Published:Updated:

"படிப்பு மட்டுமே எதிர்காலமல்ல..." ஐஐடி-யின் 3 விருதுகளைப் பெற்று சாதித்த கவிதா கோபால்!

ஐஐடி-யில் இருந்து மூன்று உயரிய விருதுகளைப் பெற்றுள்ளார், சென்னைப் பெண் கவிதா கோபால்.

கவிதா கோபால்.
கவிதா கோபால். ( facebook )

ஐஐடி-யில் சேர்ந்து படிப்பது என்பது நிறைய மாணவர்களுக்கு கனவாக இருக்கும். அத்தகைய கல்லூரியில் இருந்து மூன்று உயரிய விருதுகளைப் பெற்றுள்ளார், சென்னைப் பெண் கவிதா கோபால்.

Vikatan
கவிதா கோபால்
கவிதா கோபால்
face book

நேற்று, ஐஐடி வளாகத்தில் நடைபெற்ற 56-வது பட்டமளிப்பு விழாவில், 2015-19-ம் ஆண்டு வரை கணினி இளநிலை அறிவியல் பயிலும் மாணவியான கவிதா, 'கல்வியில் சிறந்து விளங்கும் மாணவி' என்ற ஜனாதிபதி விருது, பாரத ரத்னா விஸ்வேஸ்வரையா விருது, ரவிச்சந்திரன் நினைவுப் பரிசு என்ற மூன்று விருதுகளைப் பெற்றுள்ளார். இத்தனை வருட ஐஐடி வரலாற்றில், ஒரு பெண் மூன்று விருதுகளைப் பெறுவது இதுவே முதல் முறையாகும்.

இதுகுறித்து கவிதா கோபால் பேசியபோது, "என்னுடைய நான்கு வருட உழைப்புதான் இந்த மூன்று விருதுகளும். ஐஐடி என்பது எல்லோருக்கும் கனவாக இருக்கும். சிலர், அந்தக் கனவு நனவானதும் ஜாலியாக இருந்துவிடுகின்றனர். நான், அதில் மாறுபட்டு இருக்க நினைத்தேன். நான், கல்லூரியில் சேரும்போதே டாப்பராகத்தான் வெளியே வருவேன்னு முடிவெடுத்து படிக்க ஆரம்பிச்சேன்.

படிப்பு மட்டுமே எதிர்காலம்னு இருந்தது இல்லை. எங்க காலேஜ்ல நான் கூடைப்பந்து வீராங்கனையும்கூட.
கவிதா கோபால்

படிக்கும்போதே சிசி++, ஜாவா என கணினி மொழி சார்ந்த தெளிவான புரிதலோடு இருந்தேன். அதுக்காக, படிப்பு மட்டுமே எதிர்காலம்னு இருந்தது இல்ல. எங்க காலேஜ்ல நான் கூடைப்பந்து வீராங்கனையும்கூட. படிப்புக்கு தனியாக, என்னுடைய மற்ற செயல்பாடுகளுக்குத் தனியாகன்னு பிளான் பண்ணித்தான் என்னுடைய நேரத்தை செலவழிப்பேன். அதுதான் ஐஐடி வரலாற்றை மாற்றியமைக்க உதவுச்சு. படிப்பை ஒரு சுமையாக நினைக்காமல், எதிர்காலம்னு நினைச்சா எல்லோருக்கும் வெற்றி சுலபம்தான்.

இந்திய அளவில் கணினி துறையைத் தேர்ந்தெடுத்த மாணவிகளின் எண்ணிக்கை மிகமிகக் குறைவு. ஐஐடி-யில்கூட இதே நிலைதான். 60 பேர் கொண்ட எங்களோட வகுப்பில் 10 பேர்தான் பெண்கள் .

கவிதா
கவிதா
face book

இந்த நிலை மாற வேண்டும். நிறைய பெண்கள் கணிப்பொறி துறையைத் தேர்வுசெய்ய வேண்டும். பெண்களாகச் சேர்ந்து புதிய எதிர்காலம் படைப்போம்" என்று மகிழ்ச்சி பொங்கக் கூறினார்.

வாழ்த்துகள்!