Published:Updated:

அரசு கல்லூரியில் B.Com பட்டம்; படித்ததும் ரூ.60,000 சம்பளத்தில் வேலை; கிடைத்தது இதனால்தான்!

Engineering |வேலை வாய்ப்பு

சமீபத்திய ஆய்வு முடிவுகள் என்ன சொல்கிறதென்றால் இந்தியாவில் 93% பொறியியல் படித்த மாணவர்கள் வேலை செய்ய தகுதியில்லாதவர்களாக வருகின்றனர்.

அரசு கல்லூரியில் B.Com பட்டம்; படித்ததும் ரூ.60,000 சம்பளத்தில் வேலை; கிடைத்தது இதனால்தான்!

சமீபத்திய ஆய்வு முடிவுகள் என்ன சொல்கிறதென்றால் இந்தியாவில் 93% பொறியியல் படித்த மாணவர்கள் வேலை செய்ய தகுதியில்லாதவர்களாக வருகின்றனர்.

Published:Updated:
Engineering |வேலை வாய்ப்பு
கல்வி விகடன் யூடியூப் சேனலில் மாணவர்களின் படிப்பிற்கும், படிப்பை முடித்த பிறகு எதிர்காலத்தில் வேலை தேடுவதற்கும் வழிநடத்தும் வகையில் பல துறை சார்ந்த வல்லுநர்களின் நேர்காணல்கள், வழிகாட்டும் காணொளிகள் தொடர்ச்சியாக பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில், கல்வி ஆலோசகர் ஆனந்தம் செல்வகுமார் அவர்களின் உரை இதோ!

ஒரு பக்கம் லட்சக்கணக்கான இளைஞர்கள், `வேலையில்லை! வேலையில்லை!' என்று சொல்வதைப் பார்கிறோம். மற்றொரு பக்கம் நிறுவனங்கள் தங்களுக்கு வேலைக்கு ஆட்கள் தேவை என்று விளம்பரம் செய்வதையும் பார்கிறோம். இது என்ன தகவலை கூறுகிறது என்றால், நிறுவனங்கள் எதிர்பார்கிற திறமையும் தகுதியும் உள்ளவர்களாக இவர்களை மாற்றிக்கொண்டால் அனைவருக்கும் வேலை கிடைக்கும். இந்தியாவில் வேலையில்லாதவர்களைவிட வேலை செய்ய தகுதியில்லாதவர்கள் தான் அதிகம் இருக்கிறார்கள். பொறியியல் மட்டும் இல்லாமல் அனைத்து பட்டதாரிகளும் அவ்வாறே இருக்கின்றனர்.

ஆனந்தம் செல்வக்குமார்
ஆனந்தம் செல்வக்குமார்

சமீபத்திய ஆய்வு முடிவுகள் என்ன சொல்கிறதென்றால் இந்தியாவில் 93% பொறியியல் படித்த மாணவர்கள் வேலை செய்ய தகுதியில்லாதவர்களாக வருகின்றனர். ஒரு B.E Electronics படித்து தேர்ச்சி பெற்ற மாணவனிடம் மின்னழுத்தம் என்றால் என்ன என்று கேட்டால் புரியும்படி விளக்கத் தெரியவில்லை. இதில் என்ன தெரிகிறது என்றால் வெறும் மதிப்பெணுக்காக படித்து விட்டு ஒரு கூட்டம் வெளியேறி வருகின்றது. ஆனால், வெளியே வந்தால் மதிப்பெண்ணை விட திறமையை தான் பார்கின்றனர்..

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அரசு கல்லூரியில் 3 ஆம் ஆண்டு B. Com படிக்கும் ஒரு மாணவனிடத்தில் அவனுடைய நண்பன் data science என்ற கோர்ஸை படிக்க அறிவுரை வழங்குகிறார் அதை கேட்டு அவனும் ₹300 க்கு அந்த கோர்ஸை முடித்து விட்டு யூ- ட்யூபில் சில வீடியோக்களை பார்த்து தனது திறமையை வளர்த்துக் கொண்டு வெளியே செல்கிறான். அவனுக்கு 60 ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு வேலை கிடைத்தது.. அதேபோல் பொறியியல் படிக்கும் மாணவன் Data science கோர்ஸை முடித்து மேலும் துறை சார்ந்து திறமைகளை வளர்த்துக் கொண்டு வேலை தேடுகிறான் அவனுக்கு 65 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைத்தது.

Representational Image
Representational Image

இதிலிருந்து என்ன கற்றுக் கொள்ள வேண்டும் என்றால் வெறும் மதிப்பெணுக்காக படிக்கக்கூடாது. பெரிய நிறுவனங்கள் வேலை தேடுபவர்களிடம் படிப்பைத் தவிர புதிதாக கற்றுக்கொள்ள ஆர்வம் உள்ளதா என்று தான் பார்கின்றனர். நீங்கள் வாங்கும் மதிப்பெண் நுழைவுக்கு மட்டுமே பயன்படுகிறது. எனவே படிப்பதைத் தாண்டி துறை சார்ந்த நிறுவனங்கள் என்ன திறமையை எதிர்பார்க்கின்றனர் என்று பார்த்து அதில் திறமையை வளர்த்துக்கொண்டு வேலை தேடினால் அனைவருக்கும் வேலை கிடைக்கும்.