Published:Updated:

கரூரில் அரசுப் பள்ளிக்குள் புகுந்த மழைநீர்! - அமர முடியாமல் தவித்த மாணவர்கள்

கரூர் மாவட்டத்தில் உள்ள ஓர் அரசுப் பள்ளியில் மழைநீர் புகுந்ததால், மாணவர்கள் பெரும் அவதிக்குள்ளாயினர். இதனால், ஆசிரியர்கள் மாணவர்களை தரையில் அமர வைத்து, பாடம் நடத்த முடியாமல் அல்லாடிப்போனார்கள்.

பள்ளி கட்டடத்துக்குள் புகுந்த மழைநீர்
பள்ளி கட்டடத்துக்குள் புகுந்த மழைநீர் ( நா.ராஜமுருகன் )

கரூர் மாவட்டத்தில் உள்ள ஓர் அரசுப் பள்ளியில் மழைநீர் புகுந்ததால், மாணவர்கள் பெரும் அவதிக்குள்ளாயினர். இதனால், ஆசிரியர்கள் மாணவர்களை தரையில் அமர வைத்து, பாடம் நடத்த முடியாமல் அல்லாடிப்போனார்கள்.

கடவூர் அரசுப் பள்ளி மாணவர்கள்
கடவூர் அரசுப் பள்ளி மாணவர்கள்
நா.ராஜமுருகன்

கரூர் மாவட்டம், கடவூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கடவூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சுமார் 220-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள். இப்பள்ளியின் மேற்கூரை ஓடு சேதமடைந்து பல நாள்களாக மாற்றப்படாமல் உள்ளது.

Vikatan

இந்த நிலையில், இங்கு நேற்று கனமழை விடாமல் பெய்ததால், பள்ளி வகுப்பறைக்குள் மழைநீர் புகுந்தது. இதனால், மாணவர்கள் வகுப்பறையில் அமர முடியாமல், கடும் அவதிக்கு உள்ளானார்கள். மேலும், மதிய வேளையில் சத்துணவு சாப்பிட அமர இடம் இல்லாமல் அல்லல்பட்டனர்.

கடவூர் அரசுப் பள்ளி
கடவூர் அரசுப் பள்ளி
நா.ராஜமுருகன்

ஏற்கெனவே, பெற்றோர் தனியார் பள்ளியில் மாணவர்களை சேர்த்து வருவதால், மாணவர் சேர்க்கை குறைந்து வரும் இன்றைய சூழ்நிலையில், 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படிக்கும் ஓர் அரசு நடுநிலைப்பள்ளியில் மேற்கூரை பராமரிக்கப்படாமல் உள்ளது பெற்றோரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. அதோடு, வகுப்பறைக்குள் மழைநீர் புகும் அளவுக்கு பள்ளிக் கட்டடம் சிதிலமாக இருப்பது சமூக ஆர்வலர்களை கொதிப்படைய வைத்துள்ளது.

இதுசம்பந்தமாக, நம்மிடம் பேசிய அந்தப் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலரான பாலசுப்ரமணி, ``கடவூர் பகுதி கரூர் மாவட்டத்தின் தென் எல்லைப்பகுதியாக உள்ள பகுதி. கடவூரைச் சுற்றி 32 குக்கிராமங்கள் உள்ளன. அந்தக் கிராமங்களைச் சுற்றி, இயற்கையே வட்ட வடிவில் மலையை அரணாக அமைத்துள்ளது. வெளியிலிருந்து உள்ளே வந்துபோக மூன்றே மூன்று வழிகள்தான் உள்ளன. கடவூர் பகுதி வறட்சியான பகுதியும்கூட. இப்படிப்பட்ட பகுதியில் மாணவர்களைப் பெற்றோர்கள் பள்ளிகளில் சேர்த்து படிக்க வைப்பதே பெரிது. ஆனால், கடவூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 220 மாணவர்கள் படிக்கிறார்கள். ஆனால், பள்ளிக் கட்டடம் இப்பவோ அப்பவோனு ஆட்டம் காட்டுது. பள்ளிக் கட்டடத்தின் மேற்கூரை ஓடுகள் உடைந்து விழுந்து பலமாதங்களாயிட்டு. அதை சரிபண்ணித்தாங்க.

 கடவூர் அரசு பள்ளி மாணவர்கள்
கடவூர் அரசு பள்ளி மாணவர்கள்
நா.ராஜமுருகன்

இல்லைன்னா, மாணவர்களின் உயிருக்கு உத்தரவாதமில்லைனு நாங்களும் பலமுறை மாவட்ட நிர்வாகத்துக்கும், இங்கு ஆய்வுக்கு வரும் கல்வித்துறை உயரதிகாரிகளுக்கும் மனு கொடுத்துப் பார்த்துட்டோம். யாரும் நடவடிக்கை எடுக்கலை. எந்த வருடமும் இல்லாமல் இந்த வருடம் கடவூர் பகுதியில் கனமழை பெய்துவருகிறது. இதனால், மழைநீர் இந்தப் பள்ளிக் கட்டடத்துக்குள் புகுந்துடுச்சு. இதனால், மாணவர்கள் அமர்ந்து பாடம் படிக்கமுடியலை. மதியம் அமர்ந்து சாப்பிட முடியலை. மழைத்தண்ணீர் உள்ளாற வர்ற அளவுக்கு இருக்குனா, இந்த கட்டடத்தின் லட்சணம் எப்படி இருக்கும்னு நீங்களே யூகிச்சுக்குங்க. இன்னமும் வெள்ளநீர் வடியலை. அதிகாரிகள் தலையிட்டு, இந்தக் கட்டடத்தை சரிபண்ணனும். மேற்கூரை ஓடுகளை வேயணும். இல்லைன்னா, மக்களைத் திரட்டி போராட்டம் நடத்துவோம்" என்றார் ஆக்ரோஷமாக!