Published:Updated:

இந்தியாவின் இளம்வயது ஐ.ஐ.டி மாணவி - ஜார்கண்டைக் கலக்கும் ஜோதி பிரியதர்ஷி!

சு.சூர்யா கோமதி

இந்தியாவின் இளம் வயது ஐ.ஐ.டி மாணவி என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் ஜோதி பிரியதர்ஷி.

ஜோதி பிரியதர்ஷி
ஜோதி பிரியதர்ஷி ( shethepeople )

'படிப்புக்கு வயது ஒரு தடை இல்லை' எனச் சொல்ல கேட்டிருப்போம். அதற்கு தகுந்தாற் போல் 90 வயதில் கூட டிகிரி படிக்கும் வயதானவர்கள் பற்றிய தகவல்கள் சமீபத்தில் செய்திகள் ஆகின.

ஜோதி பிரியதர்ஷி
ஜோதி பிரியதர்ஷி
shethepeople

ஆனால் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுச் சிறுமி ஜோதி ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஐ.ஐ.டியில், சுரங்கம் மற்றும் அது தொடர்பான இயந்திரங்கள் சார்ந்த பொறியியல் படிப்பில் சேர்ந்து இந்தியாவின் இளம் வயது ஐ.ஐ.டி மாணவி என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார்.

உத்தர பிரதேசம் மாநிலம் ரேபரேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் குமார். ரேபரேலியில் உள்ள பள்ளியில் கணித ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். தன்னுடைய மகளைப் பள்ளியில் சேர்ப்பதற்கு முன்பாகவே வீட்டில் வைத்து பாடங்களை கற்பிக்கத் தொடங்கியிருக்கிறார்.

ஐ.ஐ.டி
ஐ.ஐ.டி

ரெண்டரை வயதில் ஜோதி கே.ஜி வகுப்பிற்குச் செல்ல தொடங்கும் போது, அந்தப் பாடங்கள் அனைத்தும் அவர் ஏற்கெனவே கற்றிருந்ததால், அடுத்த வகுப்பிற்கான பாடத்தைக் கற்பிக்க தொடங்கியிருக்கிறார்கள். இப்படி வயதிற்கு மீறிய பாடங்களை கற்க ஆரம்பித்த ஜோதி தன்னுடைய பத்தாம் வயதில் பத்தாம் வகுப்பு பாடங்களை படித்து முடித்து தேர்வு எழுதி வெற்றி பெற்றிருக்கிறார்.

2 ஆண்டுகளில் ஐஐடி-யிலிருந்து 2,400 பேர் டிராப்அவுட் - பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்தான் அதிகம்!

சமூகத்தில் நிறைய எதிர்ப்புகள் வந்தாலும் ஜோதியின் பெற்றோர்களும் அவர் படித்த பள்ளியும் அவருக்கு ஆதரவாக இருந்திருக்கிறார்கள். தன்னுடைய 13-வது வயதில் 89.5 சதவிகித மதிப்பெண்ணுடன் தன் பள்ளிப்படிப்பு முழுவதையும் முடித்த ஜோதிக்கு, உயர்கல்வியை ஐ.ஐ.டியில் தொடர வேண்டும் என்ற கனவு தோன்றியுள்ளது.

ஜே.இ.இ
ஜே.இ.இ

ஐ.ஐ.டி முதன்மைத்தேர்வான ஜே.இ.இக்கு தன்னுடைய வீட்டில் இருந்தே நூலகத்தின் உதவிகளுடன் தன்னை தயார்படுத்த தொடங்கிய ஜோதி, தன்னுடைய 15வது வயதில், ஐ.ஐ.டி நுழைவுத்தேர்வில் 342-வது ரேங்க் எடுத்து தேர்ச்சி பெற்று, ஜார்கண்ட் மாநிலத்தில் உயர்கல்வியைத் தொடங்கியிருக்கிறார்.

40 பேர் அடங்கிய அவரின் வகுப்பறையில் ஜோதி மட்டுமே 15 வயதுச் சிறுமி என்றாலும் தன்னுடைய கனவுகளுடன் சிறகு விரிக்கத் தொடங்கியிருக்கிறார். வாழ்த்துகள்.