Published:Updated:

நீட் தேர்வு: அகில இந்திய அளவில் 30-வது இடம்பெற்று மதுரை மாணவர் சாதனை!

த்ரிதேவ் வினாயகா

நீட் தேர்வில், அகில இந்திய டாப் 50-ல் மதுரையைச் சேர்ந்த மாணவன் த்ரிதேவ் விநாயகா 30-வது இடத்தைப் பெற்றுள்ளார். இவர் 720-க்கு 705 மதிப்பெண் பெற்று, தமிழக அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.

நீட் தேர்வு: அகில இந்திய அளவில் 30-வது இடம்பெற்று மதுரை மாணவர் சாதனை!

நீட் தேர்வில், அகில இந்திய டாப் 50-ல் மதுரையைச் சேர்ந்த மாணவன் த்ரிதேவ் விநாயகா 30-வது இடத்தைப் பெற்றுள்ளார். இவர் 720-க்கு 705 மதிப்பெண் பெற்று, தமிழக அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.

Published:Updated:
த்ரிதேவ் வினாயகா

நீட் தேர்வில் அகில இந்திய அளவில் 30-வது இடமும், தமிழக அளவில் முதல் இடமும் பெற்று சாதித்துள்ளார் மதுரை மாணவர் த்ரிதேவ் விநாயகா.

மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு தேசிய தேர்வு ஆணையம் ஆண்டுதோறும் அகில இந்திய அளவில் நீட் தேர்வை நடத்தி வருகிறது.

நீட் தேர்வு
நீட் தேர்வு

கடந்த ஜூலை மாதம் நடந்த தேர்வில், நாடு முழுவதிலும் இருந்து 18,72,343 பேர் பதிவு செய்து, 17,64,571 பேர் தேர்வு எழுதினார்கள். நடப்பு ஆண்டுக்கான தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு ஆணையம் நேற்று மாலை வெளியிட்டது. இதில் 9,93,069 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை அதிகம் இருந்தாலும், கடந்த ஆண்டைவிட தேர்ச்சி விகிதம் குறைவாக அமைந்துள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தமிழகத்தில் 1,32,167 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 67,789 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதிலும் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட குறைந்துள்ளது.

த்ரிதேவ் வினாயகா
த்ரிதேவ் வினாயகா

அகில இந்திய அளவில் 720-க்கு 715 மதிப்பெண் பெற்று ராஜஸ்தான் மாணவி தனிஷ்கா முதலிடம் பெற்றுள்ளார்.

அகில இந்திய டாப் 50-ல் மதுரையைச் சேர்ந்த மாணவன் த்ரிதேவ் விநாயகா 30-வது இடத்தை பெற்றுள்ளார். இவர் 720-க்கு 705 மதிப்பெண் பெற்றுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த மற்றொரு மாணவி ஹரினி 43-வது இடம் பெற்றுள்ளார்.

நீட் தேர்வு
நீட் தேர்வு

மதுரை கே.கே.நகரில் வசிக்கும் மாணவர் த்ரிதேவ் விநாயகா, தன் பெற்றோர் பிரபு - சுகந்தி எடுத்த முயற்சி, தொடர் கவனிப்பாலும், தனியார் நிறுவனத்தின் பயிற்சியாலும் இந்த இலக்கை எட்ட முடிந்ததாகத் தெரிவித்துள்ளார்.