Published:Updated:

கற்கை நன்றே - 6 - மாற்றுப்பாலின மாணவர்களுக்கான உதவித்தொகை!

கற்கை நன்றே
பிரீமியம் ஸ்டோரி
கற்கை நன்றே

ஒவ்வொரு வருடமும் கல்வியாண்டு ஆரம்பிப் பதற்கு முன்னால், ப்ரீ மெட்ரிக் ஸ்காலர்ஷிப் தொடர்பான அறிவிப்பை மாநில அரசாங்கங் களும், யூனியன் பிரதேசங்களும் அறிவிக்கும்

கற்கை நன்றே - 6 - மாற்றுப்பாலின மாணவர்களுக்கான உதவித்தொகை!

ஒவ்வொரு வருடமும் கல்வியாண்டு ஆரம்பிப் பதற்கு முன்னால், ப்ரீ மெட்ரிக் ஸ்காலர்ஷிப் தொடர்பான அறிவிப்பை மாநில அரசாங்கங் களும், யூனியன் பிரதேசங்களும் அறிவிக்கும்

Published:Updated:
கற்கை நன்றே
பிரீமியம் ஸ்டோரி
கற்கை நன்றே

கல்வியின் முன் அனைத்து மாணவர்களும் சமம். அந்த அடிப்படையில், மாற்றுப்பாலின (Transgender) மாணவர்களின் கல்வி தடைப் படாமல் இருக்க, அரசாங்கத்தால் வழங்கப் படுகிற இரு உதவித்தொகைகள் பற்றி விளக்கு கிறார் தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவரும் கல்வியாளருமான டாக்டர் ராஜம்மாள்.

 ராஜம்மாள்
ராஜம்மாள்

ப்ரீ மெட்ரிக் ஸ்காலர்ஷிப் (Pre Matric Scholarship)

‘`வளரிளம் பருவத்தில், ஒரு மாணவரிடம் பாலின மாற்றம் (திருநங்கை அல்லது திருநம்பி) நிகழ்வதற்கான அறிகுறிகள் தென்பட்டால், இச்சமூகம் தெரிந்தோ, தெரியாமலோ அந்த மாணவரின் கல்வியை நிறுத்துவதற்கான அத்தனை தடைகளையும் ஏற்படுத்திவிடுகிறது. அத்தடைகளை மீறி அந்த மாணவர்கள் கல்வி கற்பதற்கு உதவி செய்வதற்காகவே, 7-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை ‘ப்ரீ மெட்ரிக் ஸ்காலர்ஷிப்’ வழங்கி வருகிறது அரசு.

மத்திய, மாநில அரசின் மற்றும் யூனியன் பிரதேச பள்ளிக்கூடங்கள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களில் படிக்கிற மாற்றுப் பாலின மாணவர்கள் அனைவரும் இந்த உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம். ஒரு மாநிலத்தில் பிறந்து, இன்னொரு மாநிலத்தில் படிக்கிற மாற்றுப்பாலின மாணவர்கள், தாங்கள் படிக்கிற மாநிலத்தில் இந்த உதவித் தொகைக்கு விண்ணப் பிக்கலாம்.

மத்திய அரசின் வழிகாட்டுதலுடன் வழங்கப்படுகிற இந்த உதவித்தொகையில் 75 சதவிகிதத்தை மத்திய அரசும், மீதமுள்ள 25 சதவிகிதத்தை மாநில அரசு அல்லது யூனியன் பிரதேசமும் இணைந்து வழங்குகின்றன.

ஒரு கல்வியாண்டின் 10 மாதங்களும் உதவித்தொகை வழங்கப்படும். விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு மாதம் 350 ரூபாயும், வீட்டிலிருந்து பள்ளிக்குச் சென்று வருபவர்களுக்கு மாதம் 150 ரூபாயும் வழங்கப்படுகிறது.

இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள், வேறு எந்த உதவித்தொகையும் பெற்றுக்கொண்டிருக்கக் கூடாது. பள்ளிக் கூடத்தில் நன்னடத்தையும் தேவையான வருகைப்பதிவும் கட்டாயம் இருக்க வேண்டும். ஒரு வருடம் தோல்வியடைந்துவிட்டால், அடுத்த வருடத்திலிருந்து இந்த உதவித்தொகை வழங்கப் பட மாட்டாது. பெற்றோர் அல்லது காப் பாளருக்கு ஆண்டு வருமானம் இரண்டரை லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். தவிர, ‘என் பிள்ளைக்குப் பாலினம் மாறுவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன’ என்பதை எழுத்து மூலம் பெற்றோர் அல்லது காப்பாளர் சான்றளிக்க வும் வேண்டும்.

கற்கை நன்றே - 6 - மாற்றுப்பாலின 
மாணவர்களுக்கான உதவித்தொகை!

ஒவ்வொரு வருடமும் கல்வியாண்டு ஆரம்பிப் பதற்கு முன்னால், ப்ரீ மெட்ரிக் ஸ்காலர்ஷிப் தொடர்பான அறிவிப்பை மாநில அரசாங்கங் களும், யூனியன் பிரதேசங்களும் அறிவிக்கும். முதல் முறையாக விண்ணப்பிக்கும்போது சம்பந்தப்பட்ட மாணவர்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தையும், தங்கள் கையெழுத் தையும் இணைத்து அனுப்ப வேண்டும். அடுத்தடுத்த வருடங்களில் உதவித்தொகையைப் புதுப்பிக்க இவை அவசியமில்லை. இந்த மாணவர்கள் 18-க்கு வயதுக்குக் குறைவான வர்கள் என்பதால், உதவித்தொகை இவர்களுடைய பெற்றோர் அல்லது காப்பாளரின் வங்கிக் கணக்குக்கு அனுப்பி வைக்கப்படும். மாணவர்கள் இந்த உதவித் தொகையைப் பெறுவதற்கான உதவிகளை பள்ளிக்கூடங்கள் செய்யும்.

போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் (Pos t Matric Scholarship)

மாற்றுப்பாலின மாணவர்கள் பத்தாம் வகுப்பு முடித்தவுடன் டிப்ளோமா அல்லது ஐ.டி.ஐ போன்ற தொழில்நுட்ப படிப்புகள் படிக்க விரும்பினாலும், பள்ளியிறுதி வகுப்பை முடித்து விட்டு கல்லூரியில் சேர்ந்து படிக்க விரும்பினாலும் வழங்கப்படுகிற உதவித்தொகை இது. மேலே குறிப்பிட்ட அனைத்து விதிமுறைகளும் இதற்கும் பொருந்தும். வீட்டிலிருந்து கல்லூரிக்குச் சென்று படிக்கிற மாணவர்களுக்கு மாதம்தோறும் 550 ரூபாயும், கல்லூரி விடுதியில் தங்கிப் படிக்கிற மாணவர்களுக்கு மாதம்தோறும் 1,200 ரூபாயும் வழங்கப்படும்.

இந்த உதவித்தொகை தொடர்பான அறிவிப்பு மே அல்லது ஜூன் மாதத்தில் முன்னணி பத்திரிகைகளிலும், அவற்றின் இணைய தளங் களிலும் வெளியிடப்படும். முதல் முறையாக விண்ணப்பிக்கிறீர்களா அல்லது புதுப்பிக்கிறீர் களா என்பதை விண்ணப்பத்தில் கட்டாயம் குறிப்பிட வேண்டும். உடன், புகைப்படம், கடைசி யாகத் தேர்ச்சி பெற்ற வகுப்பின் மதிப்பெண், பெற்றோர் அல்லது காப்பாளரின் வருமானச் சான்றிதழ் (அட்மிஷன் நேரத்தில் வாங்கியதாக இருக்க வேண்டும்), வங்கிக் கணக்கு எண் ஆகியவற்றை இணைக்க வேண்டும்.

பள்ளிக்கூடத்தில் ஒரு வருடம் தோல்வியுற்றால் அதன் பிறகு, உதவித்தொகை வழங்கப்பட மாட்டாது. ஆனால், கல்லூரியில் ஒரு வருடம் அரியர் வைத்தாலும், ஒரேயொரு முறை மட்டும் உதவித்தொகையைப் புதுப்பித்துக்கொண்டு அடுத்த வருடமும் உதவித்தொகையைப் பெறலாம். இரண்டாவது முறையாக அரியர் வைத்தால், அதன் பிறகு, உதவித்தொகை வழங்கப் பட மாட்டாது. உடல்நிலை காரணமாக ஒரு வருடம் தேர்வு எழுத முடியாமல் போனாலும் உதவித்தொகையைப் புதுப்பித்துக்கொள்ளலாம். முதல் வருடம் ஒரு சப்ஜெக்ட், இரண்டாம் வருடம் வேறு சப்ஜெக்ட் எடுத்தாலும் உதவித் தொகை நிறுத்தப்படும். ஒருவேளை கல்லூரி படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டால், அதுநாள் வரைக்கும் பெற்றுவந்த உதவித் தொகையைத் திருப்பியளிக்க வேண்டும்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism