Published:Updated:

கம்பஞ்சோறு, நெத்திலி கருவாட்டு குழம்பு; ஊர்மக்களை அசத்திய அரசுப் பள்ளி மாணவர்கள்!

பட்டம் வழங்கும் கவிதா ( நா.ராஜமுருகன் )

இந்தப் பள்ளியில் இருந்து வெளியேறும் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா, பாரம்பர்ய உணவுத் திருவிழா, கல்விச்சீர் விழா, கற்றல் - கற்பித்தல் பொருள்கள் கண்காட்சி, ஆங்கில மொழியை எளிதாக கற்க வைக்கும் லேப் திறப்பு விழா என ஐம்பெரும் விழாவை நடத்தி, அசத்தியிருக்கிறார்கள்.

கம்பஞ்சோறு, நெத்திலி கருவாட்டு குழம்பு; ஊர்மக்களை அசத்திய அரசுப் பள்ளி மாணவர்கள்!

இந்தப் பள்ளியில் இருந்து வெளியேறும் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா, பாரம்பர்ய உணவுத் திருவிழா, கல்விச்சீர் விழா, கற்றல் - கற்பித்தல் பொருள்கள் கண்காட்சி, ஆங்கில மொழியை எளிதாக கற்க வைக்கும் லேப் திறப்பு விழா என ஐம்பெரும் விழாவை நடத்தி, அசத்தியிருக்கிறார்கள்.

Published:Updated:
பட்டம் வழங்கும் கவிதா ( நா.ராஜமுருகன் )

'அரசுப் பள்ளிகள் கடமைக்கு இயங்கும்' என்று பொதுவெளியில் இருக்கும் விமர்சனத்தை உடைக்கும்விதமாக, பல அரசுப் பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. அதில் ஒரு பள்ளிதான், மேலப்பட்டியில் இயங்கிவரும், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி. தனியார் பள்ளிகளை மிஞ்சும் விதமாகப் பல நல்ல முன்னெடுப்புகளை இந்தப் பள்ளியில் செய்து வருகிறார்கள்.

ஐம்பெரும் விழா
ஐம்பெரும் விழா
நா.ராஜமுருகன்

முத்தாய்ப்பாக, இந்தப் பள்ளியில் இருந்து வெளியேறும் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா, பாரம்பர்ய உணவுத் திருவிழா, கல்விச்சீர் விழா, கற்றல் - கற்பித்தல் பொருள்கள் கண்காட்சி, ஆங்கில மொழியை எளிதாக கற்க வைக்கும் லேப் திறப்பு விழா என ஐம்பெரும் விழாவை நடத்தி அசத்தியிருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஒன்றியத்தில் இருக்கிறது மேலப்பட்டி. இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் அண்ணாதுரையிடம் பேசினோம்.

"இந்த கிராமத்தில் வசிப்பவர்களில் பெரும்பாலானோர் ஏழ்மை நிலையில் உள்ளவங்கதான். அவங்க வீட்டுப் பிள்ளைகள்தான் எங்கப் பள்ளியில் படிக்கிறாங்க. எங்க பள்ளி ஆசிரியர்கள் எல்லாரும் சேர்ந்து சிறப்பான கல்வியை மாணவர்களுக்கு போதிச்சுக்கிட்டு இருக்கிறோம். எங்க பள்ளியில மொத்தம் 130 மாணவர்கள் படிச்சாங்க. அதுல 29 மாணவ, மாணவிகள் 5-ம் வகுப்பை முடிச்சு, 6-ம் வகுப்புப் படிக்க மேல்நிலைப் பள்ளிகளுக்குப் போறாங்க. அவங்களை பெருமைபடுத்தும் விதமா, உயர்கல்வியை முடிக்கும் மாணவர்களுக்கு கல்லூரிகள்ல பட்டம் வழங்குவதுபோல் வழங்க முடிவு பண்ணினோம். மாணவர்கள் பட்டம் பெறும்போது அணிய அங்கிகளை, ஈரோட்டுல போய் வாடகைக்கு எடுத்துட்டு வந்தோம்.

அண்ணாதுரை
அண்ணாதுரை
நா.ராஜமுருகன்

எங்க பள்ளி உள்ள மேலப்பட்டியை உள்ளடக்கிய நா.புதுப்பட்டி ஊராட்சிமன்றத் தலைவி கவிதா சுரேஷ்குமார் கலந்துகிட்டு, மாணவர்களுக்கு பட்டமளித்தார். 'இது புதுமையான முயற்சியால்ல இருக்கு'னு ஊராட்சிமன்றத் தலைவியும், மாணவர்களின் பெற்றோர்களும் எங்களைப் பாராட்டினாங்க. இதுபோன்ற விசயங்கள் மாணவர்களுக்கு கல்வி மீதான பிடிப்பை தொடர்ந்து தக்க வைக்கும்னு நினைச்சுத்தான், இப்படி பண்ணினோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதேபோல, ஊர்மக்களே சேர்ந்து பள்ளிக்குத் தேவையான பொருள்களை வாங்கி, கல்விச்சீர் வழங்கினாங்க. மூணாவது வருஷமா இந்த கல்விச்சீர் வழங்கும் வைபோகம் நடக்குது. இந்த வருஷம், தண்ணீர் டிரம், குப்பைக் கூடைகள், நாற்காலிகள்னு ரூ. 20,000 மதிப்புள்ள பொருள்களை வழங்கினாங்க. அதேபோல், கடந்த ஆண்டு முழுவதும் எல்லா வகுப்புகளிலும் கற்றல் - கற்பித்தலுக்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட 500 க்கும் மேற்பட்ட பொருள்களை வெச்சு கண்காட்சி நடத்தினோம். அதை திறந்து வெச்சதோட, விழாவில் தலைமையேற்ற வட்டார கல்வி அலுவலர் வினோத்குமாரும், மேற்பார்வையாளர் பாலுசாமியும், 'இந்த பள்ளி மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைப்பதற்கு இந்தப் பொருள்களே சாட்சி சொல்லுது'னு பாராட்டினார்.

பாரம்பர்ய உணவை விளக்கும் மாணவர்
பாரம்பர்ய உணவை விளக்கும் மாணவர்
நா.ராஜமுருகன்

மேலும், இன்று உணவுக்கலாசாரம் மாறியதால், மனித சமூகம் எண்ணற்ற நோய்களையும், உடல் நலமின்மையையும் சந்திச்சு வருது. அதனால், மாணவர்களுக்கு நல்ல உணவை அடையாளப்படுத்த வேண்டும் என்பதற்காக, மாணவர்களை பாரம்பர்ய பொருள்களில் உணவு தயாரிச்சுகிட்டு வரச்சொல்லி அறிவுறுத்தினோம். 30 மாணவ, மாணவிகள் அவர்களின் தாய்மார்களின் உதவியோடு, குதிரைவாலி பொங்கல், முளைக்கட்டிய பயிர் வகைகள், ராகி உப்புமா, வரகு அரிசி கஞ்சி, சிறுதானியங்கள் கலந்த தவளைவடை, உசிலி (தானியங்கள் கலந்த கூட்டு), வரகு அரிசி கஞ்சி, கேப்பங்கூழ், நவதானியக் கஞ்சி, கம்பஞ்சோறு, காய்கறிகள் போடப்பட்ட நெத்திலி கருவாட்டுக் குழம்புனு பல உணவுகளை தயாரிச்சுக்கிட்டு வந்தாங்க. அதை காட்சிப்படுத்தினோம். இந்த கண்காட்சியினை, சுகாதார ஆய்வாளர் நித்திஷ் திறந்து வச்சார்.

ஊர் மக்களுக்கு அந்த உணவுகளின் சிறப்புகளை மாணவர்கள் விளக்கினாங்க. தொடர்ந்து, அத்தனை உணவுகளையும், மாணவர்கள், விருந்தினர்கள், ஊர் மக்கள், ஆசிரியர்கள்னு பலரும் பகிர்ந்து சாப்பிட்டோம். எல்லோரையும் அதிகம் கவர்ந்தது, கம்பஞ்சோறு, கருவாட்டு குழம்பு காம்பினேஷன்தான்.

அதேபோல், 1 மற்றும் 2 - ம் வகுப்பு மாணவர்கள் எளிமையான பல ஆங்கில உரையாடல்களை பேச வசதியாக, ஆங்கில மொழி ஆய்வகத்தை, ஊராட்சிமன்றத் தலைவி கவிதா திறந்து வச்சாங்க. 1,000-க்கும் மேற்பட்ட இணைந்த படங்கள் மூலம், மாணவர்கள் எளிதாக ஆங்கில உரையாடல்களை மேற்கொள்ள இந்த ஆய்வகம் வழிவகை செய்யும். 'சிறிய விழா...'னு சொல்லித்தான் விருந்தினர்களை அழைச்சோம். ஆனா, பள்ளிக்கு வந்தபிறகு பார்த்து, 'புதுமையான, பிரமாண்டமான விழா இது... வாழ்துகள்'னு சொன்னாங்க. இதற்கு காரணம், எங்க பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்களின் பெரும் முயற்சிதான்

பட்டம் பெற்ற 5 - ம் வகுப்பு மாணவர்கள்
பட்டம் பெற்ற 5 - ம் வகுப்பு மாணவர்கள்
நா.ராஜமுருகன்

எங்க பள்ளியில் இன்னும் சில புது முயற்சிகளை செய்து வருகிறோம். மாணவர்களிடம் தலைமைப் பண்பை வளர்க்க, 'பள்ளி சட்டமன்றம்' என்ற கான்சப்ட்டை செயல்படுத்திக்கிட்டு இருக்கிறோம். அதேபோல், ஒவ்வொரு வகுப்பறையிலும் 'போஸ்ட் ஆபீஸ்' செயல்படுத்துறோம். ஒவ்வொரு கிளாஸ்லயும் தலா ஒரு போஸ்ட் பாக்ஸ், போஸ்ட்மாஸ்டர், போஸ்ட்மேனை நியமிச்சுருக்கிறோம். தினமும் மாணவர்கள் சக கிளாஸ் மாணவர்கள், பக்கத்து கிளாஸ் மாணவர்கள், ஆசிரியர்கள்னு யாருக்கும் வேண்டுமானாலும் கடிதம் எழுதலாம். அதை போஸ்ட்மாஸ்டர் கலெக்ட் செஞ்சு, அதுல சீல் வச்சு, போஸ்ட்மேன் மூலமா சம்பந்தப்பட்ட நபரிடம் அந்த லெட்டரை சேர்க்க வைப்பார்.

'இன்று உங்க கிளாஸ் சந்தோஷமா இருந்துச்சு', 'இன்று கிளாஸ்ல கடுமையா நடந்துக்கிட்டீங்க', ' 'இன்னிக்கு பள்ளிக்கு ஏன் அரைமணிநேரம் லேட்டா வந்தீங்க?'னு ஆசிரியர்களிடம் வெளிப்படையாக கருத்துகளை பல மாணவர்கள் பகிர்ந்துக்க இந்த முறை பயன்படுது. இதன்மூலம், போஸ்ட்ஆபீஸ் நடைமுறைகள், கடிதம் எழுதும் பழக்கம், ஆசிரியர்களிடம் வெளிப்படையான உரையாடும் குணம் எல்லாம் மாணவர்களுக்கு கிடைக்குது.

அடுத்ததா, மாணவர்களிடம் நேர்மை, பொய் பேசாத தன்மை உள்ளிட்ட குணங்களை உருவாக்க, 'நியாய விலைக்கடை' நடத்துகிறோம். அந்த கடையில், மாணவர்களுக்கு தேவையான கல்வி சம்பந்தப்பட்ட பொருள்கள் இருக்கும். அருகில் காசு போட ஒரு பெட்டி இருக்கும். யாரும் அங்கே இருக்கமாட்டாங்க. மாணவர்கள் தங்களுக்குத் தேவையான பொருளை எடுத்துக்கிட்டு, அதுக்குரிய காசை அவங்களாவே பெட்டியில் போடணும்.

கற்றல் - கற்பித்தல் பொருட்கள் கண்காட்சி
கற்றல் - கற்பித்தல் பொருட்கள் கண்காட்சி
நா.ராஜமுருகன்

ஒரு மாணவர்கூட இதில் தவறு செய்ததில்லை. 'ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது'னு சொல்வாங்க. அதுபோல், ஏட்டுக்கல்வியைத் தாண்டி, வாழ்க்கைக்கு தேவையான பல விசயங்களை, இப்படி பலவழிகள்ல எங்க பள்ளி மாணவர்களுக்கு கத்து தர்றோம். தவிர, ஸ்பான்சர்ஸ் பிடிச்சு, இரண்டு ஸ்மார்ட் கிளாஸ் ரூம்களை உருவாக்கியிருக்கோம். இப்படி பல வழிகளில் எங்க பள்ளி மாணவர்களை மேம்படுத்துவதால், எங்க பள்ளி மாணவர்களை சேர்த்துக்க, அருகில் உள்ள தனியார் பள்ளிகள் எல்லாம் நான், நீனு போட்டி போடுறாங்க. தொடர்ந்து, எங்க பள்ளி மாணவர்களை இன்னும் அதிக மெனக்கெடலுடன் திறம்மிக்கவங்களாக உருவாக்கிட்டே இருப்போம்" என்றார் அக்கறையும் பொறுப்புணர்வுமாக.

வாவ் சொல்ல வைக்கும் பள்ளிக்கு வாழ்த்துகள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism