Published:Updated:

``நீட் தேர்வை தடை பண்ணணும்; அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்கணும்!"- ஐ.நா-வில் முழங்கிய மதுரை மாணவி

மனித உரிமை மீறல்கள், பெண்கள் படும் துன்பங்கள், சாதிப்பாகுபாடுகள் பற்றிப் பேசினேன்.

பிரேமலதா
பிரேமலதா ( ஈ.ஜெ.நந்தகுமார் )

``அனைத்துத் தரப்பு மாணவர்களுக்கும் சமமான கல்வி கிடைக்க தடையாக இருக்கும் நுழைவுத் தேர்வுகளை தடை செய்ய வேண்டும்'' என்று ஐ.நா-வின் மனித உரிமை கவுன்சிலில் உரையாற்றி விட்டு வந்திருக்கிறார் கார்சேரி கிராமத்து மாணவி பிரேமலதா.

பிரேமலதா
பிரேமலதா
ஈ.ஜெ.நந்தகுமார்

மதுரை மாவட்டம், சக்கிமங்கலம் அருகே இருக்கும் மிகச்சிறிய கிராமம் கார்சேரி. லாரி டிரைவர் தமிழ்செல்வத்தின் மகள் பிரேமலதா. இளங்கலை படித்துள்ள இவர், ஐ.நா-வின் மனித உரிமை கவுசிலில் ஜெனிவாவில் தொடர்ந்து நடைபெறும் மாமன்றத்தில் பேசிவிட்டு வந்துள்ளது பலராலும் பேசப்பட்டு வருகிறது.

இதுபற்றி அவரிடம் பேசியபோது, ``பத்து வருடங்களுக்கு முன் இளமானூர் அரசு ஆதி திராவிடப்பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்றபோது அப்போது பாடமாக நடத்தப்பட்ட மனித உரிமைக் கல்வியை விரும்பிப் படித்தேன். அப்போது ஐ.நா சார்பில் கிராமப்புறப் பள்ளிகளில் மனித உரிமைக் கல்வி எந்தளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது பற்றி `ஏ பாத் டூ டிக்னிட்டி' என்ற ஆவணப்படம் எடுக்க வந்தார்கள்.

பிரேமலதா
பிரேமலதா
ஈ.ஜெ.நந்தகுமார்

அப்போது கிராமங்களில் சாதி மற்றும் பாலினம் சார்ந்து பல்வேறு கட்டுப்பாடுகள், பாகுபாடுகள் காட்டப்படுவதைப் பற்றி அப்படத்தில் நான் பதிவு செய்தேன். அதை பார்த்த ஐ.நா அலுவலர்கள், பத்தாண்டு கழித்து எனக்கு மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் தொடர்ந்து நடைபெறும் மன்றத்தில் பேச வருமாறு மதுரை மக்கள் கண்காணிப்பகம் மூலம் அழைப்பு விடுத்திருந்தார்கள். அதற்கான ஏற்பாடுகளை அவர்களே செய்திருந்தார்கள். அக்டோபர் மாத தொடக்கத்தில் அங்கு சென்று பேசிவிட்டு வந்தேன்'' என்றவர்,

நீட் தேர்வால் அனிதா தற்கொலை செய்துகொண்டதையும், கிராமப்புற மாணவர்களும், பட்டியலின மாணவர்களும் உயர்கல்வி கற்க தடையாக இருக்கும் நீட் போன்ற தேர்வுகளை தடை செய்ய வேண்டும். அனைவருக்கும் சமமான கல்வி கற்கும் உரிமை கிடைக்க வேண்டும். மனித உரிமை மீறல்கள், பெண்கள் படும் துன்பங்கள், சதிப்பாகுபாடுகள் பற்றிப் பேசினேன்'' என்றார்.

பிரேமலதா
பிரேமலதா
ஈ.ஜெ.நந்தகுமார்

நாட்டில் தொடர்ந்துகொண்டிருக்கும் முக்கிய பிரச்னை பற்றி ஜெனிவா மனித உரிமை கவுன்சிலில் பதிவு செய்துவிட்டு வந்திருக்கும் கிராமத்து மாணவி பிரேமலதா அடுத்ததாக சட்டப்படிப்பு படிக்கும் வாய்ப்புக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார்.