Published:Updated:

கற்கை நன்றே - 8 - பத்தாம் வகுப்பு முதல் பிஹெச்.டி வரை... தமிழக அரசின் சில உதவித்தொகைகள்!

உதவித்தொகைகள்
பிரீமியம் ஸ்டோரி
உதவித்தொகைகள்

அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரி களில் பிஹெச்.டி படிக்கிற மாணவர்களுக்கான உதவித்தொகை இது. மாதம் 3,000 ரூபாய் வழங்கப்படும்.

கற்கை நன்றே - 8 - பத்தாம் வகுப்பு முதல் பிஹெச்.டி வரை... தமிழக அரசின் சில உதவித்தொகைகள்!

அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரி களில் பிஹெச்.டி படிக்கிற மாணவர்களுக்கான உதவித்தொகை இது. மாதம் 3,000 ரூபாய் வழங்கப்படும்.

Published:Updated:
உதவித்தொகைகள்
பிரீமியம் ஸ்டோரி
உதவித்தொகைகள்
 ராஜம்மாள்
ராஜம்மாள்

இந்த இதழில் தமிழக அரசாங்கத்தால் வழங்கப்படுகிற சில உதவித்தொகைகள் பற்றி விளக்குகிறார் தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற கல்வியாளர் முனைவர் ராஜம்மாள்.

1. ஈ.வே.ரா நாகம்மை உதவித்தொகை

தமிழக அரசால் மாணவிகளுக்கு மட்டுமே வழங்கப்படுவது இது. அரசால் அங்கீகரிக்கப் பட்ட கல்லூரிகளில் முதுகலையில் கலை மற்றும் அறிவியல் பாடங்களைப் படிப்பவர் களுக்கு இந்த உதவித்தொகை கிடைக்கும். இதற்கு இளங்கலையில் குறைந்தபட்சம் 60 சதவிகித மதிப்பெண்ணுடன் தேர்வாகி யிருக்க வேண்டும். இந்த உதவித்தொகை மதிப்பெண்ணைப் பொறுத்தும், படிக்க விருக்கிற பாடப்பிரிவைப் பொறுத்தும் மாறு படும்.

உதவித்தொகைக்கான விண்ணப்பம் கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தில் வழங்கப் படும். சென்னையில் வசிக்கிற மாணவர்கள் நேரடியாக இயக்குநரகத்துக்குச் சென்று விண்ணப்பத்தை வாங்கி, பூர்த்தி செய்து, தங்கள் கல்லூரி மூலமாக அனுப்ப வேண்டும். மற்ற மாவட்டங் களில் இருக்கிற மாணவர்கள் சுய விலாசமிட்ட தபால் உறையை கல்லூரிக் கல்வி இயக்குநகரத்துக்கு அனுப்பி விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

2. பிஹெச்.டி ஸ்காலர்ஷிப் ஆஃப் தமிழ்நாடு

அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரி களில் பிஹெச்.டி படிக்கிற மாணவர்களுக்கான உதவித்தொகை இது. மாதம் 3,000 ரூபாய் வழங்கப்படும். முதுகலையில் 60 சதவிகித மதிப்பெண்ணுடன் தேர்ச்சியடைவதோடு, ஆராய்ச்சிப்படிப்பை நேரடி வகுப்பில் படிப்பவர்களுக்கே இந்த உதவித்தொகை வழங்கப்படும்.

இந்த உதவித்தொகைக்கான விண்ணப்பம் கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தில் வழங்கப் படும். சென்னையில் வசிக்கிற மாணவர்கள் நேரடியாக இயக்குநரகத்துக்குச் சென்று விண்ணப்பத்தை வாங்கி, பூர்த்திசெய்து, அதை தங்கள் கல்லூரி மூலமாக அனுப்ப வேண்டும். மற்ற மாவட்டங்களில் இருக்கிற மாணவர்கள் சுயவிலாசமிட்ட தபால் உறையை கல்லூரிக் கல்வி இயக்குநகரத்துக்கு அனுப்பி விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

கற்கை நன்றே - 8 - பத்தாம் வகுப்பு முதல் பிஹெச்.டி வரை... தமிழக அரசின் சில உதவித்தொகைகள்!

3. தந்தை பெரியார் நினைவு உதவித் தொகை

ஒவ்வொரு மாவட்டத்திலும், பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில், மதிப்பெண் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த இரண்டு மாணவர்களுக்கும் இரண்டு மாணவிகளுக்கும் வழங்கப் படுகிற உதவித்தொகை இது. பாலிடெக்னிக் போன்ற டெக்னிகல் சார்ந்த படிப்பு களுக்கு மூன்று வருடங்களுக்கு தலா 3,000 ரூபாய் வீதம் இந்த உதவித்தொகை வழங்கப் படுகிறது.

பிற்படுத்தப்பட்டோர், மிக வும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு மட்டுமேயானது இந்த உதவித் தொகை.

4. பேரறிஞர் அண்ணா நினைவு உதவித்தொகை

இது, ஒவ்வொரு மாவட்டத்திலும் ப்ளஸ் டூ தேர்வில் மதிப்பெண் அடிப்படையில் முதலிரண்டு இடங்களைப் பிடித்த பிற் படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர் மரபினர் பிரிவுகளைச் சேர்ந்த மாணவர் களுக்கும், மாணவிகளுக்கும் வழங்கப்படுகிற உதவித்தொகை. வருடத்துக்கு 3,000 ரூபாய் வீதம் நான்கு வருடங்களுக்கு வழங்கப் படும்.

மருத்துவம், பொறியியல், சட்டம் போன்ற புரொஃப ஷனல் படிப்புகளுக்கு மட்டுமே யானது இந்த உதவித்தொகை.

மேற்குறிப்பிட்ட 3 மற்றும் 4-வது உதவித்தொகைகளைப் பெற, உங்கள் மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் இருக்கிற பிற்படுத்தப் பட்டோர், சிறுபான்மையினருக்கான நல வாரியத்தை அணுகி விண்ணப்பப்படிவத் தைப் பெற்று, பூர்த்தி செய்து, தாங்கள் படிக்கிற கல்லூரி வழியே அனுப்ப வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism