Published:Updated:

நீட் வைரஸ் - 14: எக்ஸிட் என்னும் குளறுபடி!

நீட் வைரஸ்
பிரீமியம் ஸ்டோரி
நீட் வைரஸ்

#KnowNeetNoNeet

நீட் வைரஸ் - 14: எக்ஸிட் என்னும் குளறுபடி!

#KnowNeetNoNeet

Published:Updated:
நீட் வைரஸ்
பிரீமியம் ஸ்டோரி
நீட் வைரஸ்
2017-ம் ஆண்டில் மத்திய அரசு நீட் தேர்வை கட்டாயமாக்கிய அதே காலகட்டத்தில்தான், தேசிய மருத்துவ ஆணைய சட்டமுன்வரைவும் பரிசீலனைக்கு வைக்கப்பட்டது. தேசிய மருத்துவ ஆணையத்தின் மிக முக்கியமான செயல்பாடுகளில் ஒன்றுதான் `நெக்ஸ்ட்’ (NEXT) எனப்படும் எக்ஸிட் தேர்வு.

எம்.பி.பி.எஸ் படிக்கும் மாணவர், பல்கலைக்கழகம் நடத்தும் ஐந்தாம் ஆண்டு இறுதித்தேர்வில் தேர்ச்சிபெற்று மருத்துவப் பட்டம் பெறுவார். அதன் பிறகு, ஹவுஸ் சர்ஜனாகப் பதிவுசெய்துகொண்டு பயிற்சி பெறுவார். பிறகு, இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவுசெய்துகொண்டு மருத்துவம் பார்ப்பார். இந்த நடைமுறைதான் இப்போது மாற்றப்பட்டுள்ளது.

நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட பிறகு ‘பல்கலைக் கழகங்கள் தனித்தனியாகத் தேர்வு நடத்தும் முறை கைவிடப்பட்டு, நாடு முழுவதும் இருக்கும் அனைத்து ஐந்தாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கும் ஒரே தேர்வு நடத்தப்படும்’ என அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்வை தேசிய மருத்துவ ஆணையம் நடத்தும். இதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அந்த மாணவர் எம்.பி.பி.எஸ் பட்டம் பெற முடியும். அதோடு, ஹவுஸ் சர்ஜனாகப் பயிற்சி எடுக்காமலே, நேரடியாக மருத்துவம் பார்க்கலாம். எம்.டி போன்ற மருத்துவ மேற்படிப்புகளுக்கு, இந்த `எக்ஸிட்’ தேர்வே நுழைவுத் தேர்வாகவும் கருதப்படுகிறது. இது, 2022-ம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீட் வைரஸ் - 14: எக்ஸிட் என்னும் குளறுபடி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

2017-ம் ஆண்டு முதல் நீட் தேர்வு வழியாக மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த அனைத்து மாணவர்களும் இந்த எக்ஸிட் தேர்வை எழுத வேண்டும். முதுகலை மருத்துவப் படிப்பில் சேர, தற்போது நடைமுறையில் இருக்கும் நீட் தேர்வு என்னவாகும் எனத் தெரியவில்லை. இந்திய மருத்துவத் துறையை உலகத் தரத்துக்கு மாற்றுவதற் காகவே இந்த எக்ஸிட் தேர்வைக் கொண்டுவருவதாக மத்திய அரசு தெரிவிக்கிறது.

எம்.பி.பி.எஸ் படிப்பில் முதல் நான்கு ஆண்டுகளுக்கான தேர்வுகளை பல்கலைக்கழகங்கள்தான் நடத்துகின்றன. இறுதி ஆண்டுத் தேர்வை தேசிய மருத்துவ ஆணையம் நடத்தும் என்றால், பல்கலைக்கழகங் களின் பங்கு என்ன? பல்கலைக்கழகம் நடத்தாத ஒரு தேர்வுக்கு அவர்களால் எப்படி சான்றிதழ் வழங்க முடியும்?

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பல்கலைக்கழகத்தில் தரமான கல்வி வழங்கப்படவில்லை என்றால், சம்பந்தப்பட்ட பல்கலைக் கழகங்களைத்தானே ஆய்வு செய்ய வேண்டும்?

இந்திய மருத்துவ கவுன்சில் இருந்த வரை, ஒவ்வொரு வருடமும் மருத்துவக் கல்லூரிகளை ஆய்வுசெய்து அங்கீகாரத்தைப் புதுப்பித்துவந்தது. போதிய உள்கட்டமைப்போ, வசதிகளோ இல்லாத கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்துசெய்யப்பட்டது. தற்போது கொண்டுவரப்பட்டுள்ள மருத்துவ ஆணையச் சட்டம், இந்த ஆய்வுமுறையையே முற்றிலும் ஒழித்துவிட்டது. ‘எங்கள் கல்லூரியில் இந்தந்த வசதிகளெல்லாம் இருக்கின்றன என கல்லூரி நிர்வாகம் ஒப்புதல் கொடுத்தால் போதுமானது; கல்லூரியை தொடர்ந்து நடத்தலாம்’ என அறிவித்துவிட்டது.

மருத்துவ மாணவர்களுக்கான இறுதி ஆண்டுத் தேர்வு, கிளினிக்கல் மற்றும் தியரி முறையில் இருக்கும். எக்ஸிட் தேர்வில் எந்த மாதிரியான வினாக்கள் கேட்கப்படும் என்கிற விளக்கம் இதுவரை கொடுக்கப்படவில்லை. நான்கில் ஒரு விடையைத் தேர்ந்தெடுக்கும்

(Multiple choice question) நீட் மாதிரியான தேர்வு முறை இதற்கு பொருந்தாது. ஒருவேளை, இந்த எக்ஸிட் தேர்வில் தோல்வியடைந்தால் அந்த மாணவர் ஆறு மாதம் கழித்து மீண்டும் தேர்வு எழுதலாம் என்கிறார்கள். நீட்டைப்போலவே இந்த எக்ஸிட் தேர்வும் தனியார் கோச்சிங் சென்டர்களைத்தான் அதிகப்படுத்தப்போகிறது. அதுதான் இதனால் ஏற்படும் ஆகப்பெரிய விளைவாக இருக்கப்போகிறது.

நீட் வைரஸ் - 14: எக்ஸிட் என்னும் குளறுபடி!

உலக சுகாதார மையத்தின் தரவுகளின்படி, ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் இருக்க வேண்டும். தமிழகத்தைப் பொறுத்தவரை, இதுவரை ஆயிரம் பேருக்கு நான்கு மருத்துவர்கள் என்கிற மேம்பட்ட நிலையில் சுகாதாரத் துறை செயல்பட்டுவருகிறது. ஆனால், உத்தரப்பிரதேசம் போன்ற பிற மாநிலங்களின் நிலை வேறு. அங்கே 19,962 பேருக்கு ஒரு மருத்துவர் இருக்கிறார். ஜார்கண்ட் மாநிலத்தில் 18,518 பேருக்கு ஒரு மருத்துவர் இருக்கிறார். இப்படி பின்தங்கிய மாநிலங்களில் ஏற்கெனவே டாக்டர்கள் பற்றாக்குறை இருக்கும் நிலையில், எக்ஸிட் தேர்வுமுறை இந்தப் பற்றாக்குறையை இன்னும் அதிகரிக்கும், நிலைமையைச் சிக்கலாக்கும், சுகாதாரத்தைக் கேள்விக்குறியாக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

2017-ம் ஆண்டு நீட் தேர்வில் இயற்பியலில் 0 மதிப்பெண் பெற்ற ஒரு மாணவர், வேதியியலிலும் உயிரியலிலும் தேர்ச்சிபெற்று 720-க்கு 117 மதிப்பெண் பெற்றிருந்தார். ‘இயற்பியலில் மதிப்பெண்ணே எடுக்காத ஒரு மாணவரால் எப்படி தகுதியான மருத்துவர் ஆக முடியும்?’ என்று அப்போதைய மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த பிரகாஷ் ஜவடேகரிடம் கேட்டதற்கு, ‘அதற்குத்தான் எக்ஸிட் தேர்வு இருக்கிறதே!’ என ஒற்றை வரியில் பதில் அளித்தார். ஆனால், தொடக்கத்திலேயே பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது எக்ஸிட் தேர்வு!

(ட்ரீட்மென்ட் தொடரும்)

‘நீட்’ தொடர்பான உங்கள் கருத்துகள், அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள neetvirus@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism