Published:Updated:

`உக்ரைனிலிருந்து திரும்பிய இந்திய மருத்துவ மாணவர்களுக்கு இன்டெர்ன்ஷிப்!' - NMC சொல்வது என்ன?

Ukraine ( AP Photo/Felipe Dana )

இந்தியாவில் இன்டெர்ன்ஷிப்பை முடிக்க விண்ணப்பிப்பதற்கு முன்பு வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகளுக்கான தேர்வில் (FMGE), தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

`உக்ரைனிலிருந்து திரும்பிய இந்திய மருத்துவ மாணவர்களுக்கு இன்டெர்ன்ஷிப்!' - NMC சொல்வது என்ன?

இந்தியாவில் இன்டெர்ன்ஷிப்பை முடிக்க விண்ணப்பிப்பதற்கு முன்பு வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகளுக்கான தேர்வில் (FMGE), தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Published:Updated:
Ukraine ( AP Photo/Felipe Dana )

குறைந்த செலவில் மருத்துவக் கல்வியை வழங்கி உக்ரைன் அரசு இந்திய மாணவர்களைக் கவர்ந்துள்ளது. இதனால் இந்திய மாணவர்கள் பலரும் உக்ரைனில் மருத்துவம் படிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். உக்ரைனில் சுமார் 18,095 இந்திய மாணவர்கள் உள்ளனர் என நாட்டின் கல்வி மற்றும் அறிவியல் அமைச்சகம் கூறியுள்ளது. மேலும், நூற்றுக்கணக்கான மாணவர்கள் தங்கள் மருத்துவ படிப்பின் இறுதியாண்டில் இன்டெர்ன்ஷிப் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் போரின் காரணமாக உக்ரைனில் இருந்து இந்திய மருத்துவ மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர். இப்படி போர் போன்ற கட்டாய சூழ்நிலையால் இந்தியாவுக்குத் திரும்பிய மாணவர்கள் தங்களின் விடுபட்ட கல்வியைத் தொடர தகுதியுடையவர்கள் என்கிறது தேசிய மருத்துவ ஆணையம்.

Doctor (Representational Image)
Doctor (Representational Image)
Pixabay

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தேசிய மருத்துவ ஆணையத்தின் 2021-ம் ஆண்டு விதிமுறைகளின்படி, வெளிநாட்டில் மருத்துவப் படிப்பை படிக்கும் மாணவர்கள் இந்தியாவில் மருத்துவப் பயிற்சி பெறுவதற்கு, இரண்டுமுறை இன்டெர்ன்ஷிப் செய்ய வேண்டும். மருத்துவ கல்வி படித்த நாட்டில் ஒருமுறையும், இரண்டாவது முறை இந்தியாவிலும் இன்டெர்ன்ஷிப் செய்ய வேண்டும்.

இச்சூழல் குறித்து தேசிய இளங்கலை மருத்துவக் கல்வி வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், `தொற்றுநோயான கோவிட் -19 மற்றும் போர் போன்ற கட்டாய சூழ்நிலையின் காரணமாக இன்டெர்ன்ஷிப்பை முழுமையாக முடிக்க முடியாத வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகள் சிலர் இருக்கின்றனர். இவர்கள் மீதமுள்ள இன்டெர்ன்ஷிப்பை இந்தியாவில் முடிக்கலாம்' என்று கூறப்பட்டுள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதன்படி, விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் இன்டெர்ன்ஷிப்பை முடிக்க விண்ணப்பிப்பதற்கு முன்பு வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகளுக்கான தேர்வில் (FMGE), தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று துணைச் செயலாளர் ஷம்பு சரண் குமார் கூறியுள்ளார்.

medical
medical
pixabay

இந்தியாவில் பதிவு செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்கள் தேசிய தேர்வு வாரியம் நடத்தும் வெளிநாட்டு மருத்துவ பட்டதாரி தேர்வில் தேர்ச்சி பெறுவதை, மாநில மருத்துவ கவுன்சில்கள் உறுதி செய்ய வேண்டும். விண்ணப்பிக்கும் மாணவர்கள் தகுதி பெறும் பட்சத்தில், மாநில மருத்துவ கவுன்சில்களால் 12 மாத இன்டர்ன்ஷிப் அல்லது மீத காலத்துக்கு தற்காலிக பதிவு வழங்கப்படலாம். தங்கள் இன்டெர்ன்ஷிப்பை முடிப்பதற்காக அனுமதிக்கப்படும் வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகளுக்கு எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாது.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிற்சிபெறும் இந்திய மருத்துவ பட்டதாரிகளுக்கு இணையாக வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகளுக்கான உதவித்தொகை மற்றும் இதர வசதிகள் உரிய அதிகாரியால் நிர்ணயித்தபடி நீட்டிக்கப்பட வேண்டும் என்று தேசிய மருத்துவ வாரியம், மாநில மருத்துவ கவுன்சில்களுக்கு பின்பற்ற வேண்டிய விரிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism