Published:Updated:

``411-ஐ 4 ஆல் வகுத்தால் என்ன வரும்?'': கணிதம் தெரியாமல் விழித்த தலைமை ஆசிரியர்... கடுப்பான கலெக்டர்!

கணிதம் தெரியாமல் குழம்பிய தலைமை ஆசிரியர் ( twitter )

மாணவர்களுக்குத்தான் மறந்திருக்கும். மாணவர்களுக்கு இப்போது இந்தக் கணிதத்தை விளக்குங்கள் எனத் தலைமை ஆசிரியரிடம் சொல்ல, தலைமை ஆசிரியர் பேந்தப் பேந்த விழித்துள்ளார்.

``411-ஐ 4 ஆல் வகுத்தால் என்ன வரும்?'': கணிதம் தெரியாமல் விழித்த தலைமை ஆசிரியர்... கடுப்பான கலெக்டர்!

மாணவர்களுக்குத்தான் மறந்திருக்கும். மாணவர்களுக்கு இப்போது இந்தக் கணிதத்தை விளக்குங்கள் எனத் தலைமை ஆசிரியரிடம் சொல்ல, தலைமை ஆசிரியர் பேந்தப் பேந்த விழித்துள்ளார்.

Published:Updated:
கணிதம் தெரியாமல் குழம்பிய தலைமை ஆசிரியர் ( twitter )

பள்ளிக்கூட பிள்ளைகளுக்கு கற்றுத் தர வேண்டியது ஆசிரியரின் பொறுப்பு. மாணவர்களுக்குப் பாடத்தில் ஏதேனும் சந்தேகம் இருந்தாலோ, பாடம் விளங்கவில்லை என்றாலோ, அதைப் புரிய வைக்க வேண்டியதும் ஆசிரியரின் கடமை. ஆனால், அந்த ஆசிரியருக்கே ஒன்றும் தெரியவில்லை என்றால் என்ன செய்வது?

ஒருசில பள்ளிகளில் அடிப்படை கற்றல் குறித்த புரிதல்கூட இல்லாமல் ஆசிரியர்கள் சிலர் பணிபுரிந்து கொண்டுதான் வருகிறார்கள். மாதம்தோறும் வெறும் சம்பளத்தை மட்டும் வாங்கிக்கொண்டு, குழந்தைகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிவிடுகிறார்கள்.

கணக்குப் பயிற்சி
கணக்குப் பயிற்சி

இது போன்ற சம்பவம் ஒன்று சமீபத்தில் அரங்கேறியுள்ளது. அடிப்படை கணிதம்கூட தெரியாமல் இருந்த ஆசிரியர், வசமாகச் சிக்கிய சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஆரம்பப்பள்ளிக்குச் சென்ற பாலகாட் கலெக்டர் கிரிஷ் குமார், பள்ளியின் நிலை மற்றும் பாடங்கள் எவ்வாறு கற்றுத் தரப்படுகின்றன என்பது குறித்து ஆய்வு செய்தார்.

வகுப்பறையில் உள்ள மாணவர்களோடு உரையாடியபோது, குழந்தைகளின் அறிவுத் திறனைச் சோதிக்க, கரும்பலகையில் 411 ஐ 4 ஆல் வகுக்கச் சொல்லி கணிதம் ஒன்றைப் போட்டுள்ளார். மாணவர்களால் அந்தக் கணிதத்தைச் செய்ய முடியாமல் போனது. லாக்டௌன் காலத்தில் கணக்குப் பாடத்தை குழந்தைகள் மறந்திருப்பார்கள் என ஆசிரியர்களும், தலைமை ஆசிரியரும் கலெக்டரிடம் கூறியுள்ளனர்.

சரி, மாணவர்களுக்குத்தான் மறந்திருக்கும். மாணவர்களுக்கு இப்போது இந்தக் கணிதத்தை விளக்குங்கள் எனத் தலைமை ஆசிரியரிடம் சொல்ல, தலைமை ஆசிரியர் பேந்தப் பேந்த விழித்துள்ளார்.

இதைப் பார்த்து அதிர்ந்துபோன கலெக்டர், சின்ன கணக்கைக் கூட போட முடியவில்லை என்றால், உங்களால் எப்படி மாணவர்களுக்கு கற்பிக்க முடியும் எனக் கடிந்துள்ளார். அதைத் தொடர்ந்து, கல்வித்துறையின் மூலம் தலைமை ஆசிரியர் பொறுப்பிலிருந்து அவரை விலக்கியதோடு, ஊதிய உயர்வையும் நிறுத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவம் தற்போது நெட்டிசன்களின் கவனத்தைப் பெற்று வருவதோடு, பலரும் தலைமை ஆசிரியருக்கு எதிரான தங்களின் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.