Published:Updated:

கற்கை நன்றே - 9 - பள்ளிக் கல்வி முதல் மருத்துவக் கல்வி வரை...

கற்கை நன்றே
பிரீமியம் ஸ்டோரி
கற்கை நன்றே

கைகொடுக்கும் தனியார் உதவித்தொகைகள்!

கற்கை நன்றே - 9 - பள்ளிக் கல்வி முதல் மருத்துவக் கல்வி வரை...

கைகொடுக்கும் தனியார் உதவித்தொகைகள்!

Published:Updated:
கற்கை நன்றே
பிரீமியம் ஸ்டோரி
கற்கை நன்றே
 ராஜம்மாள்
ராஜம்மாள்
கற்கை நன்றே - 9 - பள்ளிக் கல்வி முதல் மருத்துவக் கல்வி வரை...

1. ராமன்கந்த் முஞ்சல் உதவித்தொகை - (Raman Kant Munjal Scholarship)

ஹீரோ குழுமம் (Hero Fincorp Group) வழங்கும் உதவித்தொகை இது. பத்தாம் வகுப்பு மற்றும் ப்ளஸ் டூவில் குறைந்தபட்சம் 80 சதவிகிதம் மதிப்பெண் பெற்ற மாணவர்கள், அடுத்து தொழிற்கல்வி மற்றும் உயர்கல்வி படிப்பதற்காக உருவாக்கப்பட்ட திட்டம் இது. உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும்போது, சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு 19 வயதுக்கு மேல் இருக்கக் கூடாது. தேர்வான மாணவர்களுக்கு, அவர்களுடைய படிப்பைப் பொறுத்து வருடத்துக்கு 40,000 ரூபாய் முதல் 3 லட்சம் வரை, மூன்று வருடங்களுக்கு உதவித்தொகையாக வழங்கப்படும். குடும்ப வருமானம் ஆண்டுக்கு 4 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். பிறப்பு சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ் மற்றும் வருமான சான்றிதழுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

கற்கை நன்றே - 9 - பள்ளிக் கல்வி முதல் மருத்துவக் கல்வி வரை...

2. டாக்டர் ரெட்டி அறக்கட்டளை சாஷாத் உதவித்தொகை - (Dr. Reddy’s Foundation Sashakt Scholarship)

அறிவியல் படிப்புகளில் மாணவிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்கான உதவித்தொகை இது. ப்ளஸ் டூ-வில் மெரிட்டில் தேர்ச்சிபெற்றிருப்பதோடு, இளங் கலையில் அறிவியல் படிப்புகளைத் தேர்ந்தெடுக்கிற மாணவிகள் ஆன்லைன் மூலம் இதற்கு விண்ணப்பிக்கலாம். மூன்று வருடங்களுக்கு ரூ.2,40,000 வரை வழங்கப்படும். ஆதார், மதிப்பெண் சான்றிதழ் மற்றும் வருமான சான்றிதழுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

கற்கை நன்றே - 9 - பள்ளிக் கல்வி முதல் மருத்துவக் கல்வி வரை...

3. டாடா குழுமத்தின் உதவித்தொகை திட்டம் - (The Tata Capital Pankh Scholarship Programme)

ஆறாம் வகுப்பு முதல் ப்ளஸ் டூ வரை படிக்கும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தில் 80 சதவிகிதம் உதவித்தொகையாக வழங்கப்படும். அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளியில் படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். முந்தைய வகுப்புகளில் குறைந்தபட்சம் 60 சதவிகிதம் மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும். குடும்பத்தின் ஆண்டு வருமானம் 4 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். டாடா குழுமத்தின் உதவித்தொகைகளைப் பெற, டிப்ளோமா, இளங்கலை பட்டப்படிப்புகள், தொழிற்துறை சார்ந்த இளங்கலை மாணவர்களுக்கும் (பொறியியல், மருத்துவம், சட்டம்) மேற்சொன்ன அதே தகுதிகள்தான் தேவை. அவர்கள் படிக்கிற துறைக்கேற்ப, செலுத்த வேண்டிய கட்டணத்தில் 80 சதவிகிதத்தை டாடா குழுமம் உதவித்தொகையாக வழங்கும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.