவை தொடங்குவதற்கும், பார் கவுன்சில் ஆஃப் இந்தியா (BCI) மாதிரி சட்டக் கல்வி நிறுவனங்கள் தொடங்குவதற்கும் பொருந்தாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு கவுன்சில் ஏற்கெனவே இயங்கிக்கொண்டிருக்கும் கல்லூரிகளின் தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப் போவதாக தெரிவித்துள்ளது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மேலும், இதேபோன்ற அறிவிப்பு 2016-ல் கொடுக்கப்பட்டதாகவும் அதை மாநில அரசுகளும் பல்கலைகழகங்களும் மதிக்காமல் முறையே 'தடையில்லா சான்றிதழ்களும்', ஒப்புதல்களும் வழங்கியுள்ளதை சுட்டிக்காட்டி நியாயமான முறையில் செயல்படுமாறு அறிவுறுத்தியுள்ளது. அதைத்தொடர்ந்து, அடுத்த 4 மாதங்களுக்குள் காலியாக உள்ள சட்ட ஆசிரியர் பணியிடங்களை நிரப்புமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.

பார் கவுன்சில் அறிவிப்பு
பார் கவுன்சில் அறிவிப்பு

மேலும், நாட்டில் சிறப்பான சட்ட சேவை ஆற்றுவதற்கு போதுமான அளவு சட்டக் கல்லூரிகள் உள்ளதாகவும், அவற்றின் கல்வி மற்றும் கற்பிக்கும் தரத்தை மேம்படுத்துவதே இன்றைய அவசரத் தேவையாக உள்ளதாக தெரிவித்துள்ளது. இதைச் செயல்முறைப்படுத்த சட்ட ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதற்கான காரணம், சட்ட இளங்கலை பட்டம் (LLB) மட்டுமே தங்களின் கட்டுப்பாட்டின்கீழ் வருவதாகவும் முதுகலை மற்றும் முனைவர் பட்டங்கள் தங்களின் கட்டுப்பாட்டின்கீழ் வராததே என பார் கவுன்சில் குற்றம்சாட்டியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுகுறித்து பார் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் (BCI) இணைத்தலைவர் மூத்த வழக்கறிஞர் பிரபாகரனிடம் பேசினோம். ``இது இந்தியாவில் சட்டக்கல்வி அமைப்புமுறையை வலுப்படுத்தும் முக்கிய நோக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை. இந்த முடிவு நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்பேரில் எடுக்கப்பட்டது, இதனால் இந்தியாவில் தேவைக்கு அதிகமாக வளர்ந்துவரும் சட்டக்கல்லூரிகளை கட்டுக்குள் கொண்டு வரலாம்.

வழக்கறிஞர் பிரபாகரன்
வழக்கறிஞர் பிரபாகரன்

இந்த மூன்று ஆண்டுகள் கல்வி கற்பிக்கும் தரத்தை உயர்த்தும் வகையில் மாணவர்களுக்கு கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறைகள் மற்றும் ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சிகள் போன்றவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது'' என்றார். கடந்தமுறை போல புதிய சட்டக்கல்லூரிகள் தொடங்க நீதிமன்றம் சென்று அனுமதி பெற வாய்ப்புள்ளதா என்று கேட்டபொழுது, அதற்கான வாய்ப்பும் உள்ளதாகவே அவர் பதிலளித்தார்.