Published:Updated:

ரொமிலா தாப்பர் - ஜே.என்.யூ சர்ச்சை: அறிவுத்துறையை அழிக்கும் முயற்சியா?

விகடன் டீம்

அரசியல் சட்டத்தின்படி ஏற்படுத்தப்பட்டுள்ள அமைப்புகளை ஒவ்வொன்றாக அழித்துக் கொண்டிருக்கும் மத்திய ஆட்சியாளர்கள், இப்போது அறிவுத்துறையையும் அழிக்கப்பார்க்கிறார்கள்.

JNU
JNU

தேசத்துரோகச் சட்டப் பிரிவில் மாணவர் தலைவர் கன்ஹையா குமார் கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, தேசிய அளவில் சர்ச்சையின் மையமாக விளங்கிய டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் (ஜே.என்.யூ), மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது. விரிவாக படிக்க க்ளிக் செய்க.... http://bit.ly/2kIQWE1

புகழ்பெற்ற வரலாற்று அறிஞரான ரொமிலா தாப்பர், ஜே.என்.யூ-வில் பல ஆண்டுகள் பணியாற்றியவர். ஜே.என்.யூ-வை வளர்த்தெடுத்த பேராசிரியர்களில் ஒருவர் என்ற பெருமைக்குரியவர். பணி ஓய்வுக்குப் பிறகு, கௌரவப் பேராசிரியர் (Professor Emeritus) என்ற அந்தஸ்து இவருக்கு வழங்கப்பட்டது. தற்போது, அந்த அந்தஸ்தைப் பரிசீலனை செய்வதற்காக, தன்விவரக் குறிப்பை (Curriculum vitae) அனுப்புமாறு ரொமிலா தாப்பரிடம் ஜே.என்.யூ நிர்வாகம் கேட்டிருப்பதுதான் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. பல்கலைக்கழகத்தின் இந்த நடவடிக்கையைக் கல்வியாளர்கள் பலரும் விமர்சித்துள்ளனர்.

அரசியல் சட்டத்தின்படி ஏற்படுத்தப்பட்டுள்ள அமைப்புகளை ஒவ்வொன்றாக அழித்துக் கொண்டிருக்கும் மத்திய ஆட்சியாளர்கள், இப்போது அறிவுத்துறையையும் அழிக்கப்பார்க்கிறார்கள்.
பேராசிரியர் அருணன்

ஜே.என்.யூ-வில் பணியாற்றிய பொருளாதாரப் பேராசிரியர் பிரபாத் பட்நாயக், "ஓய்வுபெற்ற பேராசிரியர்களுக்கு, கடந்த காலத்தில் அவர்கள் ஆற்றிய அளப்பரிய பங்குக்காகப் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படுவதுதான் கௌரவப் பேராசிரியர் என்கிற அந்தஸ்து. எதிர்காலத்தில் அவர்கள் ஆற்றப்போகிற பணிகளுக்காகவோ, ஆற்ற வேண்டிய பணிகளுக்காகவோ வழங்கப்படுவது அல்ல. ஜே.என்.யூ நிர்வாகத்தின் நடவடிக்கை முரண்பாடானதாக இருக்கிறது. கௌரவப் பேராசிரியர்களுக்கு எந்தவொரு சிறப்பு ஏற்பாடும் வழங்கப்படுவது கிடையாது. ஊதியமும் கிடையாது. இந்த அந்தஸ்து, அவர்களின் வாழ்நாளுக்கானது" என்று கூறியுள்ளார்.

"புகழ்பெற்ற ஒரு வரலாற்று அறிஞரைச் சிறுமைப்படுத்துகிற, இழிவுபடுத்துகிற முயற்சி" என்று விமர்சித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பேராசிரியர் அருணன், "இதை ஒரு தனிப்பட்ட விஷயமாகப் பார்க்க முடியாது. அரசியல் சட்டத்தின்படி ஏற்படுத்தப்பட்டுள்ள அமைப்புகளை ஒவ்வொன்றாக அழித்துக் கொண்டிருக்கும் மத்திய ஆட்சியாளர்கள், இப்போது அறிவுத்துறையையும் அழிக்கப்பார்க்கிறார்கள். அதற்கான ஆரம்பக்கட்டம்தான் இது என்று பார்க்க வேண்டியிருக்கிறது" என்றார்.

JNU
JNU

பல்கலைக்கழக விதிகளின்படி எடுக்கப்படும் வழக்கமான ஒரு நடவடிக்கைதான் என்று சொல்லும் ஒரு சாரார், இந்தப் பிரச்னை தேவையில்லாமல் அரசியல் ஆக்கப்படுகிறது என்கிறார்கள். இதுகுறித்து பா.ஜ.க-வின் அறிவுசார் பிரிவின் தமிழகத் தலைவரும் ஓய்வுபெற்ற பேராசிரியருமான என்.ராஜலட்சுமி, "கௌரவப் பேராசிரியர்கள் அனைவரும் ஒவ்வோர் ஆண்டும் தங்களின் பணிகள் குறித்த விவரங்களை மதிப்பீட்டுக்காகச் சமர்ப்பிக்க வேண்டும். தன்விவரக் குறிப்புடன் சேர்த்து அதைச் சமர்ப்பிக்க வேண்டும். அதுபோலத்தான், ஜே.என்.யூ-வில் நீண்டகாலம் கௌரவப் பேராசிரியர்களாக இருந்துவரும் ரொமிலா தாப்பர் உள்ளிட்ட சிலரிடம் தன்விவரக் குறிப்புகளைக் கேட்டுள்ளனர். இது வழக்கமான ஒன்றுதான். இதில் தவறு எதுவும் இல்லை" என்றார். > இதுதொடர்பான ஆனந்த விகடன் செய்திக் கட்டுரையை முழுமையாக வாசிக்க > https://www.vikatan.com/social-affairs/education/jawaharlal-nehru-university-faces-yet-another-controversy

> தொடர்புடைய செய்திக் கட்டுரை: ரொமிலா தாப்பர் - ஜே.என்.யு விவகாரம்: உண்மையில் நடந்தது என்ன?

https://www.vikatan.com/government-and-politics/education/romila-thapar-row-jnu-comes-up-with-explanation-on-changes