Published:Updated:

`பெற்றோர் போல இவர்களும் யாசகம் பெற செல்லக்கூடாது!’ - ஏழை குழந்தைகளுக்கு இலவசமாக கற்பிக்கும் காவலர்

`சில குழந்தைகளை ஒன்றிணைத்து என்னுடைய விடுமுறை தினங்களில் கல்வி கற்று கொடுக்க ஆரம்பித்தேன். தற்போது குழந்தைகள் ஆர்வமுடன் கல்வி கற்று வருகின்றனர். ஒருவேளை இவர்களுக்கு இந்த வாய்ப்பு இல்லையென்றால் இவர்களின் பெற்றோர் போல இவர்களும் பிச்சையெடுக்கும் சூழலுக்குள் சென்றிருப்பார்கள்'

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியை சேர்ந்தவர் ரஞ்சித் யாதவ். இவர் காவல்துறையில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிகிறார். சில மாதங்களுக்கு முன்பு சாலையில் குழந்தைகளுடன் பிச்சையெடுக்கும் பெற்றோர்களை பார்த்த இவர், அந்த குழந்தைகளுக்கு இலவசமாகக் கல்வி கற்பிக்க முடிவு செய்தார்.

கல்வி - சித்திரிப்பு படம்
கல்வி - சித்திரிப்பு படம்

இதைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் உள்ள ஏழ்மையான குடும்பங்களில் உள்ள குழந்தைகளை ஒன்றிணைத்து மரத்தடியில் இலவசமாகக் கல்வி கொடுக்க ஆரம்பித்தார். தற்போது, அவரிடம் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி கற்கின்றனர். இந்த குழந்தைகளுக்கான படிப்பு சம்பந்தப்பட்ட செலவுகளையும், ரஞ்சித் தான் மேற்கொள்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதுகுறித்து ரஞ்சித் யாதவ் கூறுகையில், 'நான் சாலையில் பார்த்த பல பெற்றோர்கள், தங்கள் குழந்தைகள் படிக்க வேண்டும் என்ற விருப்பத்துடன் இருந்தனர். ஆனால் அதற்கான சூழ்நிலை அவர்களிடம் இல்லை. அதனால் சில குழந்தைகளை ஒன்றிணைத்து என்னுடைய விடுமுறை தினங்களில் கல்வி கற்று கொடுக்க ஆரம்பித்தேன். தற்போது குழந்தைகள் ஆர்வமுடன் கல்வி கற்று வருகின்றனர். ஒருவேளை இவர்களுக்கு இந்த வாய்ப்பு இல்லையென்றால் இவர்களின் பெற்றோர் போல இவர்களும் பிச்சையெடுக்கும் சூழலுக்குள் சென்றிருப்பார்கள்' என்று கூறியுள்ளார்.

கல்வி
கல்வி

மரத்தடியில் நடக்கும் ரஞ்சித்தின் கல்விக்கூடத்தில், குழந்தைகள் பலரும் ஆர்வத்துடன் கல்வி பயின்று வருகின்றனர். 'நாங்கள் மேலும் படித்து பள்ளிக்குச் செல்ல விரும்புகிறோம். இங்கு படிப்பது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது' என்று குழந்தைகள் கூறுகின்றனர்.