உதித் சூர்யா என்கிற மாணவர் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்திருக்கும் சம்பவம், தமிழகத்தில் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை மருத்துவரான வெங்கடேசனின் மகன் உதித் சூர்யா. 2016-ம் ஆண்டில் ப்ளஸ் டூ முடித்த அவர், சென்னையில் உள்ள தனியார் நீட் பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றிருக்கிறார். இரண்டு ஆண்டுகள் முயன்றும் அவரால் வெற்றிபெற முடியவில்லை. அடுத்து, மும்பையில் உள்ள ஒரு தனியார் நீட் பயிற்சி மையத்தில் உதித் சூர்யாவைச் சேர்த்தார் வெங்கடேசன். பயிற்சி முடித்து கடந்த மே 5-ம் தேதி, மும்பையில் உள்ள ராஜீவ் காந்தி இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியில் நீட் தேர்வு எழுதிய உதித் சூர்யா, 720 மதிப்பெண்ணுக்கு 385 மதிப்பெண் பெற்று தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். காரணம், மும்பை கோச்சிங் இல்லை... ஆள் சேஞ்சிங். உதித் சூர்யாவுக்குப் பதிலாக வேறு ஒரு நபர் தேர்வு எழுதி பாஸாகியிருக்கிறார்.

இதுகுறித்து மருத்துவக் கல்லூரி வட்டாரத்தில் பேசினோம். ‘‘கல்லூரி ஆரம்பித்தபோது உதித் சூர்யா என்ற பெயரில் வேறு ஒரு மாணவர்தான் ஹாஸ்டலில் தங்கி இருந்தார். ஒரு வாரம் வகுப்புக்கு வந்த அவர், அதன் பிறகு வீட்டுக்குக் கிளம்பிவிட்டார். சில நாள் கழித்து அதே பெயரில் மற்றொரு மாணவர் வந்தார். அவர்மீது மாணவர்களுக்குச் சந்தேகம் வந்து விடுதிக் காப்பாளரிடம் புகார் சொல்லியிருக்கிறார்கள். இருப்பினும் அவரிடம் ஐ.டி கார்டு இருந்ததால் விடுதிக் காப்பாளர் கண்டுகொள்ளவில்லை.

இந்த நிலையில், இம்மாதம் 11-ம் தேதி ‘உங்கள் கல்லூரியில் படிக்கும் உதித் சூர்யா என்கிற மாணவன், நீட் தேர்வு எழுதியவர் அல்ல. ஆள்மாறாட்டம் செய்து சேர்ந்திருக்கிறார்’ என்ற தகவலும் அதற்கான ஆதாரங்களும் மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜேந்திரனுக்கு மெயிலில் வந்தன. ராஜேந்திரன் அதைக் கண்டுகொள்ளவில்லை. 13-ம் தேதி மீண்டும் அதே மெயில் வந்திருக்கிறது. ராஜேந்திரன் அப்போதும் பொருட்படுத்தவில்லை. 18-ம் தேதி இதுகுறித்த செய்தி ஊடகங்களில் வெளியான பிறகு, கானாவிலக்கு காவல்நிலையத்துக்குச் சென்ற ராஜேந்திரன், 13-ம் தேதி என்று முன் தேதியிட்டு புகார் கொடுத்திருக்கிறார். போலீஸ் அந்தப் புகாரை வாங்கவில்லை. பிறகு, தேதியை 18 என மாற்றி, புகார் கொடுத்தார். அதன் பிறகே ஆள்மாறாட்டம், போலியான ஆவணங்கள் தயார்செய்தல் உட்பட மூன்று பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டு விசாரணையைத் தொடங்கியது போலீஸ். ஊடகங்களில் செய்தி வெளியானதும் உதித் சூர்யாவும் அவரின் தந்தை வெங்கடேசனும் தலைமறைவாகிவிட்டனர்’’ என்றனர்.

மாணவர்கள் புகார் செய்தும் கல்லூரி விடுதிக் காப்பாளர் கண்டுகொள்ளாதது எதனால்? தனக்கு மெயிலில் வந்த புகாரை முதல்வர் ராஜேந்திரன் பொருட்படுத்தாதது ஏன்? உதித் சூர்யாவுக்கு, கல்லூரி அடையாள அட்டை எப்படிக் கிடைத்தது? இப்படி பல்வேறு சந்தேகங்கள் கிளை பரப்பும் சூழலில், `உதித் சூர்யாவின் தந்தை வெங்கடேசனும், கல்லூரி முதல்வர் ராஜேந்திரனும் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் ஒன்றாக வேலைசெய்தவர்கள்’ என்று வெளியாகியிருக்கும் தகவல், சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்தியிருக்கிறது. அதையடுத்து, கடந்த 23-ம் தேதி சுமார் 3 மணி நேரம் ராஜேந்திரனிடம் போலீஸார் ரகசிய விசாரணை நடத்தினர்.

மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜேந்திரனிடம் பேசியபோது, “ஸ்டான்லி மருத்துவமனையில் 500-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் வேலை பார்க்கிறார்கள். நான் வெங்கடேசனைப் பார்த்ததே இல்லை. போலியான நபர் விடுதியில் தங்கி இருந்தாரா என்பதை எங்களால் உறுதி செய்ய முடியவில்லை. சி.சி.டிவி பதிவுகளை காவல்துறையினர் ஆய்வு செய்துவருகிறார்கள். காவல்துறையின் விசாரணை முடிந்த பிறகுதான் முழுமையான தகவல்களைச் சொல்ல முடியும்” என்றார்.

இதுகுறித்து தேனி எஸ்.பி-யான பாஸ்கரனிடம் கேட்டதற்கு, “சென்னையில் தனிப்படை முகாமிட்டிருக் கிறது. உதித் சூர்யாவின் வீடு பூட்டப்பட்டுள்ளதால் அவரின் தந்தை பணிபுரியும் ஸ்டான்லி மருத்துவமனையில் விசாரித்திருக்கிறோம். செல்போன் சிக்னல்களைவைத்து ட்ராக் செய்து வருகிறோம். விரைவில் அவர்கள் கைதுசெய்யப் படுவார்கள். கல்லூரி முதல்வருக்கு வந்த மின்னஞ்சல் எங்கிருந்து வந்தது என்பதையும் புலனாய்வு செய்துவருகிறோம்” என்றார்.

நீட் தேர்வு எழுத வரும் மாணவிகள் தலையில் பூக்கள் வைக்கக் கூடாது, ஹை-ஹீல்ஸ் செருப்புகள் அணியக் கூடாது, கொலுசு போடக் கூடாது என ராணுவம்போல கெடுபிடிகாட்டும் மத்திய அரசு, இந்த ஆள்மாறாட்டத்துக்கு என்ன பதில் சொல்லப்போகிறது?

ஆந்திராவைச் சேர்ந்த ரியாஸ், பீகாரைச் சேர்ந்த நிதிவர்தன் ஆகிய மாணவர்கள், இம்மாதம் 10-ம் தேதி மதுரை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அட்மிஷனுக்காக வந்தார்கள். அவர்களின் சான்றிதழ்களும், நீட் ஒதுக்கீட்டு உத்தரவும் டீன் வனிதாவுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்த, தல்லாகுளம் காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தார். போலீஸ் வருவதற்குள் நிதிவர்தன் தப்பிவிட்டார். ரியாஸிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ‘டெல்லியில் கோச்சிங் சென்டர் நடத்தும் விக்ரம் சிங் என்பவர்தான் இந்தச் சான்றிதழ்களை எல்லாம் தயாரித்துக் கொடுத்தார். அதற்காக எட்டு லட்சம் ரூபாய் கட்டியிருக்கிறேன்’ என்று அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். டெல்லியில் உள்ள விக்ரம் சிங் பற்றி விசாரிக்க முயலாமல், அந்த மாணவனை பாதிக்கப்பட்டவராகக் கருதி, டெல்லி போலீஸில் புகார் அளிக்க அனுப்பி வைத்துள்ளது மதுரை காவல்துறை.