Published:Updated:

கற்றனைத் தூறும் அறிவு: அதிகாரங்கள் குவிப்பு... இது என்ன ஜனாதிபதி ஆட்சியா?

கற்றனைத் தூறும் அறிவு
பிரீமியம் ஸ்டோரி
கற்றனைத் தூறும் அறிவு

மனித உரிமைச் செயற்பாட்டாளர்

கற்றனைத் தூறும் அறிவு: அதிகாரங்கள் குவிப்பு... இது என்ன ஜனாதிபதி ஆட்சியா?

மனித உரிமைச் செயற்பாட்டாளர்

Published:Updated:
கற்றனைத் தூறும் அறிவு
பிரீமியம் ஸ்டோரி
கற்றனைத் தூறும் அறிவு

இன்றைய சூழலில், கல்வி என்பது அறிவு வளர்ச்சிக்கு மட்டுமின்றி நல்ல வாழ்க்கை அமைவதற்கான கருவியும்கூட. பா.ஜ.க அரசு அமையும் போதெல்லாம், கல்வித் துறையில் அந்த அரசு ஏற்படுத் தும் சர்ச்சைக்குரிய மாற்றங்கள், எப்போதுமே மக்களின் விமர்சனத்துக்கும் ஐயத்துக்கும் உள்ளாகியுள்ளன.

இந்த அறிக்கை, அளவில் பெரியதாக இருப்பதுடன் தெளிவான கருத்துகளையும் முன்வைக்கவில்லை. இதனால், பல்வேறு குழப்பங்களையும் ஐயங்களையும் ஏற்படுத்து கிறது. புதிதாக ஒரு கொள்கை அறிக்கை முன்வைக்கப்படும்போது, அதில் இதற்கு முந்தைய அறிக்கைகள் முன்வைத்தவற்றின் நிறைகுறைகள், அவை எந்த அளவுக்கு முந்தைய அரசுகளால் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பன குறித்த விவரங்களைப் பதிவுசெய்வது அவசியம். மேலும் இன்றைய சமூக, பொருளாதார மாற்றங்களுக்கு ஏற்றபடி பழையவற்றைக் கழித்தலையும் புதியவற்றைப் புகுத்தலையும் செய்ய வேண்டும். கஸ்தூரிரங்கன் குழு அறிக்கை, அந்த வகையில் தோல்வியடைந் துள்ளது.

சர்ச்சைக்கு என்ன பதில்?

மோடி தலைமையில் 2014-ல் பா.ஜ.க அரசு அமைக்கப்பட்டபோது, டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியம் தலைமையில் கல்வி தொடர்பாக ஒரு குழு அமைக்கப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையிலும் வழிகாட்டலிலும் உருவாக்கப்பட்டதாக அறிமுகப்படுத்திக் கொள்ளும் கஸ்தூரிரங்கன் அறிக்கை, முந்தைய அறிக்கை முன்வைத்த சர்ச்சைக்குரிய விஷயங்கள் குறித்து காட்டும் மௌனம் ஏன்? எடுத்துக்காட்டாக, பத்தாம் வகுப்பில் கற்றல் திறனைப் பொறுத்து மாணவர்களைத் தரம் பிரித்து, திறன் குறைவானவர்களை தொழில் பயிற்சிக்குத் திருப்புவது சுப்பிரமணியம் குழு முன்வைத்த ஒரு பரிந்துரை. அது பெரும் கண்டனத்துக்கு உள்ளாகியது. இதுகுறித்து கஸ்தூரிரங்கன் அறிக்கை மௌனம் சாதிக்கிறது.

அதே நேரத்தில், இந்த அறிக்கை `9-ம் வகுப்பிலேயே மாணவர்கள் விருப்பப் பாடங்களைத் தேர்வுசெய்ய வேண்டும்’ என்கிறது. இந்த வயதில், தன் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் ஒரு முடிவை குழந்தைகளால் எடுக்க முடியாது. சுப்பிரமணியம் குழு, `தாய்மொழியில்தான் கல்வி அமைய வேண்டும்’ என்பதை உறுதியாகச் சொன்னது. கஸ்தூரிரங்கன் குழுவோ, ‘சாத்திய மானால், குறைந்தபட்சம் 5 வயது வரையாவது மாணவர்கள் தாய்மொழியில் கல்வி கற்க வேண்டும். எட்டாம் வகுப்பு வரை தாய்மொழியில் கற்க முடிந்தால் நல்லது’ என்று விருப்பத்தின் அடிப்படையில் கூறுவது, முந்தைய குழு தாய்மொழிவழி கல்விக்கு அளித்த முக்கியத் துவத்தை நீர்க்கச் செய்கிறது.

கற்றனைத் தூறும் அறிவு: அதிகாரங்கள் குவிப்பு... இது என்ன ஜனாதிபதி ஆட்சியா?

தவிர, இப்போது மும்மொழிக்கொள்கை முன்மொழியப்படுகிறது. அதில் ‘இந்தி’ கட்டாயம் என்றது. தமிழகத்தில் எதிர்ப்பு வலுத்தவுடன் அந்த நிபந்தனை நீக்கப்பட்டது. எனினும், மூன்று மொழிகள் கட்டாயம் என்பது தொடர்கிறது. ஆங்கிலம் தவிர மற்ற இரண்டும் இந்திய மொழிகளாக இருக்கவேண்டும் என்பது நிபந்தனை. வேறு நாட்டு மொழிகளைக்கூட கற்றுக்கொள்ளலாம். அது நான்காவது மொழியாகத்தான் இருக்க முடியும் என்கிறது அறிக்கை. அதற்கு, ‘மூன்று வயதுக்குள் குழந்தை களுக்கு 80 சதவிகித மூளை வளர்ச்சி ஏற்பட்டு விடுகிறது’ என்றும் காரணம் கூறுகிறது அறிக்கை.

கல்வி உரிமைச் சட்டத்தில் அளிக்கப்படும் கல்வி உரிமை, இப்போதுள்ள சட்டத்தின்படி 8-ம் வகுப்பு வரை வரையறுக்கப்பட்டுள்ளது. இனி அது 12-ம் வகுப்பு வரை நீட்டிக்கப்படுவது வரவேற்கத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மொழிக் குடும்பம்... குளறுபடி!

‘ஒரே நாடு... ஒரே தேர்தல்’, ‘ஒரே நாடு... ஒரே ரேஷன் கார்டு’ வரிசையில், கஸ்தூரிரங்கன் குழுவின் ‘ஒரே நாடு... ஒரே பாடநூல்’ என்கிற அடிப்படையில் NCERT பாடத்திட்டத்தை இந்தியா முழுவதும் கட்டாயமாக்குவதும் கவனிக்கத்தக்கது. 6, 7, 8-ம் வகுப்புகளிலேயே தொழில் திறமையை வளர்க்கும் பயிற்சிகளும் அளிக்கப்படுமாம். அவை என்ன வகையான பயிற்சி என்பதை அரசும் உள்ளூர்ச் சமூகமும் தீர்மானிக்கும் என்கிறது அறிக்கை. கல்வி வளர்ச்சி தொடர்பான செயல்பாடுகளில் ‘உள்ளூர்ச் சமூகம்’ மற்றும் ‘ஏற்கெனவே கல்வி வளர்ச்சி அடைந்த உள்ளூர்ச் சமூகம்’ ஆகியவற்றின் உதவிகளைப் பெறுதல் என்பதற்கு இந்த அறிக்கை முக்கியத்துவம் கொடுப்பதை, கல்விக்கொள்கைகளை தொடர்ந்து மதிப்பிட்டு வரும் பேராசிரியர் கும்கும் ராய் போன்றோர் கண்டித்துள்ளனர். இந்தியாவைப் பொறுத்தவரை ‘சமூகம்’ என்கிற அலகு பொருளற்றது. இங்கே பல்வேறு சாதிகளாகப் பிளவுண்ட ‘சமூகங்கள்’ தான் உண்டே தவிர, ‘சமூகம்’ என்று தனியாக ஒன்று கிடையாது என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

‘இந்தியச் சமூகம்’, ‘இந்தியப் பண்பாடு’, ‘சம்ஸ்கிருதச் சிறப்பு’ ஆகியவற்றை இந்த அறிக்கை உயர்த்திப் பிடிக்கிறது. ‘பல்வேறு கல்வித் துறைகளைக் கற்பித்த நாளந்தா, தட்சசீலம் முதலான பல்கலைக்கழகங்கள், குருகுலக் கல்வி முறை ஆகியவற்றை இந்தியாவின் பாரம்பர்யக் கல்விமுறை என்று பேசுகிறது. குருகுலக் கல்வியையும் நாளந்தா மற்றும் தட்சசீலம் முதலான பல்கலைக்கழகங்களையும் ஒரே நிலையில் வைத்துப் புகழ்வது அபத்தம். பௌத்த மரபில் வந்த நாளந்தா, தட்சசீலம் பல்கலைக்கழகங்கள் 17-ம் நூற்றாண்டில் உருவான ஐரோப்பியப் பல்கலைக்கழகங்களுக்கு முன்னோடியாக இருந்தவை.

இந்திய மொழிகளுக்கிடையே உள்ள அறிவியல்பூர்வமான ஒற்றுமை, ஒரே மாதிரியான இலக்கணம், ஒலிப்புமுறைகள், சொற்களஞ்சியம், அறிவியல் அடிப்படையில் அமைந்த அகர வரிசை, எழுத்துருக்கள் ஆகியவற்றை அறிக்கை வியந்து போற்றுகிறது. சம்ஸ்கிருதம் மற்றும் இதர செவ்வியல் மொழிகளிலிருந்து இந்திய மொழி களின் சொற்களஞ்சியங்கள் உருவானதையும் வியக்கிறது. ஆனால், மறந்தும்கூட இந்திய மொழிகள் ஒரே மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை அல்ல; குறைந்தபட்சம் இங்கே மூன்று மொழிக் குடும்பங்கள் இருந்தன என்பதைக் குறிப்பிடவில்லை. சம்ஸ்கிருதமும் திராவிட மொழிகளும் முற்றிலும் வேறுபட்ட மூலங்களைக்கொண்டவை என்பதையும் சம்ஸ்கிருதம் இந்தோ ஐரோப்பியப் பின்புலம் கொண்டது என்பதையும் சொல்லவில்லை. ஒலிப்புமுறை, எழுத்து வடிவம், இலக்கணம் ஆகியவற்றிலும் இந்த இரண்டு மொழிக் குடும்பங்களும் முற்றிலும் வேறுபட்டவை. மேசை என்றால் ஆண் பால்; நாற்காலி என்பது பெண் பால் என்பன போன்ற சம்ஸ்கிருத இலக்கண முறை திராவிட மொழிகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை.

உரசும் உயர் கல்வி அமைப்புகள்

சுப்பிரமணியம் குழு அறிக்கைக்கும் இந்த அறிக்கைக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் உயர் கல்வியில் பல மாற்றங்கள் செய்யப் பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, பல்கலைக் கழகங்களுக்கு நிதி நல்கை அளிப்பது மட்டுமல்லாமல், அவற்றுக்கு ஏற்பு வழங்குதல் முதலான அதிகாரங்களையும் பெற்றிருந்த பல்கலைக்கழக மானியக் குழு, வெறுமனே நிதி நல்கைக்கான குழுவாக ஆக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக, தேசிய உயர் கல்வி ஒழுங்காற்று அமைப்பு (NHERA) இனி பல்கலைக் கழகங்களைக் கட்டுப்படுத்தும் என்கிறார்கள்.

உயர்கல்வி நிதி நல்கை முகமை என்னும் பெயரில் பல்கலைக்கழகங்களுக்குக் கடன் கொடுக்கும் நிதி முகமை ஒன்றும் அறிவிக்கப் பட்டிருக்கிறது. கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் முதல் நிலை, இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை எனத் தரப்படுத்தப்பட்ட சுயாட்சி மற்றும் பெரும் நிதி ஆதரவுடன்கூடிய உயர் சிறப்புப் பல்கலைக்கழகங்கள் (Institutions of Eminence) அமைக்கவும் பரிந்துரைத்துள்ளது.

பல்கலைக்கழகங்களை தரநிர்ணயம் செய்யும் ‘நாக்’ (NAAC) அமைப்புக்குப் பதிலாக, மேலும் அதிகாரப்படுத்தப்பட்ட ஒரு புதிய ‘நாக்’ அமைப்பை முன்வைக்கிறது. அதில், தேசிய உயர் கல்வித் தகுதி நிர்ணய அமைப்பு மற்றும் மேலாண்மை, ஒழுங்காற்றுப்படுத்தல், நிதி நல்கை, ஏற்பு வழங்கல் முதலான உயர் கல்வி தொடர்பான நான்கு முக்கிய அதிகாரங்களையும் உள்ளடக்கிய ராஷ்டிரிய சிக்‌ஷா ஆயோக் என்னும் நிறுவனத்தை இந்தக் குழு முன்வைக்கிறது.

இப்படிப் பல அமைப்புகள், அவற்றுக்கு இடையே போட்டி, தரப்படுத்துதல், பெரிய அளவில் தனியார் பல்கலைக்கழகங்கள் அறிவிக்கப்பட்ட பின்பு அந்த அறிக்கையில் ‘அரசாங்க நிதி உதவியுடன்கூடிய உயர் கல்வி’ பற்றிப் பேசப்பட்டுள்ளது. `இது புதிராக உள்ளது’ என்று டெல்லியில் இருக்கும் தேசிய கல்வித் திட்டமிடுதல் மற்றும் நிர்வாக அமைப்பைச் சேர்ந்த சுதான்ஷு பூஷன் முதலான கல்வி யாளர்கள் விமர்சித்துள்ளனர். ‘ஒருவேளை பல ஆயிரம் கோடிகளை அம்பானியின் ‘ஜியோ’ முதலான பல்கலைக் கழகங்களுக்கு அள்ளிக் கொடுப்பதைத்தான் ‘அரசாங்க உதவியுடன்கூடிய உயர் கல்வி’ என்று அறிக்கை சொல்கிறதோ’ என்றும் கல்வியாளர்கள் சந்தேகம் எழுப்புகி றார்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக உச்ச அதிகாரம் படைத்த அமைப்பாக ‘ராஷ்டிரிய சிக்‌ஷா ஆயோக்’கை உருவாக்கி, சர்வ அதிகாரங்களும் பிரதமரின் கீழ் குவிக்கப்படுவது என்பது `நாடு, ஜனாதிபதி ஆட்சிமுறையை நோக்கிச் செல்கிறதோ!’ என்கிற ஐயத்தையும் நமக்கு ஏற்படுத்துகிறது.