கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் விஷ்ணு (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரின் பெற்றோர், பிரபல தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள். ப்ளஸ் டூ தேர்வில் 600-க்கு 502 மதிப்பெண் பெற்ற விஷ்ணு, கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி தேர்ச்சிபெற்றார். அவருக்கு தனியார் கல்லூரியில் மேனேஜ்மென்ட் கோட்டாவில்தான் இடம் கிடைத்தது. பெற்றோர் சேர்க்கத் தயாராக இருந்தும் ‘வேண்டாம்’ என மறுத்துவிட்டு, இந்த ஆண்டு நீட் தேர்வு எழுத விண்ணப்பித்திருக்கிறார்.

‘‘எனக்கு டாக்டருக்குப் படிக்கவெல்லாம் ஆசையில்லை. என்ன படிக்கணும்னுகூட நான் யோசிக்கலை. என் அப்பாவும் அம்மாவும் டாக்டர்ங்கிறதால நானும் டாக்டர் ஆகணும்னு அழுத்தம் கொடுக்கிறாங்க. ஆனா, என்னால நீட் தேர்வுக்குத் தயாராக முடியலை. எவ்வளவு முயற்சி செஞ்சாலும், குறிப்பிட்ட மார்க்குக்கு மேல எடுக்க முடியாது. இதைச் சொன்னா புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்க’’ என்று வருத்தப்படுகிறார் விஷ்ணு.

வீட்டில் பெற்றோர் டாக்டர் என்றால், பிள்ளையும் டாக்டர் ஆக வேண்டும் என்ற கனவு இயல்புதான். ஆனால், நீட் தேர்வு சொல்ல முடியாத மன அழுத்தத்தை பிள்ளைகளுக்கு ஏற்படுத்தியிருக்கிறது என்பதை கவனித்தேயாக வேண்டும். ஏற்கெனவே நம் கல்விச்சூழல் மிகவும் சிக்கலாக இருப்பதாக கல்வியாளர்கள் சொல்கின்றனர். குழந்தைகள் விரும்பும் இடமாக நம் கல்விக்கூடங்கள் இல்லை. தனியார் பள்ளிகளில் நிலைமை இன்னும் மோசம். ஒன்றாம் வகுப்புப் பிள்ளைகளுக்கெல்லாம் வீட்டுப்பாடம் கொடுக்கின்றனர். காலை 8 மணிக்கு பள்ளிக்குள் நுழையும் குழந்தைகள் மாலை 5 மணிக்கு வீட்டுக்கு வந்தால், இரண்டு மணி நேரம் வீட்டுப்பாடம். பிறகு, உணவும் உறக்கமும்தான் பிள்ளைகளுக்கு வாய்க்கின்றன. குழந்தைகளின் மனஅழுத்தம் குறித்து இங்கே பேசப்படுவதுகூட இல்லை. அது குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கையை பாதிக்கும் என்கிற தெளிவு பெற்றோர்களிடமும் இல்லை. இப்படி கடும் மன நெருக்கடியோடு வளரும் குழந்தைகளை, நீட் மாதிரியான போட்டித்தேர்வுகள் இன்னும் உளவியல்ரீதியாக வதைக்கின்றன.

‘‘போட்டித்தேர்வுகள் ஆரம்பிக்கும் சமயங்களில் எங்களிடம் நிறைய மாணவர்கள் மனநல ஆலோசனைக்காகக் குவிகின்றனர்’’ என்கிறார் மனநல மருத்துவர் சிவபாலன். மாணவர்களுக்கான உளவியல்குறித்து தொடர்ந்து எழுதிவருபவர் இவர்.

‘‘நீட் தேர்வு நடக்கும் சமயங்களில் நிறைய பெற்றோர் தங்கள் பிள்ளைகளை கவுன்சலிங் அழைத்து வருவார்கள். சில மாணவர்கள் தனியாக வந்து சிகிச்சை பெற்றுச் செல்வார்கள். பெற்றோர் அழைத்துவரும்போது அவர்களின் மன உளைச்சல்தான் அதிகம் வெளிப்படும். ‘என் பிள்ளை படிக்கவே மாட்டேங்கிறா. ஜாலியா இருக்கா, திட்டமிடவே மாட்டேங்கிறா’ எனப் புலம்பித் தீர்ப்பார்கள்.

பெற்றோர் இல்லாமல் தானாக வந்து சந்திக்கும் மாணவர்கள், மிகவும் நெருக்கடியாக உணர்வதாகச் சொல்வார்கள். பள்ளியில் கொடுக்கும் பாடங்களைப் படிக்க வேண்டும், அதுபற்றி திட்டமிட வேண்டும், நீட் கோச்சிங் வகுப்புக்குச் செல்ல வேண்டும், அங்கே அவர்கள் தரும் அட்டவணையைப் பின்பற்ற வேண்டும். அதிலும் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர் என்றால், இன்னும் பிரச்னை. தனியே டியூஷன்வேறு வைக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 24 நேரம் போதாமல் பதின்மவயதுப் பிள்ளையை மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் சித்ரவதை செய்கிறது நீட்.

நீட் பயிற்சி மையங்களைப் போன்ற மனஅழுத்தம் தரும் இடம் வேறு எதுவும் இருக்க முடியாது. ஒவ்வொரு மாணவருக்கும் ஒவ்வொரு மாதிரியான கற்றல்திறன் இருக்கும். ஒருவர் மிக வேகமாகப் படித்துவிடக்கூடிய பாடத்தை இன்னொருவர் மெதுவாகத்தான் படிப்பார். ஆனால், பயிற்சி மையங்களோ எல்லோருக்கும் ஒரே மாதிரியாக பயிற்சி கொடுக்கின்றன.

இந்த அழுத்தம், நன்றாகப் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களின் திறனைக்கூட குறைத்துவிடும். ‘ஆரம்பத்துல நல்லாதான் டாக்டர் படிச்சிட்டிருந்தா, எக்ஸாம் நெருங்கிற தாலேயோ என்னவோ, இப்பெல்லாம் பயப்படுறா!’ என்று மீண்டும் பிள்ளையின் மீதே பெற்றோர் குற்றம் சுமத்துவார்கள்” என்கிறார் அவர்.

பல கோச்சிங் நிறுவனங்கள், தனியார் பள்ளிகளுடன் ஒப்பந்தம் போட்டுக்கொள்கின்றன. கமிஷன் இங்கே விளையாடுகிறது. ஆறாம் வகுப்பிலிருந்து பயிற்சிகள் தொடங்குகின்றன. ஓர் ஆண்டுக்கான கட்டணம், வகுப்புக்கு ஏற்றவாறு அறுபதாயிரம் ரூபாய் முதல் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை! கோச்சிங் சென்டருக்கு பள்ளி நிர்வாகம் பெற்றோரின் தொடர்பு எண்களைத் தந்துவிடும். கோச்சிங் சென்டர் நடத்துபவர்கள் வாரம் ஒருமுறை போன் செய்து, பெற்றோரின் மனதைக் கரைக்கிறார்கள்.

‘‘எப்படியும் வாரத்துக்கு ரெண்டு முறை அந்தப் பொண்ணு போன் பண்ணிடும். ‘உங்க பிள்ளை டாக்டர் ஆகுறது எங்க பொறுப்பு. போட்டி அதிகமிருக்கிறதால, ஆறாம் வகுப்புல இருந்து பயிற்சி எடுத்துக்கிறது நல்லது. தைரியமா பணம் கட்டுங்க... உங்க பிள்ளையோட எதிர்காலத்தை நாங்க பார்த்துக்கிறோம்’னு ஒவ்வொரு வாரமும் ஒரு கதை சொல்லுது. ‘எம்புள்ளைய டாக்டருக்கு படிக்க வைக்கிற திட்டமே இல்லம்மா’னு சொன்னாக்கூட விடமாட்டேங்குது. ‘அப்போ, ஐ.ஐ.டி நுழைவுத்தேர்வு கோச்சிங்ல சேத்துவிடுங்க’னு டார்ச்சர் பண்ணுது’’ என்கிறார் அம்பத்தூரைச் சேர்ந்த பெண்மணி ஒருவர்.

ஆறாம் வகுப்பிலிருந்து நீட் தேர்வுக்குப் பயிற்சி பெறும் ஒரு குழந்தையின் மனநிலையை நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது. வழக்கமான பள்ளிப்பாடங்கள், தேர்வுகள், வீட்டுப்பாடங்கள், கூடவே நீட் கோச்சிங். நாம் யாரை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்... ஆரோக்கிய மான மாணவ சமுதாயத்தைத்தானா?

இதுபோன்ற மாணவர்கள், ஒருகட்டத்தில் சுயமாகச் சிந்திக்கும் திறனையே இழக்கின்றனர். நுழைவுத் தேர்வு எழுதக்கூட பெற்றோர் இருவரும் துணைக்கு வரவேண்டும்.அடுத்தகட்ட மேற்படிப்பு படிக்க வேண்டும் என்றாலும், பெற்றோர்தான் துறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இன்னொரு விபரீதமும் இருக்கிறது. நீட் தேர்வை இரண்டாவது முறை எழுதும் மாணவர்கள், தங்களிடம் அதிகம் வருவதாக மனநல ஆலோசகர்கள் சொல்கின்றனர். மருத்துவம் படிக்க வேண்டும் என்பது மட்டுமே சில மாணவர்களின் குறிக்கோளாக இருக்கும். அதனால், நீட் தேர்வில் தேர்ச்சிபெறும் வரை தேர்வு எழுத வேண்டும் என இரண்டு, மூன்று முறை முயல்வார்கள். கோச்சிங் செலவு எகிறும் என்பதால், ஒவ்வொரு முறையும் தேர்ச்சிபெற்றுவிட வேண்டும் என்கிற பதற்றம் அவர்களிடம் இருக்கும்.

விழுப்புரம் பெரவளூரைச் சேர்ந்த மாணவி பிரதீபா, முதல்முறை தேர்வு எழுதியபோது தனியார் கல்லூரியில் மட்டுமே இடம் கிடைத்தது. இரண்டாவது முறை தேர்வு எழுதி அதில் தேர்ச்சிபெறாததால், மனமொடிந்து தவறான முடிவைத் தேடிக்கொண்டார்.

பிரதீபா போன்ற கிராமப்புறப் பின்னணியில் இருந்து நீட் தேர்வு எழுத வரும் மாணவர்கள் வேறு பிரச்னைகளையும் எதிர்கொள்ள வேண்டி யிருக்கிறது. அன்றாடம் உழைத்துச் சாப்பிடும் குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகள் இவர்கள். இவர்களின் மருத்துவக் கனவுக்கு, பொருளாதாரம் பெரும் நெருக்கடியாக இருக்கிறது. பெரும்பாலான தந்தைகள் குடிபோதைக்கு அடிமையாகிக் கிடக்க, நெருக்கடியான குடும்பச் சூழலில் படித்து மேலெழுந்து வருபவர்கள் இவர்கள்.

பெண்பிள்ளைகளின் நிலைமைதான் இன்னும் மோசம். ஒருமுறை நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெறாவிட்டால், படித்தது போதும் என்று திருமணம் செய்துவைத்துவிடும் பெற்றோரும் இருக்கின்றனர்.

மதுரையைச் சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத மாணவி, ப்ளஸ் டூ தேர்வில் 1200-க்கு 1165 மதிப்பெண் பெற்றவர். மருத்துவர் ஆக வேண்டும் என்கிற மகளின் கனவுக்கு, தந்தை எந்தவிதமான தடையும் விதிக்கவில்லை. ஆனால், நீட் தேர்வுக்காக தன் மகள் படித்த காலத்தில் குடும்பம் மனரீதியாக பாதிக்கப்பட்டதாகச் சொல்கிறார். `‘பிள்ளையைவிட நாங்களே பதற்றத்தில் இருந்தோம். குடும்ப நிகழ்வுகள் எதிலும் கலந்துகொள்வது கிடையாது. அதனால், உறவுகளுடன் விரிசல் ஏற்பட்டது. இரண்டுமுறை முயன்றும் அவளால் நீட்டில் தேர்ச்சிபெற முடியவில்லை’’ என்றார். அந்த மாணவி தற்போது பி.ஏ ஆங்கிலம் படித்துக்கொண்டிருக்கிறார்.

`‘தோல்வியால் என் மகள் மனதளவில் பாதிக்கப்பட்டாள். அதனால், மருத்துவம் தொடர்பான பேச்சையே வீட்டில் எடுப்பதில்லை’’ என்றார் அந்தத் தந்தை.

தற்போது கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருபதாயிரத் துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ப்ளஸ் டூ-வில் சில பாடங்களுக்கான தேர்வை எழுதவில்லை. அவர்களுக்காக மீண்டும் தேர்வு நடத்தப்படுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. திடீர் ஊரடங்கு, அந்த மாணவர்களிடம் எந்த மாதிரியான மனஅழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கும்? இனி ஒரு தேர்வை அவர்களால் சிறப்பாக எழுத முடியுமா?

இதேதான் போட்டித்தேர்வுகளுக்கும்! சென்னை போன்ற பெருநகரங்களில் இருக்கும் பெரும்பாலான நீட் கோச்சிங் நிறுவனங்கள், விடுதியுடன்கூடிய பயிற்சி மையங்களாகவே இருக்கின்றன. அவசர அறிவிப்பும் பதற்றமும் விடுதியில் தங்கி படித்த மாணவர்களுக்கு எந்த அளவுக்கு மனஅழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கும்? கிராமப்புற மாணவர்களின் நிலை இன்னும் மோசம். வாழ்வாதாரமே சிக்கலாகிப்போன சூழலில், அவர்கள் எப்படி போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ளப்போகிறார்கள்?

2003-ம் ஆண்டில் சார்ஸ் நோய் உலக நாடுகளை அச்சுறுத்தியபோது அமெரிக்கா, ஆப்பிரிக்கா, சீனா நாடுகளில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. மீண்டும் இயல்புநிலைக்குத் திரும்பிய பிறகு 35 சதவிகித மாணவர்களும் பெற்றோரும் ‘அதிர்ச்சிக்குப் பிறகான மனஅழுத்த பாதிப்பு’க்கு (Post traumatic stress disorder) ஆளானதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தற்போது, கொரோனாவால் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ள ஹாங்காங் நகரத்தில் மனஅழுத்தம் ஏற்பட்டவர்களுக்காக அரசு தனியாக கவுன்சலிங் மையத்தை நிறுவியுள்ளது. அந்த மையத்தை அழைப்பவர்கள் பெரும்பாலும் வறுமையைப் பின்னணியாக உடைய மாணவர்கள்தான் என்கின்றனர்.

கல்விச்சூழலே பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில், நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவது குறித்து மாநில அரசு தீவிரமாக யோசிக்க வேண்டும். மருத்துவ மாணவர் சேர்க்கையை மாநில அரசே கையிலெடுக்க வேண்டும்.

(ட்ரீட்மென்ட் தொடரும்)

‘நீட்’ தொடர்பான உங்கள் கருத்துகள், அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள neetvirus@vikatan.com