Published:Updated:

"அழிக்கப்படுவது ஒரு மாணவரின் மருத்துவக் கனவு மட்டுமல்ல..." - 'நீட்' அலெர்ட்!

நீட்
நீட்

ஒரு மாணவனின் மருத்துவக் கனவை அழிப்பதோடு நிற்பதல்ல; தமிழக மருத்துவத் துறையின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்குகிறது. இதே நிலை தொடர்ந்தால், இனி கிராமத்திலிருந்து ஒரு மாணவர்கூட மருத்துவராக வர முடியாது.

எது நடைபெற்றுவிடக் கூடாது என அச்சப்பட்டோமோ, அது நடைபெற்றுவருகிறது. ஆம், தமிழ்நாட்டிலிருந்து நீட் தேர்வுக்காக விண்ணப்பித்திருப்பவர்களின் எண்ணிக்கை, 2019-ம் ஆண்டைவிட இந்த ஆண்டு 17 சதவிகிதம் குறைந்துவிட்டது. அதாவது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், இந்த ஆண்டு 22,498 பேர் மருத்துவம் படிப்பதற்காக விண்ணப்பிக்கவில்லை, விரும்பவில்லை அல்லது தங்களது மருத்துவத் துறைக் கனவுகளைப் பொசுக்கிக்கொண்டனர்!

"காரணம், நீட் தொடர்பான நடைமுறை சிக்கல்கள்.அதற்கும்மேலாக தமிழக அரசு தரமான நீட் பயிற்சியை அளிக்கத் தவறியதுதான்'' என்கிறார்கள் கல்வியாளர்கள்.

நீட் தேர்வுகளை எதிர்த்து தொடர்ந்து குரல் எழுப்பிவரும் டாக்டர் எழிலன் நம்மிடம், ''பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் மருத்துவக் கனவை நீட் நுழைவுத்தேர்வு கேள்விக்குறியாக்கிவிட்டது. அவர்களின் கடைசி நம்பிக்கையையும் தகர்த்துவிட்டன நடந்து முடிந்த தேர்வு முடிவுகள். குறிப்பாக, கிராமப்புற ஏழை மாணவர்கள்தான் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர். அவர்கள் பெரும்பாலும் அரசுப் பள்ளி மாணவர்கள். இனி இந்தத் தேர்வை தங்களால் எழுதவே முடியாது என்ற மனநிலைக்குத் தள்ளப்பட்ட நிலையில்தான் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளனர்.

'இந்த ஆண்டு கூடுதலாக 94 பயிற்சி மையங்கள் தொடங்கப்படும்' என்றும் அறிவித்தது. ஆனால், அந்த 94 பயிற்சி மையங்களின் நிலை என்ன என்றே தெரியவில்லை.

நீட் பயிற்சி வகுப்புக்கு வருடத்துக்கு குறைந்தது ஒன்றரை லட்சம் ரூபாய் தேவை. பள்ளிப்படிப்புக்கே கட்டணம் செலுத்த முடியாமல்தான் அரசுப் பள்ளிக்கு மாணவர்கள் வருகிறார்கள். அவர் களால் எப்படி நீட் பயிற்சிக்காக செலவுசெய்ய முடியும்? அப்படியே அரசுப் பள்ளி மாணவன் கட்டணத்தைச் செலுத்தி பயிற்சி வகுப்பில் சேர்ந்தால், அவன் அரசுப் பள்ளியில் கற்ற கல்விமுறைக்கும், நீட் நுழைவுத்தேர்வுப் பயிற்சிக்குமான இடைவெளி மிக அதிகம். பணம் இருப்பவர்களின் பிள்ளைகள் மட்டும் தான் மருத்துவர் ஆக முடியும். இதுவே யதார்த்தம்.

இது, ஒரு மாணவனின் மருத்துவக் கனவை அழிப்பதோடு நிற்பதல்ல; தமிழக மருத்துவத் துறையின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்குகிறது. இதே நிலை தொடர்ந்தால், இனி கிராமத்திலிருந்து ஒரு மாணவர்கூட மருத்துவராக வர முடியாது. இதன் நீட்சியாக, கிராமப் பகுதிகளுக்குக் கிடைத்துக்கொண்டிருந்த குறைந்த அளவிலான மருத்துவ சேவையும் அடியோடு நின்றுவிடும்'' என்றார். விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2OAbxpJ

சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவீந்திரநாத், ''அரசுப் பள்ளி மாணவர்கள் நம்பிக்கையிழந்த நிலையில்தான் 2020-ம் ஆண்டு நீட் தேர்விலிருந்து அவர்கள் விலகியிருக்கிறார்கள். அரசாங்கம் தர வேண்டிய தரமான பயிற்சியைத் தரவில்லை. அரசுத் தரப்பிலிருந்து வழங்கப்படும் பயிற்சிக்கே கட்டணத்தைச் செலுத்த முடியாத நிலையில்தான் மாணவர்கள் இருக்கின்றனர். பொருளாதார சிக்கல் ஒருபுறம் என்றால், நகர்ப்புறங்களில் இருக்கும் பயிற்சி மையங்கள் கிராமப்புறங்களில் இல்லை என்பது இன்னொரு வேதனை. அதனால், அரசுப் பள்ளி மாணவர்கள் நம்பிக்கை இழந்துவிட்டார்கள்" என்றார்.

"அழிக்கப்படுவது ஒரு மாணவரின் மருத்துவக் கனவு மட்டுமல்ல..." - 'நீட்' அலெர்ட்!

தமிழகம் முழுவதும் 412 நீட் பயிற்சி மையங்களை தமிழக பள்ளிக்கல்வித் துறை தொடங்கியது. 2018-19ம் ஆண்டு இந்தப் பயிற்சி மையங்களில் வகுப்புகள் நடந்துவந்த நிலையில், 2019-2020ம் ஆண்டுக்கான நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்கவேயில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதையடுத்து, நீட் பயிற்சி வகுப்புகளைத் தொடங்குவதாக தமிழக அரசு அறிவித்தது. கூடவே, 'இந்த ஆண்டு கூடுதலாக 94 பயிற்சி மையங்கள் தொடங்கப்படும்' என்றும் அறிவித்தது. ஆனால், அந்த 94 பயிற்சி மையங்களின் நிலை என்ன என்றே தெரியவில்லை.

- நீட் பயிற்சி விஷயத்தில் அரசின் செயல்பாடுகளையும், மாணவர்களின் மனநிலை குறித்தும் விரிவாகப் பதிந்திருக்கும் ஜூனியர் விகடன் சிறப்புக் கட்டுரையை முழுமையாக வாசிக்க > நீட் என்னும் அரச பயங்கரவாதம்! https://www.vikatan.com/social-affairs/education/students-percentage-decreased-for-attend-neet-exam-in-tamil-nadu

சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

பின் செல்ல