Published:Updated:

"இனி முடிந்துவிட்டது என்றிருந்த வாழ்க்கை..." - இந்தியாவிற்கான முதல் திறனறிதல் தங்கம் வென்ற பிரகாஷ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நீலகந்த பானு பிரகாஷ்
நீலகந்த பானு பிரகாஷ் ( Screenshot from YouTube )

கணிதவியல் ஜீனியஸாக போற்றப்படும் ஷகுந்தலா தேவிக்குப் பிறகு 'அதிவேகமான மனித கால்குலேட்டர்' என்ற பட்டத்தைப் பெற்றுள்ளார் நீலகந்த பிரகாஷ்.

லண்டனில் நடக்கும் சர்வதேச 'மைன்ட் ஸ்போர்ட்ஸ் ஒலிம்பியாட் - 2020' (Mind Sports Olympiad (MSO)) போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார் இந்தியாவைச் சேர்ந்த நீலகந்த பானு பிரகாஷ். அறிவுத் திறன் சார்ந்த திறமையைக் கௌரவிக்கும் பொருட்டு 1997-ம் ஆண்டு இங்கிலாந்தில் இப்போட்டி தொடங்கப்பட்டது. அறிவுத் தேடலிலும் மூளை விளையாட்டிலும் பல்வேறு துறைசார்ந்த நபர்கள் உலகம் முடிவதிலிருந்தும் கலந்துகொள்கிறார்கள். ஆண்டுதோறும் இத்துறையில் நடக்கும் மிகப்பெரிய விளையாட்டு இது என்பதால் சர்வதேச அளவில் புகழ் பெற்றுள்ளது. நீலகந்த பிரகாஷ் கணிதத் திறனில் வென்றதன் மூலம் இந்தியாவிற்கான முதல் தங்கப்பதக்கத்தை ஈட்டி பெருமை சேர்த்துள்ளார்.

Shakuntala Devi
Shakuntala Devi

கணிதவியல் ஜீனியஸாக போற்றப்படும் ஷகுந்தலா தேவிக்குப் பிறகு 'அதிவேகமான மனித கால்குலேட்டர்' என்ற பட்டத்தைப் பெற்றுள்ளார் நீலகந்த பிரகாஷ். 10 வயதிலிருந்து 57 வயதிற்குள் 13 நாடுகளைச் சேர்ந்த 29 போட்டியாளர்கள் இப்போட்டியில் கலந்துகொண்டனர். கொடுக்கப்பட்ட சமன்பாடுகளைக் குறைந்தபட்சம் 65 புள்ளிகளுடன் விரைந்து தீர்க்க வேண்டும். பிரகாஷின் வேகத்தைக் கண்டு அசந்த நடுவர்கள் அவரின் திறனை உறுதிப்படுத்தக் கூடுதலாக, கன மூல (Cube root) சமன்பாட்டைத் தீர்க்க சொல்லியுள்ளனர். அதனையும் வென்று காட்டியுள்ளார்.

#ShakuntalaDevi: `இவள் மரமல்ல, மனுஷி!' - எப்படியிருக்கிறது வித்யாபாலனின் ஷகுந்தலா தேவி?!

பிரகாஷின் திறனை இந்த வெற்றியோடு சுருக்கிவிட முடியாது. இதனை அடையப் போராடிய அவரின் பின்னணியிலிருந்து தொடங்க வேண்டும். 2005-ம் ஆண்டு விபத்துக்குள்ளாகிப் படுக்கையில் வீழ்கிறார் பிரகாஷ். 'இனி வாழ்க்கையே முடிந்துவிட்டது' என்று நினைத்த வேளையில்தான் புதிய உலகம் திறக்கிறது. கணிதவியல் புதிர், சுடோக்கு, நுண்ணறிதல் போன்றவற்றில் பிரகாஷின் திறனைப் பெற்றோர்கள் கண்டறிகிறார்கள். கணித பிரச்னைகளைத் தீர்க்க தொடங்கியவர், 2006-2007 ஆண்டுகளில் அபாகஸ் நிறுவனம் நடத்திய நிகழ்வுகளில் பங்கேற்றார்.

"எண்கணித பகுப்பாய்வில் பிரகாஷின் தேடல் அசாத்தியமானது. அவரின் கடின முயற்சியின் பலனே இன்றைய பெருமிதத்தை வழங்கியுள்ளது" என்கிறார் பிரகாஷ் படிக்கும் டெல்லி ஸ்டிபன் கல்லூரியின் கணிதவியல் பேராசிரியர் ஜஸ்ப்ரிட் கவுர்.
நீலகந்த பானு பிரகாஷ்
நீலகந்த பானு பிரகாஷ்

இதுவரை 50 தேசிய மற்றும் 4 சர்வதேசிய சாதனைகளைப் படைத்துள்ளார் பிரகாஷ். தற்போதைய வெற்றியைப் பற்றிப் பகிரும் அவர், "நான் பல பதக்கங்களை வென்றுள்ளேன். இந்த வெற்றி என் மனதுக்கு அதிக நெருக்கமானது. ஏனெனில், திறன் விளையாட்டு ஒலிம்பியாடில் இந்தியாவிற்கான முதல் தங்கத்தை நான் வென்றுள்ளேன். 2016-ம் ஆண்டு ஸ்காட் ஃபிளான்ஸ்பர்க்கை (Scott Flansburg) வென்று 'அதிவேக மனித கால்குலேட்டர்' பட்டத்தை வென்றேன். இன்று வரை அதனைத் தக்கவைத்துள்ளேன்" என்கிறார்.

சிறுவர்களுக்கான திறனறிதல் ஆற்றலை வெளிப்படுத்தும் பொருட்டு 2018-ம் ஆண்டு உருவான 'Exploring Infinities' என்ற அமைப்பு முதல் பல முன்னெடுப்புகளை எடுத்து வருகிறார் 20 வயது பிரகாஷ்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு