Published:Updated:

விழி பிதுங்கும் மாணவர்கள்... வழி தெரியாத பெற்றோர்கள்! - மீள்வார்களா... மீட்பார்களா?

மீள்வார்களா...  மீட்பார்களா?
பிரீமியம் ஸ்டோரி
மீள்வார்களா... மீட்பார்களா?

பள்ளிக்கூடம், வீடு என இரண்டு இடங்களிலும் பிள்ளைகள் நெருக் கடியைச் சந்தித்துக்கொண்டிருக் கிறார்கள்.

விழி பிதுங்கும் மாணவர்கள்... வழி தெரியாத பெற்றோர்கள்! - மீள்வார்களா... மீட்பார்களா?

பள்ளிக்கூடம், வீடு என இரண்டு இடங்களிலும் பிள்ளைகள் நெருக் கடியைச் சந்தித்துக்கொண்டிருக் கிறார்கள்.

Published:Updated:
மீள்வார்களா...  மீட்பார்களா?
பிரீமியம் ஸ்டோரி
மீள்வார்களா... மீட்பார்களா?

கொரோனா அச்சம் குறைந்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கழித்து அனைத்துப் பள்ளிக்கூடங்களும் திறக்கப்பட்டன. இந்த நேரத்தில், ‘இரண்டு வருடங்கள் விட்டதைப் பிடிக்க மாணவர்களுக்கு ஸ்கூல்ல ரொம்ப அழுத்தம் கொடுக்கிறாங்க’ என்ற வருத்தக்குரல் பரவலாக ஒலிக் கிறது. ‘ரெண்டு வருஷம் வேஸ்ட் டாயிடுச்சு. இந்த அகாடமிக் இயர்ல இருக்கிற மிச்ச நாள்லயும், அடுத்து வர்ற அகாடமிக் இயர்லேயும் அதை எப்படியாவது ஈடுகட்டிடணும்’ என்று பெற்றோர்களும் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். விளைவு, வீடு, பள்ளிக்கூடம் என இரண்டு இடங்களிலும் குழந்தைகள் எந்நேரமும் படிப்பு, படிப்பென மன அழுத்தத்துக்கு ஆளாகிக்கொண்டிருக் கிறார்கள். கொரோனாவால் இழந்த இரண்டு வருட நேரடி கல்வியை குழந்தைகளுக்கு ஸ்ட்ரெஸ் ஏற்படுத்தா மல் எப்படி ஈடுகட்டலாம்? கல்வியாளர் அஜித் பிரசாத் ஜெயின் மற்றும் உளவியல் ஆலோசகர் பிருந்தா ஜெயராமன் விளக்குகிறார்கள்.

 அஜித் பிரசாத் ஜெயின்
அஜித் பிரசாத் ஜெயின்
 பிருந்தா ஜெயராமன்
பிருந்தா ஜெயராமன்

‘`பள்ளிக்கூடம், வீடு என இரண்டு இடங்களிலும் பிள்ளைகள் நெருக் கடியைச் சந்தித்துக்கொண்டிருக் கிறார்கள். கடந்த இரண்டு வருடங் களும் ஆன்லைன் வகுப்புகள் நடந்து கொண்டுதான் இருந்தன. மாணவர்கள் தங்களுடைய ஆசிரியர்களை தினமும் கேமரா வழியாகப் பார்த்துக் கொண்டு தான் இருந்தார்கள். அவர்கள் சொல்லிக் கொடுத்ததில் கொஞ்சமாவது மாணவர்களின் மனங்களில் பதிந்திருக்கும். லாக்டெளனுக்கு முன்பும் மாணவர்களின் கற்றல் திறன் ஒருவருக்கொருவர் வேறுபட்டுதான் இருந்தது. அது இப்போதும் இருக்கக்கூடும். அதனால், லாக்டெளன், ஆன்லைன் கல்வி என்ற கடந்த காலத்தை ஆசிரியர்கள் சற்று மறந்துவிட்டு, மாணவர்களின் கற்றல் திறனை தனித்தனியாக கவனித்து அவர்களை எப்படி மேம்படுத்துவது என்று யோசிக்க வேண்டும்.

லாக்டெளன் காரணமாக கல்வியில் பின்தங்கியவர்கள் முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்கள்தான். எல்.கே.ஜி., யு.கே.ஜி படிக்காமல் அடுத்த கல்வியாண்டில் முதல் வகுப்பு செல்லப்போகும் குழந்தைகளும், யு.கே.ஜி., மற்றும் முதல் வகுப்பு படிக்காமல் இரண்டாம் வகுப்பு செல்லவிருக்கிற குழந்தை களும்தான் போதுமான அடிப்படை கல்விக் கிடைக்காமல் தடுமாறப் போகிறார்கள். பெற்றோர்கள், எந்நேரமும் ‘படி படி’ என்று பிள்ளைகளை விரட்டாமல் ஆசிரியர்களை நம்பி பொறுப்பை ஒப்படைக்க வேண்டும்’’ என்கிறார் கல்வியாளர் அஜித் பிரசாத் ஜெயின்.

விழி பிதுங்கும் மாணவர்கள்... 
வழி தெரியாத பெற்றோர்கள்! - மீள்வார்களா...  மீட்பார்களா?

உளவியல் ஆலோசகர் பிருந்தா ஜெயராமன், ‘`இரண்டு வருடங்களாக ஆன்லைன் கல்விக்குப் பழகிவிட்டதால், மறுபடியும் பள்ளிக்கூடம், ஆசிரியர்கள், வீட்டுப்பாடம் என்று பழகுவதற்கு மாணவர்களுக்கு சில மாதங்கள் ஆகும். இதை ஆசிரியர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ‘ஸ்கூலுக்கு போகப் பிடிக்கலை; படிக்கப் பிடிக்கலை’ என்று சொன்னால், அவர்கள் மன அழுத்தத்தில் இருக்கிறார்கள் என்பதை பெற்றோர்கள் புரிந்துகொள்ள வேண்டும். வளர்ந்த பிள்ளை கள் என்றால், ‘லாக்டெளன் முன்னாடி நீ எவ்ளோ நல்லா படிச்சே... மறுபடியும் அதே மாதிரி படிச்சாதானே உன்னோட வக்கீல் கனவு/ஐ.பி.எஸ் கனவு நிறைவேறும்’ என்று புரிய வையுங்கள். மாறாக கோபப்பட்டால், பிள்ளைகளுக்கு மன அழுத்தம் அதிகமாகி கொஞ்சம் நஞ்சம் படிப்பதும் நின்று விடும். சின்ன பிள்ளைகள் என்றால், விட்டுப் பிடியுங்கள். அடுத்த கல்வியாண்டு முழுக்க அவர்கள் மெள்ள மெள்ள தங்கள் கல்வியை மீட்டெடுக்கட்டும்’’ என்கிறார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வாசகர்கள் என்ன சொல்கிறார்கள்?

கொரோனா லாக்டௌன் சூழலால் கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கழித்து அனைத்துப் பள்ளிக்கூடங்களும் திறக்கப்பட்டுள்ளன. பாடங்களை விரைந்து முடிக்க மாணவர்களுக்கு அழுத்தம் கொடுக்கின்றனவா பள்ளிக்கூடங்கள்?

விழி பிதுங்கும் மாணவர்கள்... 
வழி தெரியாத பெற்றோர்கள்! - மீள்வார்களா...  மீட்பார்களா?

எப்படிப் படிக்க வேண்டும்?

2 வருடங்கள் கழித்து அனைத்துப் பள்ளிக்கூடங்களும் திறக்கப்பட்டுள்ளன. உங்கள் பிள்ளைகள் எப்படிப் படிக்க வேண்டுமென விரும்புகிறீர்கள்?

விழி பிதுங்கும் மாணவர்கள்... 
வழி தெரியாத பெற்றோர்கள்! - மீள்வார்களா...  மீட்பார்களா?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism