Published:Updated:

அப்பா 3-ம் வகுப்பு; அம்மா 9-ம் வகுப்பு; மகள் ஐ.ஏ.எஸ்! - கனவை சாத்தியமாக்கிய ஏஞ்சலின் ரெனிட்டா!

ஏஞ்சலின் ரெனிட்டா

"இந்திய அளவில் 338-வது ரேங்க எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளேன். தமிழகத்தில் வெற்றி பெற்றுள்ள 27 பேரில் நானும் ஒருவர் என்பதை நினைக்கும்போது பெருமிதமாக இருக்கிறது." - ஏஞ்சலின் ரெனிட்டா

அப்பா 3-ம் வகுப்பு; அம்மா 9-ம் வகுப்பு; மகள் ஐ.ஏ.எஸ்! - கனவை சாத்தியமாக்கிய ஏஞ்சலின் ரெனிட்டா!

"இந்திய அளவில் 338-வது ரேங்க எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளேன். தமிழகத்தில் வெற்றி பெற்றுள்ள 27 பேரில் நானும் ஒருவர் என்பதை நினைக்கும்போது பெருமிதமாக இருக்கிறது." - ஏஞ்சலின் ரெனிட்டா

Published:Updated:
ஏஞ்சலின் ரெனிட்டா

தஞ்சாவூர், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி - விக்டோரியா தம்பதி. இவர்களுடைய மகள் ஏஞ்சலின் ரெனிட்டா. அதே பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழ் வழி கல்வியில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தார். பத்தாம் வகுப்பில் 490, பன்னிரெண்டாம் வகுப்பில் 1158 மதிப்பெண்கள் பெற்று, தான் படித்த பள்ளிக்கு பெருமை தேடித் தந்தார்.

பெற்றோருடன் ஏஞ்சலின் ரெனிட்டா
பெற்றோருடன் ஏஞ்சலின் ரெனிட்டா

கல்லூரிப் படிப்பை அண்ணா பல்கலைக் கழகம், கிண்டியில் வேளாண்மை மற்றும் நீர்ப்பாசனத்தில் பொறியியல் படித்தார். சிறுவயதிலிருந்த, `தான் ஒரு ஐஏஎஸ் ஆக வேண்டும்!' என்ற பெரும் கனவை சுமந்து அதற்காக உழைக்கத் தொடங்கினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தற்போது வெளியாகியுள்ள சிவில் சர்வீஸ் தேர்வு முடிவில் ஏஞ்சலின் ரெனிட்டா இந்திய அளவில் 338வது ரேங்க் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார்.

ஐஏஎஸ் ஆக சிவில் சர்வீஸ் தேர்வில் வென்ற ஏஞ்சலின்
ஐஏஎஸ் ஆக சிவில் சர்வீஸ் தேர்வில் வென்ற ஏஞ்சலின்

ஏஞ்சலின் ரெனிட்டா பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறார். `அவரால் எங்கள் ஊருக்கே பெருமை!' என மைக்கேல்பட்டி கிராமத்தினர் அனைவருக்கும் இனிப்பு கொடுத்து கொண்டாடி வருகின்றனர். பலர் நேரில் சென்று ஏஞ்சலின் ரெனிட்டாவிற்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உற்சாகத்துடன் காணப்பட்ட ஏஞ்சலின் ரெனிட்டாவிடம் பேசினோம், "அப்பா ரவி 3-ம் வகுப்பு, அம்மா விக்டோரியா 9-ம் வகுப்பு வரைக்கும் படிச்சிருக்காங்க. அப்பா டிரைவரா வேலை பார்த்துட்டு வந்தார். அப்பா, அம்மா ரெண்டு பேரும் பெரிசா படிக்கலைனாலும், என்னையும், அண்ணனையும் பல கஷ்டங்களுக்கு மத்தியில படிக்க வச்சாங்க. என் அண்ணன் விக்டர் செபாஸ்டினை எம்.டெக், நான் வேளாண்மையில் பொறியியல் படிச்சு முடிச்சோம்" என்றவர் தன் ஐ.ஏ.எஸ் கனவு உந்துதலாக அமைந்த விஷயத்தைப் பகிர்ந்தார்.

2004-ம் ஆண்டு எனக்கு 7 வயசு இருக்கும். இரண்டாம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன் அப்போது குடும்பத்தினருடன் வேளாங்கன்னி சர்ச்சுக்குப் போயிருந்தோம். அப்ப ஏற்பட்ட சுனாமி பேரழையில் பலர் உயிரிழந்தனர். உடமைகளையும், உறவுகளையும் இழந்தவர்கள் நொடிப்பொழுதில் ஆதரவுக்கு ஆளில்லாமல் நிற்கதியாக நின்றனர். எங்கு பார்த்தாலும் சடலங்கள். அழு குரல்கள் கேட்டு கொண்டே இருந்தன. இதில் அதிர்ஷடவசமாக நாங்கள் உயிர் தப்பினோம்.

சடலங்களுக்கு மத்தியில தான் அங்கிருந்து வந்தோம். அந்த துயரமான சம்பவத்தை மனதில் ஏந்தி கொண்டு அந்த மாவட்டத்தின் ஆட்சியராக இருந்தவர் மீட்புப் பணிகள், நிவாரணப் பணிகள் என பம்பரமாக சுழன்றார். அடுத்த சில தினங்களில் அந்தப் பகுதியை இயல்பு நிலைக்கு கொண்டு வந்தார் என்பதை செய்திகள் மூலம் தெரிஞ்சுக்கிட்டேன்.

குடும்பத்தினருடன் ஏஞ்சலின் ரெனிட்டா
குடும்பத்தினருடன் ஏஞ்சலின் ரெனிட்டா

மக்கள் துயரில் இருக்கும் போதும்,பிரச்னையில் தவிக்கும்போது அவர்களுக்கு உறுதுணையாக இருந்து மீட்டு, வளர்ச்சிக்கு உதவி செய்ய வேண்டும் என்றால் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்தால் நிறைவாக செய்ய முடியும் உடனடியாக மாற்றம் கொண்டு வர முடியும் என்ற ஆழமான விதை சுனாமி பேரலை மூலம் எனக்குள் விழுந்தது. என்னோட 7 வயசுலேயே அப்பாக்கிட்ட, `நான் ஐஏஎஸ் ஆகணும்!' என்றேன். சரிடா படிக்க வைக்குறேனு சொன்னவர் என்னோட படிப்புக்காக இன்னும் அதிகம் உழைக்கத் தொடங்கினார்.

படிப்பில் முழு கவனம் செலுத்தினேன்.சென்னையில் கல்லூரி படிக்கும் போது 2017-18 விகடd; மாணவர் நிருபர் பயிற்சி திட்டத்தில் நிருபராக பயிற்சி பெற்றேன். அப்போது சமூகம் பற்றி முழுமையாகத் தெரிந்து கொண்டேன். பல தரப்பட்ட மனிதர்களைச் சந்தித்தேன். ஒரு விஷயத்தை பல கோணங்களில் அனுகி எது உண்மை என்பதை அறியக் கற்றுக் கொண்டேன். எனக்குள் பெரும் அனுபவத்தை தந்தது விகடன். அது எனக்கு சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுவதற்கும் உதவியாக இருந்தது.

ஐஏஎஸ் மிகிழ்ச்சியில் ஏஞ்சலின் ரெனிட்டா
ஐஏஎஸ் மிகிழ்ச்சியில் ஏஞ்சலின் ரெனிட்டா

கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் போதே சிவில் சர்வீஸ் தேர்வில் கலந்து கொள்வதற்கான முயற்சிகளில் இறங்கினேன். கொரோனா காலக்கட்டத்தில் 2020-ல் நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில் கலந்து கொண்டு எழுதினேன் ஆனால் தேர்ச்சி பெறவில்லை. அதன் பிறகு குறைகளை சரி செய்துகொண்டு முழு மூச்சில் படித்தேன். பின்னர் நடைபெற்ற தேர்வை நம்பிக்கையோடு எழுதினேன். அதன் முடிவுகள் தற்போது வெளியாகியிருக்கின்றன.

இந்திய அளவில் 338-வது ரேங்க எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளேன். தமிழகத்தில் வெற்றி பெற்றுள்ள 27 பேரில் நானும் ஒருவர் என்பதை நினைக்கும்போது பெருமிதமாக இருக்கிறது. விரைவில் ஐ.ஏ.எஸ் இல்லைன்னா ஐ.பி.எஸ் பணி கிடைக்க இருக்கிறது. இன்னைக்கு என்னை பலரும் பாராட்டுறாங்க. ஆனால் என்னோட ஏழு வயசு கனவை நிஜமாக்க முழு சப்போர்ட் பண்ணினது என் பெற்றோர்தான்.

கல்லூரிப் படிப்பை முடிச்ச பிறகு தேர்விற்கான பயிற்சியில் இருந்தேன். பொண்ணு படிப்பை முடிச்சுட்டா ஏன் இன்னும் கல்யாணம் செஞ்சு வைக்கல. படிச்சுட்டு ஏன் சும்மா இருக்கா? வேலைக்கு அனுப்ப வேண்டியதுதானே! எனப் பல கேள்விகளை அந்த நேரத்தில் என் பெற்றோர்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. கிராமத்தில் இருந்ததால் நானும் இதனை எதிர் கொண்டேன். அந்த நேரத்தில் என் பெற்றோர் எனக்கு பக்க பலமாக இருந்து நான் துவண்டுவிடாமல் கவனித்துக் கொண்டனர்.

எதையும் முழு ஈடுப்பாட்டுடன் செய்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்பதற்கு நானே உதாரணம். என் கவனம் முழுவதையும் படிப்பில் செலுத்தினேன் ஐ.ஏ.எஸ் ஆகணும் என ஆசைப்பட்டேன் அதற்காக உழைத்தேன். என் கனவு இன்றைக்கு சாத்தியமாகியிருக்கிறது. எதிர்காலத்தில் பெண்கள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும் வகையிலும், அவர்களின் நலனுக்காகவும் பணிபுரிய வேண்டும் அதுவே என் இலக்கு என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism