Published:Updated:

போதை பயன்பாடு, பாலியல் பிரச்னை; அரசு பள்ளி மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனைகள்; களமிறங்கிய இளைஞர்கள்!

அரசுப் பள்ளி மாணவர்களுக்காக களமிறங்கிய இளைஞர்கள்!

அமைதியாக, நன்றாக படிக்கக்கூடியவர்கள் என ஆசிரியரால் சொல்லப்படும் மாணவர்கள்கூட, வாழ்க்கையில் சில உளவியல் பிரச்னைகளை சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டு உள்ளனர். அதுபோன்றவர்கள்தான் அதிகமாக தங்களைத் தாங்களே காயப்படுத்திக்கொள்வது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

போதை பயன்பாடு, பாலியல் பிரச்னை; அரசு பள்ளி மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனைகள்; களமிறங்கிய இளைஞர்கள்!

அமைதியாக, நன்றாக படிக்கக்கூடியவர்கள் என ஆசிரியரால் சொல்லப்படும் மாணவர்கள்கூட, வாழ்க்கையில் சில உளவியல் பிரச்னைகளை சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டு உள்ளனர். அதுபோன்றவர்கள்தான் அதிகமாக தங்களைத் தாங்களே காயப்படுத்திக்கொள்வது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

Published:Updated:
அரசுப் பள்ளி மாணவர்களுக்காக களமிறங்கிய இளைஞர்கள்!

அரசுப் பள்ளி மாணவர் ஒருவர், தனது ஆசிரியரிடம் தகாத வார்த்தைகளைப் பேசி தாக்க முயன்ற வீடியோ, சில நாட்களுக்கு முன்பு வைரல் ஆனது. பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் இதற்கு விமர்சனங்கள் எழுந்தன. அதைத் தொடர்ந்தும், வேறு சில இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்த செய்திகளும் வெளியாகின.

மாணவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்கும் இளைஞர்கள்
மாணவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்கும் இளைஞர்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதுபோன்ற நிகழ்வுகள் தொடரும் நிலையில், பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்தும் வகையில், அவர்களுக்கு உளவியல் ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர் சென்னையைச் சேர்ந்த ’ஊக்கம்’ அறக்கட்டளை நிர்வாகிகள். மூன்று வருடங்களுக்கும் மேலாக, `மனநலம் மற்றும் நிறைவாழ்வு' என்ற தலைப்பில் கருத்துருவில் பணியாற்றி வருகின்றனர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஊக்கம் அறக்கட்டளையின் நிறுவனரும், உளவியல் ஆலோசகருமான காளீஸ்வரனிடம் பேசினோம்: "முதியோர் இல்லங்களில் வசிப்போருக்கு அடிப்படைத் தேவைகள் கிடைத்தாலும், அவர்களுக்கு தன்னுடைய உணர்வுகளைப் பகிர்வதற்கு ஆள் இல்லை, அது அவர்களது மனநிலையை பாதிக்கும் என்பதால் 'கதை கேட்போம்' எனும் தலைப்பில் அவர்களை மனம்விட்டுப் பேசவைப்பது, மனநலம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த தெரு நாடகம், சுவர்களில் ஓவியங்கள் வரைவது, கொரோனாவுக்குப் பிறகு உளவியல் ரீதியான பிரச்னைகள் அதிகம் இருந்ததால் இலவச கருத்தரங்கம் போன்ற பணிகளைச் செய்து வருகிறோம்.

ஆலோசனை குழுவில் உள்ளவர்கள்.
ஆலோசனை குழுவில் உள்ளவர்கள்.

கடந்த இரு மாதங்களாக சென்னை மாநகர இணை ஆணையர் (கல்வி) சினேகா ஐ.ஏ.எஸ்ஸின் அனுமதியுடன், சென்னையில் உள்ள இரண்டு அரசுப் பள்ளிகளில் மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு உளவியல், மனநலம் சார்ந்த விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை வகுப்புகளை வழங்கிவருகிறோம். இதுவரை, 2600-க்கும் மேற்பட்ட மாணவர்களும், 350-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரும் பயனடைந்து உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒரு மாணவன்/மாணவிக்கு மனநலம் அல்லது குணநலனில் பிரச்னை என்றால், அது தனி நபருடைய பிரச்னை மட்டும் அல்ல. ஆசிரியர், பெற்றோர், நண்பர்களும் சார்ந்த விஷயம்தான். நாங்கள் பார்த்த 2,600 மாணவர்களில் 100 மாணவர்கள் குணநலனில் பிரச்னை உள்ளவர்களாக இருக்கின்றனர். அந்த நூறு பேரை வைத்துக்கொண்டு அரசுப் பள்ளி மாணவர்கள் அனைவரின் குணநலனையும் முடிவு செய்வது தவறானது.

போதை பயன்பாடு, பாலியல் பிரச்னை; அரசு பள்ளி மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனைகள்; களமிறங்கிய இளைஞர்கள்!
pixabay

அந்த நூறு பேரில், மாணவருக்குக்கும் ஆசிரியருக்குமான உறவு நிலை, மாணவரின் குடும்பச் சூழல் உள்ளிட்ட விஷயங்களைப் பார்ப்போம். மாணவர்களில் மாற்றங்களைக் கொண்டு வர மாணவருக்கு மட்டுமல்லாமல் அவர்களின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கும் கவுன்சலிங் தேவைப்பட்டது. சிலநேரங்களில் ஆசிரியர்களுக்கு மாணவர்களின் குடும்ப அமைப்பு பற்றியும், சமூக கட்டமைப்பு அந்த மாணவனை எந்த அளவுக்கு பாதித்து உள்ளது எனவும் தெளிவு தேவைப்படுகிறது.

ஒருமுறை நாங்கள் பள்ளியில் இருந்தபோது, உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மூன்று மாணவர்கள் வகுப்புக்கு வெளியே நிற்க வைக்கப்பட்டிருந்தனர். அது பற்றி ஆசிரியரிடம் கேட்டோம். ஆசிரியர், அந்த மாணவர்கள் வகுப்பில் எப்போதும் சேட்டை செய்து கொண்டே இருக்கின்றனர் என்பதால் வெளியேற்றியதாகத் தெரிவித்தார். அந்த மாணவர்களிடம் பேசியபோது, ஆசிரியர் தங்களை எப்போதும் சேட்டை செய்யும் மாணவர்கள் போல தங்கள் மீது முத்திரை குத்துவதாகத் தெரிவித்தனர். தங்களுக்கும் மரியாதை வேண்டும், ஆசிரியர் அதுபோன்று செய்வதை நிறுத்தினாலே தங்களால் ஒழுங்காகப் படிக்க முடியும் என்றும் தெரிவித்தனர்.

வகுப்பறை (சித்திரிப்பு படம்)
வகுப்பறை (சித்திரிப்பு படம்)

இந்தச் சம்பவத்தில், மாணவர்களுக்கு மட்டுமன்றி ஆசிரியர்களுக்கும் ஆலோசனை வழங்கினோம். அதன் பிறகு அந்த ஆசிரியரின் அணுகுமுறை மாறியது. மாணவர்களும் கல்வி கற்கத் தொடங்கினர். இந்த விஷயத்தை இந்தக் கோணத்தில் அணுகவில்லை என்றால், இந்த மாணவர்கள் பின்னாளில் மூர்க்கமாக மாறுவதற்கும் வாய்ப்புள்ளது. இதுதான் அனைத்துப் பள்ளிகளிலும் உளவியல் ஆலோசகர்கள் பணியமர்த்தப்பட வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது" என்றார் காளீஸ்வரன்.

ஊக்கம் அறக்கட்டளையின் பிற உறுப்பினர்களும் உளவியல் ஆலோசகர்களுமான மௌனிகா, நிவேதா, திலக் ஆகியோரிடமும் பேசினோம்:

"சமூக வலைத்தளத்தின் பாலியல் பிரச்னைகள், போதைப் பொருள் பயன்படுத்துதல், போக்ஸோ சார்ந்த பிரச்னைகள், தாய் தந்தை இல்லாத சூழல், தற்கொலை எண்ணங்கள், வேலைக்குச் சென்றுகொண்டே படிக்கும் நிலை, கற்றல் குறைபாடு உள்ளிட்ட பிரச்னைகளை மாணவர்களிடையே பார்த்தோம்.

வகுப்புகளில் உளவியல் ஆலோசனை
வகுப்புகளில் உளவியல் ஆலோசனை

அமைதியாக, நன்றாக படிக்கக்கூடியவர்கள் என ஆசிரியரால் சொல்லப்படும் மாணவர்கள்கூட, வாழ்க்கையில் சில உளவியல் பிரச்னைகளை சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டு உள்ளனர். அதுபோன்றவர்கள்தான் அதிகமாக தங்களைத் தாங்களே காயப்படுத்திக்கொள்வது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

எங்களின் வகுப்புகள் மற்றும் ஆலோசனைகளுக்குப் பிறகு, பல மாணவர்களின் குணநலனில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த கல்வி ஆண்டிலும் ஆலோசனை வகுப்புகள் நடத்தத் திட்டமிட்டு உள்ளோம்" என்றனர்.

- சுபா ஆறுமுகம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism