Published:Updated:

`பள்ளியில் சேர்ந்தால் ரூ. 1000 ஊக்கத்தொகை!’ - வடமாநில மாணவர்களை ஊக்குவிக்கும் தலைமை ஆசிரியர்

உதவித்தொகை கொடுக்கும் தலைமை ஆசிரியர்

புதிதாக பள்ளியில் சேரும் வடமாநில மாணவர்களுக்கு தனது சொந்தப் பணத்திலிருந்து தலா ரூ.1000 ஊக்கத்தொகை வழங்குவதோடு, பல்வேறு கற்றல் உபகரணங்களையும் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கி தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் ஞானராஜ் ஊக்கப்படுத்தி வருகிறார்.

`பள்ளியில் சேர்ந்தால் ரூ. 1000 ஊக்கத்தொகை!’ - வடமாநில மாணவர்களை ஊக்குவிக்கும் தலைமை ஆசிரியர்

புதிதாக பள்ளியில் சேரும் வடமாநில மாணவர்களுக்கு தனது சொந்தப் பணத்திலிருந்து தலா ரூ.1000 ஊக்கத்தொகை வழங்குவதோடு, பல்வேறு கற்றல் உபகரணங்களையும் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கி தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் ஞானராஜ் ஊக்கப்படுத்தி வருகிறார்.

Published:Updated:
உதவித்தொகை கொடுக்கும் தலைமை ஆசிரியர்

கல்வி உரிமைச்சட்டத்தின்படி, தொடக்கக்கல்வி அடிப்படை உரிமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பள்ளிகளில் சேராத மாணவர்கள் எவரும் இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. மாணவர்களை அரசுப் பள்ளிகளுக்கு ஈர்க்கும் வண்ணம் செயல்பட தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் மாணவர்களின் இருப்பிடங்களுக்கே சென்று நேரடி சேர்க்கை நடத்தவும் பள்ளிக்கல்வித்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

வடமாநில மாணவர்களின் குடும்பத்தினருடன் உரையாடும் தலைமை ஆசிரியர்
வடமாநில மாணவர்களின் குடும்பத்தினருடன் உரையாடும் தலைமை ஆசிரியர்

அதன்படி, விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் ஞானராஜ், தான் பணிபுரியும் பள்ளிப்பகுதியை ஒட்டியுள்ள நூற்பு ஆலைகளுக்கு நேரில் சென்று, அங்கு தங்கி பணிபுரியும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த கூலித்தொழிலாளிகளிடம், கல்வியின் முக்கியத்துவம் மற்றும் தமிழக அரசு வழங்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சலுகைகள் குறித்தும் விளக்கியுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதை தொடர்ந்து, புதிதாக பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு தனது சொந்தப் பணத்திலிருந்து தலா ரூ.1000 ஊக்கத்தொகை வழங்குவதோடு, பல்வேறு கற்றல் உபகரணங்களையும் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கி தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் ஞானராஜ் ஊக்கப்படுத்தி வருகிறார். இது தவிர, பள்ளியில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு ஆண்டுதோறும் தன்னாலான பல்வேறு உதவிகளையும் தனது சொந்தப் பணத்தில் செய்து வருகிறார்.

மேலும், எந்தவிதத்திலும் மாணவர்களுக்கு படிப்பின் மீதான ஆர்வம் குறைந்துவிடக்கூடாது என்பதற்காக, மாணவர்கள் பள்ளி வந்து செல்வதற்கு ஆட்டோ, மற்றும் வடமாநில தொழிலாளர்களின் குழந்தைகள் தங்களது தாய் மொழியான இந்தியில் பாடங்களை பயில இந்தி ஆசிரியை ஒருவரையும் தனது சொந்த செலவில் ஏற்பாடு செய்து கல்விச்சேவையாற்றி வருகிறார் தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் ஞானராஜ்.

பள்ளி மாணவர்கள்
பள்ளி மாணவர்கள்

இதுகுறித்து தலைமையாசிரியர் ஜெயகுமார் ஞானராஜிடம் பேசினோம். "நூற்பாலைகள்ல வேலைபார்க்கிறவங்க பெரும்பாலும் வடமாநிலத்தவர்கள்தான். இதுபோக உத்தரப்பிரதேசம், பிஹார்ல இருந்தும் கொஞ்சம் பேரு வந்துருக்காங்க. அவங்களுக்கு ஹிந்தி கூட சரியா பேச தெரியல. ரொம்ப ஏழைப்பட்ட குடும்பத்திலிருந்து பொழப்புக்காக இங்க வந்துருக்காங்க. இங்க இருக்குற எல்லாருமே சிறுபான்மை இன மக்கள்தான். அவங்ககிட்ட பேச முயற்சிக்கும் போதெல்லாம் என்னைப் பார்த்து அவங்க ஓடி ஒளிஞ்சிப்பாங்க. அவங்க சாதாரணமான மக்களை போல இல்ல. வெளி உலகம் தெரியாத அளவுக்கு ரொம்பவும் அப்பாவித்தனமான மக்கள். அவங்கள போலவே அவங்களுடைய குழந்தைகளும் ஆகிடுவாங்களோனு பயம் இருந்துச்சு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒரு முறை, ஒரு அம்மா தன்னோட ரெண்டு குழந்தைகள ஆஸ்பத்திரிக்கு இழுத்துட்டுப் போனதை பார்த்தப்போதான் இந்தப் பசங்கள ஸ்கூல்ல படிக்கவைக்கணும்னு தோணுச்சு. உடனே அவங்க வசிப்பிடத்துக்கு போய் பேச முயற்சி பண்ணேன். ஆனா என்னைப் பார்த்ததும் தூரமா போனாங்க. யாரும் பக்கத்துல வந்து பேசல. ரொம்ப பயந்து போய் நின்னாங்க. அவங்கள நேரடியா தொடர்பு கொள்ள முடியாததால அவங்க வேலைசெய்யுற நூற்பாலைகள் மூலமா சந்திக்கலாம்னு முயற்சி பண்ணேன். ஆனா அதுக்கு ஏகப்பட்ட தடைகள். நான் ஆலைக்குள்ள போய் அவங்கள பார்த்து பேசறதை நூற்பாலை உரிமையாளர்கள் விரும்பல.

ஒருவழியா, கொரோனா ஊரடங்குதான் அதுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்துச்சு. ஊரடங்கு நேரத்துல அவங்க வேலை இல்லாம சும்மா இருந்தப்ப அவங்களுக்கு அரிசி, பருப்பு, துணிமணி செலவுக்கு பணம்னு இப்படி கொஞ்சம் கொஞ்சமா கொடுத்து அவங்களோட பழக ஆரம்பிச்சேன். அவங்களுக்கு சாப்பாடு வாங்கிக் கொடுத்து அவங்க கூடவே உட்கார்ந்து சாப்பிட்டேன். அப்போகூட அவங்க காலை மடக்கி சம்மணம் போட்டு சாப்பிடாம, குத்தவச்சு சாப்பிட்டாங்க. இதுல இருந்தெல்லாம் அவங்கள வெளியில கொண்டு வந்தோம்.

வடமாநில மாணவர்களின் குடும்பத்தினருடன் உரையாடும் தலைமை ஆசிரியர்
வடமாநில மாணவர்களின் குடும்பத்தினருடன் உரையாடும் தலைமை ஆசிரியர்

அதுக்குப் பிறகு அவங்களுடைய அபிமானியாகி குழந்தைங்களோட கல்வியை பற்றி பேச ஆரம்பிச்சோம். அதுக்கு பலனாக கடந்த கொரோனா காலகட்டத்துல மட்டும் அங்க இருந்து 12 குழந்தைகளை பள்ளிக்கூடத்துக்கு கொண்டு வந்தோம். அதுக்குப் பிறகும் அப்பப்போ ஒண்ணு, ரெண்டு பேரா மீட்டுக் கொண்டு வந்தோம். நேத்து 7 குழந்தைகளுக்கு ஸ்கூல் அட்மிஷன் போட்டுருக்கோம். இப்போ, மொத்தமா எங்க ஸ்கூல்ல 25 வடமாநில மாணவர்கள் இருக்காங்க. வடமாநில மாணவர்களுக்குக் கல்வியில தேவையானதை செஞ்சு கொடுக்கிறதுல நிறைய சிரமங்கள் இருந்துச்சு.

குறிப்பா சத்துணவு சாப்பிடுற மாணவர்கள்தான் யூனிஃபார்ம் வாங்க முடியும்னு நிலைமை. அதுக்காக சத்துணவுத் திட்டத்துல இந்த மாணவர்களை சேர்த்தோம். அதுக்கு பிறகு யூனிஃபார்ம், புத்தகம் வாங்கிக் கொடுத்தோம். இப்படி கொஞ்சம், கொஞ்சமா மாணவர்களுக்குத் தேவையானதை செய்து கொடுத்துட்டு வர்றோம். இது எல்லாத்துக்கும் எங்க கல்வித்துறை அதிகாரிகளும் ரொம்ப சப்போர்ட் பண்ணி உதவி செஞ்சிருக்காங்க.

அரசுப் பள்ளி மாணவர்கள் (சித்திரிப்பு படம்)
அரசுப் பள்ளி மாணவர்கள் (சித்திரிப்பு படம்)

அடுத்ததா சிறுபான்மை இன மாணவர்களுக்கு வழங்கப்படுற உதவித்தொகையை இவங்களுக்கு வாங்கிக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கத் தீர்மானிச்சிருக்கோம். இதற்கு ஆதார் அட்டை, இருப்பிடச்சான்று உள்ளிட்ட ஆவணங்கள் தேவைப்படுது. இதை சட்டபூர்வமாக வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்குறோம். அது கிடைச்சதும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையும் வாங்கிக் கொடுத்திடுவோம். இதனால் கல்வியில் அவங்களுக்கு தேவையானதை பூர்த்தி செய்ய முடியும்னு நம்புறேன். தொடர்ந்து இதுபோல உதவிசெய்ய காத்திருக்கோம்" என்றார் அக்கறையுடன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism