Published:Updated:

`தங்கப்பேச்சியின் மருத்துவக் கனவு நிறைவேறுமா?' கவனப்படுத்திய விகடன்; களமிறங்கும் கலெக்டர்!

குடும்பத்தினருடன் தங்கப்பேச்சி

இரண்டு முறை நீட் தேர்வில் வென்ற தங்கப்பேச்சிக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்திருக்கிறது. ஆனால், ஸ்டெதாஸ்கோப் பிடிக்க வேண்டிய தங்கப்பேச்சி, தோட்டத்தில் கூலி வேலை செய்துகொண்டிருக்கிறார்.

`தங்கப்பேச்சியின் மருத்துவக் கனவு நிறைவேறுமா?' கவனப்படுத்திய விகடன்; களமிறங்கும் கலெக்டர்!

இரண்டு முறை நீட் தேர்வில் வென்ற தங்கப்பேச்சிக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்திருக்கிறது. ஆனால், ஸ்டெதாஸ்கோப் பிடிக்க வேண்டிய தங்கப்பேச்சி, தோட்டத்தில் கூலி வேலை செய்துகொண்டிருக்கிறார்.

Published:Updated:
குடும்பத்தினருடன் தங்கப்பேச்சி

ஸ்டெதஸ்கோப் பிடிக்க வேண்டிய தங்கப்பேச்சி, தோட்டத்தில் மண் வெட்டி பிடித்து வேலை செய்துகொண்டிருக்கிறார். அதைப் பார்த்து அவரின் பெற்றோர்கள், நண்பர்கள் செய்வதறியாது தவிக்கின்றனர்.

தோட்டத்தில் வேலை செய்யும் தங்கப்பேச்சி
தோட்டத்தில் வேலை செய்யும் தங்கப்பேச்சி

வறுமையான குடும்ப சூழல் காரணமாக இரண்டுமுறை நீட் தேர்வில் வெற்றி பெற்றும் மருத்துவராக முடியாத சூழலில் அவருக்கு உதவ களத்தில் இறங்கியது விகடன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே பா.மூப்பன்பட்டியை சேர்ந்த சன்னாசி-மயில்தாயி தம்பதிக்கு 4 பெண் பிள்ளைகள். விவசாயக் கூலிவேலை செய்து கிடைக்கும் வருமானம் மூலம் குடும்பத்தை நடத்தி, கஷ்டத்தோடு கஷ்டமாக 4 பெண் பிள்ளைகளையும் படிக்க வைத்தனர்.

குடும்பத்தினருடன்  தங்கப்பேச்சி
குடும்பத்தினருடன் தங்கப்பேச்சி

மூத்த மகள் தங்கப்பேச்சி விக்கிரமங்கலம் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2020-ம் ஆண்டில் 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று மருத்துவ கல்விக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வினை எழுதி வெற்றிபெற்றார். இட ஒதுக்கீடு மூலம் தனியார் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்தது. உணவு, விடுதி உள்ளிட்ட செலவுகளுக்கு பணம் கட்ட முடியாத சூழலால் கடந்த ஆண்டு மருத்துவக்கல்வியில் அவர் சேரவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதனால் அரசு மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு விவசாய வேலைகளுக்கு சென்றபடி தொடர்ந்து படித்து இந்தாண்டு நீட் தேர்வு எழுதினார். இதில் 256 மதிப்பெண் பெற்றாலும் அரசு உள் ஒதுக்கீட்டில் இந்த ஆண்டும் தனியார் மருத்துவ கல்லூரியில்தான் இடம் கிடைத்தது.

குடும்பத்தினருடன்
குடும்பத்தினருடன்

கல்விக் கட்டணத்தை அரசு செலுத்தினாலும் உணவு, தங்கும் விடுதி, போக்குவரத்து உள்ளிட்ட இதர கட்டணங்களை செலுத்தக்கூட வசதி இல்லாத நிலையில் தங்கப்பேச்சியின் குடும்பம் உள்ளது. தன் மருத்துவ கனவை நிறைவேற்ற யாரிடம் உதவி கேட்பது என்று தெரியாமல் தயங்கி நிற்கிறது தங்கப்பேச்சியின் குடும்பம்.

தன்னோடு தேர்ச்சி பெற்ற மாணவிகள் மருத்துவக்கல்லூரி செல்வதற்கு தயாராகிவரும் நிலையில் ஏழ்மையின் காரணமாக எந்த உதவியும் கிடைக்காமல் காய்கறி தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறார் தங்கப்பேச்சி. மதுரை மாவட்டத்தில் பெரும்பாலான கிராமங்களில் பெண் பிள்ளைகளை, பள்ளிக்கல்வியோடு நிறுத்திவிடும் சூழலில் விவசாய கூலி வேலை செய்து கஷ்டமான வாழ்க்கை சூழலிலும் சன்னாசி-மயில்தாய் தம்பதியினர் தங்கள் நான்கு மகள்களையும் நன்கு படிக்க வைத்துள்ளனர்.

குடும்பத்தினருடன் தோட்ட வேலையில்
குடும்பத்தினருடன் தோட்ட வேலையில்

மூத்த மகள் தங்கப்பேச்சி இருமுறை நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ள நிலையில், இரண்டாவது மகள் தேனி சட்டகல்லூரியில் முதலமாண்டு படித்து வருகிறார். 3-வது மகள் யூபிஎஸ்சி தேர்விற்கு தயாராகி வருகிறார். 4-வது மகள் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறார்.

"அரசோ, நிறுவனங்களோ மருத்துவக்கல்விக்கு உதவ வேண்டும். தங்கப்பேச்சி மருத்துவம் படித்து வந்து ஏழைகளுக்கு இலவச சேவை செய்வதோடு கிராமப்புற ஏழை எளிய மாணவிகளின் கல்விக்கு உதவுவாள்" என்று பெற்றோர்கள் கூறுகிறார்கள். நம் விகடன் மூலமாக தங்கப்பேச்சியின் நிலை குறித்து மதுரை கலெக்டர் டாக்டர் அனீஷ் சேகரிடம் தெரிவித்தோம்.

கலெக்டர் அனீஷ் சேகர்
கலெக்டர் அனீஷ் சேகர்

"அவரை நீட் தேர்வுக்கு தாயார்படுத்தியது மாவட்ட நிர்வாகம்தான். அவருக்கு தேவையான உதவிகளை மாவட்ட நிர்வாகம் செய்யும். அவருடைய மருத்துவக் கல்வி ஆசை நிறைவேறும். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கல்லூரியில் இடம் கிடைத்தாலும் அரசு உதவி அவருக்கு கிடைக்கும். கூடுதல் செலவுகள் என்னவென்பதை விசாரித்து நடவடிக்கை எடுப்பேன்" என்றார் நம்பிக்கையாக. தங்கபேச்சியின் மருத்துவ கனவு நிறைவேற வேண்டும். அந்தக் கனவு ஒரு குடும்பத்தின் கனவு மட்டுமல்ல நமது தேசத்தின் கனவு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism