Published:Updated:

ஆதி திராவிடர் மாணவர்கள் 9 பேர் வெளிநாடுகளில் பிஎச்.டி படிப்பு; RTI ஆர்வலர் முயற்சியின் எதிரொலி!

ஆர்.டி.ஐ

கடந்த 10 ஆண்டுகளில் இத்திட்டம் மூலம் பயனடைந்து வெளிநாட்டில் பட்ட மேற்படிப்பு படிக்க சென்றவர்கள் 3 பேர் மட்டுமே. இந்நிலையில், இந்த எண்ணிக்கை இந்த ஓராண்டில் 9 பேராக அதிகரித்திருக்கிறது. `இது மிகவும் நம்பிக்கை அளிப்பதாக உள்ளது’ என்கிறார் மதுரையைச் சேர்ந்த RTI ஆர்வலர் கார்த்திக்.

ஆதி திராவிடர் மாணவர்கள் 9 பேர் வெளிநாடுகளில் பிஎச்.டி படிப்பு; RTI ஆர்வலர் முயற்சியின் எதிரொலி!

கடந்த 10 ஆண்டுகளில் இத்திட்டம் மூலம் பயனடைந்து வெளிநாட்டில் பட்ட மேற்படிப்பு படிக்க சென்றவர்கள் 3 பேர் மட்டுமே. இந்நிலையில், இந்த எண்ணிக்கை இந்த ஓராண்டில் 9 பேராக அதிகரித்திருக்கிறது. `இது மிகவும் நம்பிக்கை அளிப்பதாக உள்ளது’ என்கிறார் மதுரையைச் சேர்ந்த RTI ஆர்வலர் கார்த்திக்.

Published:Updated:
ஆர்.டி.ஐ

ஆதி திராவிட, பழங்குடியின மாணவர்கள் வெளிநாட்டில் பட்ட மேற்படிப்பு படிக்க தமிழக அரசு நிதியுதவி அளிக்கிறது. ஆனால், கடந்த காலங்களில் இத்திட்டத்தில் பயனடைந்த ஆதி திராவிட-பழங்குடி மாணவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது இருந்தது.

கார்த்திக்
கார்த்திக்

கடந்த 10 ஆண்டுகளில் இத்திட்டம் மூலம் பயனடைந்து வெளிநாட்டில் பட்ட மேற்படிப்பு படிக்க சென்றவர்கள் 3 பேர் மட்டுமே. இந்நிலையில், இந்த எண்ணிக்கை இந்த ஓராண்டில் 9 பேராக அதிகரித்திருக்கிறது. ’’இது மிகவும் நம்பிக்கை அளிப்பதாக உள்ளது’’ என்கிறார் மதுரையைச் சேர்ந்த ஆர்.டி.ஐ ஆர்வலர் கார்த்திக்.

இது குறித்து நம்மிடம் பேசியவர்,``பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்கள் வெளிநாட்டு பல்கலைக்கழங்களில் அறிவியல், பொறியியல், தொழில்நுட்பவியலில் முதுகலைப் பட்டப்படிப்பு படிக்க அரசு நிதியுதவி அளிக்கும் திட்டம் தமிழகத்தில் உள்ளது.

உயர் நீதிமன்ற மதுரைக்கிளை
உயர் நீதிமன்ற மதுரைக்கிளை

இதன் மூலம் எத்தனை மாணவர்கள் பயனடைந்துள்ளார்கள் என்பது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், 2012 முதல் 2020-ம் ஆண்டு வரையிலான விவரங்களை கேட்டிருந்தேன். அதற்குக் கிடைத்த பதிலில், 8 ஆண்டுகளில் விண்ணப்பித்த 18 பேரில் மிகவும் குறைவாக 3 பேர் மட்டுமே தேர்வாகி பயனடைந்திருந்தனர் என்பது தெரியவந்தது. இத்திட்டத்துக்காக கடந்த 8 ஆண்டுகளில் ரூ 2,65,83,000 ஒதுக்கியதில் ரூ 1,66,79,000 மட்டுமே செலவிடப்பட்டு, மீதி தொகை பயன்படுத்தப்படவில்லை என்று தெரிவித்திருந்தனர்.

இது, பட்டியலின மற்றும் பழங்குடி மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்பதால் ஆதி திராவிடர் நலத்துறைக்கு புகார் அனுப்பினேன். அதோடு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்குத் தாக்கல் செய்தேன்.

ஆர்.டி.ஐ
ஆர்.டி.ஐ

இதைத் தொடர்ந்து தமிழக அரசு, ஆதி திராவிடர் - பழங்குடியினர், கிறிஸ்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணவர்கள் வெளிநாடு சென்று உயர் கல்வி கற்பதற்கான உதவித்தொகை வழங்கும் திட்டம் மறு சீரமைக்கப்பட்டு TOFFEL/IELTS/GRE/GMAT ஆகிய ஒவ்வொரு தகுதித் தேர்விற்கும் 125 மாணவர்கள் வீதம் 500 மாணவர்களுக்கு 1.64 கோடி ரூபாய் நிதியில் பயிற்சி அளிக்கவும், மாணவர்கள் தாங்கள் விரும்பிய நாட்டு கல்வி நிலையங்களில் உயர் கல்வியைத் தொடர கல்வி உதவித் தொகையாக 3.60 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு 10 மாணவர்களுக்கு வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, 5.24 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதாகவும் அரசாணை வெளியிட்டது.

இதன்படி கடந்த 08.08.2022 வரை விண்ணப்பித்த 24 மாணவர்களில் 9 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு ரூ 1,99,33,542 கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த மாணவர்கள் பிரிட்டன், கொரியா உள்ளிட்ட நாடுகளிலுள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் படிக்கத் தேர்வாகியுள்ளனர்.

கார்த்திக்
கார்த்திக்

தமிழக வரலாற்றில் ஆதி திராவிடர் நலத்துறை ஏற்பாட்டில் ஒரே ஆண்டில் இத்தனை மாணவர்கள் வெளிநாட்டுக்குப் படிக்கச் செல்வது இதுவே முதல் முறையாகும். மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது இது குறைவுதான் என்றாலும், தமிழகத்தில் முன்பை விட இந்த எண்ணிக்கை அதிகம் என்பது சாதனைதான்.

வரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை அதிகரித்து அதிகமான பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்கள் அரசு உதவியுடன் வெளிநாடுகளுக்கு உயர்கல்வி கற்க செல்ல வேண்டும்" என்றார்.

கார்த்திக்கும், மாணவர்களுக்கும் வாழ்த்துகள்!