Published:Updated:

`மீனாட்சிபுரம் மாணவர்களுக்கு பேருந்து வந்தாச்சு!' - 8 நாள்களில் நிறைவேறிய சஹானாவின் கோரிக்கை

சஹானா
சஹானா ( என்.ஜி.மணிகண்டன் )

`50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் 7 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று சிரமப்படுகிறார்கள். அதனால், பள்ளிக்குச் செல்ல பேருந்து விட வேண்டும்' - சஹானா

கடந்த குடியரசு தினத்தன்று மதுரை மாவட்டம் மீனாட்சிபுரம் ஊராட்சியில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் சஹானா என்ற 5-ம் வகுப்பு பயிலும் மாணவி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது நமக்குத் தெரியும்.

புதிய பேருந்து
புதிய பேருந்து
என்.ஜி.மணிகண்டன்

`தங்கள் ஊரிலிருந்து பக்கத்து ஊரிலிருக்கும் மாயாண்டிப்பட்டி உயர்நிலைப்பள்ளிக்குச் செல்ல பேருந்து வசதியில்லை, தன் அக்கா உட்பட 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் 7 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று சிரமப்படுகிறார்கள். அதனால், பள்ளிக்குச் செல்ல பேருந்து விட வேண்டும்' என்று துணிச்சலாக பேசியிருந்தார்.

இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்களில் வெளியானதால் வெளிச்சத்துக்கு வந்தது. சஹானாவுக்குப் பாராட்டுகள் குவிந்தன. குடியரசு தின விழாவில் கலந்துகொள்ள டெல்லி சென்றிருந்த மதுரை எம்.பி சு.வெங்கடேசன் சஹானாவின் பேச்சைப் பார்த்து, மதுரை அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகளுக்கு உடனே கோரிக்கை வைத்தார்.

சு.வெங்கடேசன் பாராட்டியபோது
சு.வெங்கடேசன் பாராட்டியபோது
என்.ஜி.மணிகண்டன்

28-ம் தேதி மதுரை வந்த சு.வெங்கடேசன், மீனாட்சிபுரம் சென்று மாணவி சஹானாவுக்கு பரிசு வழங்கி பாரட்டினார். அத்துடன் `விரைவில் பேருந்து விடப்போகிறார்கள்' என்ற மகிழ்ச்சியான தகவலையும் மீனாட்சிபுரம் மக்களிடம் தெரிவித்தார்.

`கிராம சபையில் மாணவியின் கேள்வியால் கிடைத்த பேருந்து வசதி!' - ஆச்சர்யம் அளித்த மதுரை எம்.பி!

அது மட்டுமல்லாமல் சஹானா உட்பட மீனாட்சிபுரம் மாணவ மாணவிகளுடன் சென்று அப்பகுதியில் அவர்கள் நடந்து செல்லும் மோசமான பாதையையும் பார்வையிட்டார்.

அக்காவுடன் சஹானா
அக்காவுடன் சஹானா
என்.ஜி.மணிகண்டன்

இந்த நிலையில், நேற்று அதிகாரபூர்வமாக மீனாட்சிபுரத்துக்கு பேருந்து அதிகாரிகளால் இயக்கி வைக்கப்பட்டது. இதில் சஹானா உட்பட அனைத்து மாணவர்களும் புதிய பேருந்தில் பயணித்தார்கள். அவர்கள் அத்தனை பேர் முகத்திலும், பெரும் மகிழ்ச்சி.

மதுரையில் கிராமசபை கூட்டத்தில் சிறுமி முன்வைத்த கோரிக்கை ஏற்று பேருந்து இயக்கம்! மதுரை மாவட்டம் மீனாட்சிபுரம்...

Posted by Vikatan EMagazine on Monday, February 3, 2020
அடுத்த கட்டுரைக்கு