Published:Updated:

`தமிழகத்தில்தான் அதிக முனைவர்கள்!’ - மகிழ்ச்சி தரும் உயர்கல்வி சர்வே

முனைவர்கள்
முனைவர்கள்

மொத்தம் 128 மாணவர்களுக்குக் கடந்த ஆண்டில் மட்டும் 60.48 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை, அனைத்திந்திய உயர்கல்வி நிறுவனக் கருத்துக்கணிப்புக் குழு நடத்திய சர்வே முடிவுகளை அண்மையில் வெளியிட்டது. அதன்படி 2018-ம் வருடம் இந்தியாவிலேயே அதிக முனைவர்கள் உருவான மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. மொத்தம் 5,844 தமிழக மாணவர்கள் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்கள்.

` பேரழிவில் நிற்கும் தேவதை!' - பீகார் வெள்ளத்தைக் காட்சிப்படுத்தும் கல்லூரி மாணவி

5,020 மாணவர்களுடன் கர்நாடகா இரண்டாம் இடத்திலும், 3,996 முனைவர்களுடன் உத்தரப்பிரதேசம் மூன்றாவது இடத்திலும் உள்ளன. அதற்கடுத்த இடங்களை ஆந்திராவும் அசாமும் பிடித்துள்ளன.

அதிக பெண் முனைவர்கள்!

முக்கியமாக தமிழகம் பெற்றுள்ள 5,844 முனைவர்களில் பெண்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளார்கள். சர்வே கணக்கீட்டின்படி 2,976 முனைவர் பட்டங்கள் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. 2868 முனைவர் பட்டங்கள் ஆண்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கான ஊக்கத்தொகையைக் கடந்த ஆண்டு உயர்கல்வித்துறை 36,000 ரூபாயிலிருந்து 60,000 ரூபாயாக அதிகரித்ததும் இதற்கான காரணமாகக் கூறப்படுகிறது.

பல்கலைக்கழகம்
பல்கலைக்கழகம்

மொத்தம் 128 மாணவர்களுக்குக் கடந்த ஆண்டில் மட்டும் 60.48 லட்சம் ரூபாய் இதற்காக வழங்கப்பட்டுள்ளது. அரசின் செயல்பாடு ஒருபக்கம் பாராட்டத்தக்க வகையில் இருந்தாலும் பல்கலைக்கழகங்களின் பங்களிப்பும் இதில் குறிப்பிடத்தக்கது. முனைவர் பட்டத்துக்கான ஆய்வு மாணவர்களின் வளர்ச்சியைத் தொடர்ந்து கண்காணிக்கும் வகையில் ஆன்லைன் கண்காணிப்புத் தளங்களை உருவாக்கி அதில் அவர்களின் செயல்பாடுகள் குறித்துத் தொடர்ந்து பதிவு செய்துவருகின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு