Published:Updated:

‘‘எம்.பி.ஏ படிப்பில் டெக்னாலஜியைக் கொண்டு வர வேண்டும்!’’ க்ரியா பல்கலைக்கழகத்தின் ராம்குமார்

 ராம்குமார்
பிரீமியம் ஸ்டோரி
ராம்குமார்

E D U C A T I O N

‘‘எம்.பி.ஏ படிப்பில் டெக்னாலஜியைக் கொண்டு வர வேண்டும்!’’ க்ரியா பல்கலைக்கழகத்தின் ராம்குமார்

E D U C A T I O N

Published:Updated:
 ராம்குமார்
பிரீமியம் ஸ்டோரி
ராம்குமார்

காக்னிசென்ட் நிறுவனத்தின் இந்தியப் பிரிவின் தலைவ ராக இருந்த ராம்குமார், கடந்த ஜூலை மாதம் பொறுப்பிலிருந்து விலகினார். அடுத்த சில மாதங்களில் க்ரியா (KREA) பல்கலைக்கழகத்தில் புரோ வைஸ் சான்ஸ்லர் பொறுப்பை ஏற்றுக்் கொண்டார். சென்னை அருகே  சிட்டியில் உள்ள க்ரியா பல்கலைக் கழகத்தில் நாம் அவரைச் சந்தித்தோம்.

 ராம்குமார்
ராம்குமார்

தற்போதைய கல்வி முறையை எப்படிப் பார்க்கிறீர்கள்..?

‘‘இணைய வழியில் கல்வி கற்பதில் சில நடைமுறைச் சிக்கல் இருப்பது உண்மைதான். ஆனால், இந்த சிக்கலைத் தாண்டிதான் நாம் அடுத்த கட்டத்துக்குச் செல்ல வேண்டும். தற்போது இணைய வழியில் கற்க முடியும் என்பதை நாம் உணரத் தொடங்கியிருக்கிறோம். இதற்கு முன்பு அது குறித்த நிறைய கேள்விகள் இருந்தன. வரும் காலத்தில் இணையம் மற்றும் நேரடி வகுப்புகள் இணைந்தே கல்வி முறை இருக்கும்.

தற்போது முக்கியமான பிரச்னையே எலெக்ட்ரானிக் சாதனங்கள்தான். கோவிட் காலத்தில் பல டெக்னாலஜி நிறுவனங்கள் பல ஆயிரக்கணக்கான லேப்டாப்களை வாங்கின. அப்போது அலுவலகத்தில் இருந்த பல ஆயிரம் டெக்ஸ்டாப்கள் பயனற்றவையாக மாறின. இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் வசம் உள்ள டெக்ஸ்டாப் கம்யூட்டர் களை சமூகத்துக்குக் கொடையாக வழங்க முடியும். இப்படி வழங்கினால் பல ஆயிரம் மாணவர்களுக்குக் கல்வி கிடைக்கும். டெக்னாலஜி கிடைக்கும்போது அனைவரும் சமம் என்னும் உணர்வு படிப்பவர்களுக்கு வரும். தொழில்நுட்ப நிறுவனங்கள் இது குறித்து சிந்திக்கலாம். இல்லை யெனில், இவை இ-வேஸ்டாக மாறும் வாய்ப்பிருக்கிறது.’’

இணைய வழி மூலமே தரமான கல்வி கிடைத்தால், மாணவர்கள் ஏன் உங்கள் பல்கலைக்கழகத்துக்கு வந்து படிக்க வேண்டும்?

‘‘மாணவர்கள் படிக்கும் பாடங்கள் ஒன்றாக இருந்தாலும், அந்தப் பாடத்தை யார் எடுக்கிறார்கள். வளாகத் தேர்வுக்கு யார் வருகிறார்கள் என்பதெல்லாம் கல்லூரியால் மட்டுமே கொடுக்க முடியும். கடந்த வாரத்தில் இந்தியாவின் பெரிய நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி எங்கள் மாணவர் களிடத்தில் உரையாடியபோது, இது போன்ற விஷயங்களை கல்லூரியால் மட்டுமே வழங்க முடியும் என்றார். தவிர, எங்கள் மொத்த மாணவர்களின் எண்ணிக்கையில் 25% அளவுக்கு அமெரிக்க வங்கிகள் பணிக்கு எடுத்திருக்கின்றன. ஜேபி மார்கன், பேங்க் ஆஃப் அமெரிக்கா, வெல்ஸ் போர்கோ, சிட்டி உள்ளிட்ட வங்கிகள் எங்கள் மாணவர்களை பணிக்கு எடுக்கின்றன. அதனால் எங்கு படிக்கிறோம் என்பதும் முக்கிய மானதாகும்.’’

இந்தப் பல்கலைக்கழகத்தில் உங்களின் பங்களிப்பு எப்படி இருக்கும்?

‘‘தொழில்நுட்பத்துறை 1990-களில் வளரத் தொடங்கியது. ஆனால், நம் நாட்டில் அப்போது சாப்ட்வேர் இன்ஜினீயர்களே இல்லை. வெவ்வேறு டிகிரி படித்தவர்கள் வந்து ஐ.டி துறையைக் கட்டமைத் தார்கள். கிட்டத்தட்ட அப்படி ஒரு சூழல் தற்போது இருக்கிறது. எம்.பி.ஏ படிப்பவர்களுக்கு மேனேஜ்மென்ட், யுக்தி, நிதி உள்ளிட்ட விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டியது அவசியம் என்று அண்மைக் காலம் வரை நினைத்தோம்.

ஆனால், தற்போது எந்தத் துறை யில் வேண்டுமானாலும் நாம் வளர லாம். அந்தத் துறையில் முடிவெடுக்க டெக்னாலஜி குறித்துத் தெரிந்திருக்க வேண்டும். தொழிலில் முடிவெடுக் கவும் வளர்ச்சியைக் கொண்டு வரவும் டெக்னாலஜி முக்கியமாகத் தேவை. அதனால் எம்.பி.ஏ கல்லூரியில் டெக்னாலஜியை எப்படி ஒருங்கிணைக்க முடியும் என்பதில் என்னால் முக்கியப் பங்காற்ற முடியும் என நம்புகிறேன்."

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism