Published:Updated:

`எதற்குத் தயங்க வேண்டும்?' - பெண்ணுறுப்பை விளக்கும் உலகின் முதல் மியூசியம்

சினைப்பை, கருப்பை, வஜைனா என்கிற பெண்ணுறுப்பு, கருக்குழாய்கள் போன்றவை சிலை வடிவத்தில் இருக்கும்.

வஜைனா
வஜைனா

நம் உடலின் வெளியுறுப்புகளைப் பற்றி, வெளிப்படையாக அதன் பெயர் குறிப்பிட்டுப் பேசுவதுபோல நம் உள்ளுறுப்புகளைப் பற்றிப் பேசுவதேயில்லை. இது, ஆண்களுக்கும் ஓரளவுக்குப் பொருந்தும் என்றால், பெண்களுக்கு அவர்களின் வெளியுறுப்புகளைப் பற்றி பேசுவதற்குகூட முடியாது. பிறகு உள்ளுறுப்புகள் பற்றி எங்கிருந்து அவர்கள் பேசுவது?

மியூசியம்
மியூசியம்
38 வயதில் 20வது முறையாகக் கர்ப்பம்...16 குழந்தைகள்..!- அதிகாரிகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய பெண்

சமூகம் அவர்களை அப்படித்தான் பழக்கி வைத்திருக்கிறது. விளைவு, அடுத்த தலைமுறையினரையும் `பிரைவேட் பார்ட்ஸ்' என்ற வார்த்தைக்குப் பழக்கப்படுத்தி வருகிறோம். இதனால்தான், பெண்கள் தங்களுக்கு ஏற்படும் ஆரோக்கியம் சார்ந்த பாலியல் பிரச்னைகளையே வெளியில் சொல்லத் தயங்குகிறார்கள். இதில் பாலியல் வன்முறை சார்ந்த பிரச்னைகளைப் பெண்கள் என்றைக்கு வெளியே சொல்வார்கள்?

ஆனால், மாதவிடாய்போல பெண்கள் இதையும் வெளிப்படையாக பேச வேண்டும் என்பதற்காக, `பெண்ணுறுப்பான வஜைனாவும் மற்ற உடல் உறுப்புகளைப் போல, ஓர் உடல் உறுப்புதான்' என்பதை விளக்குவதற்காக லண்டனில் பெண்ணுறுப்புக்கான அருங்காட்சியகம் ஒன்றைத் திறக்க இருக்கிறார்கள். இந்த அருங்காட்சியகத்தில் பெண்களின் பிறப்புறுப்புகளில் உள்ளே இருக்கும் முக்கியமான பாகங்களான சினைப்பை, கருப்பை, வஜைனா என்கிற பெண்ணுறுப்பு, கருக்குழாய்கள் போன்றவை சிலை வடிவத்தில் கண்காட்சிக்காக வைக்கப்பட இருக்கின்றன எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஃப்ளோரன்ஸ்
ஃப்ளோரன்ஸ்
instagram

இது குறித்து வஜைனா அருங்காட்சியகத்தின் நிறுவனரான ஃப்ளோரன்ஸ் தனியார் தொலைக்காட்சிக்குக் கொடுத்துள்ள பேட்டி ஒன்றில், ``வஜைனா மியூசியம் தொடங்குவதால் நான் பெண்ணியத்துக்கு ஆதரவாகப் போர்க்கொடி தூக்கிப்பிடிக்கிறேன் என்று அர்த்தமில்லை. நான் ஒருமுறை ஐலேண்டுக்குச் சென்றிருந்தபோது அங்கு, ஆண் உறுப்புக்கான மியூசியம் இருந்தது. அங்கு ஆண் உறுப்பு சம்பந்தப்பட்ட அனைத்துப் பாலியல் கல்வியும் கற்பிக்கப்பட்டது. இதேபோன்ற அருங்காட்சியம் பிரான்ஸ் நாட்டிலும் இருப்பதாகவும் கேள்விப்பட்டேன். ஆனால், உலகளவில் பெண்ணுறுப்பு சம்பந்தமான அருங்காட்சியகம் எங்குமே இல்லை. ஆண்கள் சம்பந்தப்பட்ட எல்லாம் வெளிப்படையாக இருக்கும்போது பெண்களின் நிலை அப்படி இல்லை என்பதே வருந்தத்தக்க ஒன்றுதான்.

நாட்டில் நடக்கும் பெரும்பாலான பாலியல் குற்றங்களுக்குப் பெண்களின் உடல்பற்றிய புரிதல் இன்மையே காரணமாக இருக்கிறது. இதுபோன்ற குற்றங்களைத் தவிர்க்க வஜைனாவைப் பற்றி பெண்கள் வெளிப்படையாகப் பேச வேண்டிய நேரம் வந்துவிட்டது. பெண்கள் இதைப் பேசப்பேசத்தான், அவளுக்கும் என்னைப்போல சதையாலான உறுப்புதான் இருக்கிறது; அவள் உடல் நம் வன்முறைக்கான வெறும் சதை கிடையாது என்பது ஆண்களுக்குப் புரியும். புரிய வேண்டும்.

Representational image
Representational image

வஜைனா மியூசியம் திறக்க 2017-ம் ஆண்டு முதல் நிதி திரட்ட ஆரம்பித்தேன். இப்போது மியூசியத்தின் எல்லாப் பணிகளும் முடிந்துவிட்டன. வஜைனா மியூசியம் என்பது வெறும் கண்காட்சிக்காக மட்டுமல்ல, இங்கு குழந்தைகளுக்குப் பாலியல் கல்வி கற்றுக்கொடுக்க திட்டமிட்டுள்ளோம். மேலும், பெண் உடல் உறுப்புகள் தொடர்பான, ஆரோக்கியம், செக்ஸ் சார்ந்த அனைத்து விஷயங்களுக்கும் மருத்துவர்கள் உதவியுடன் வழிகாட்டத் திட்டமிட்டுள்ளோம். முக்கியமாக இங்கு ஆண்களுக்கும் அனுமதி உண்டு. வஜைனா பற்றிய எல்லாத் தகவல்களையும் ஆண்களுக்கும் விளக்க உள்ளோம். ஏனென்றால், ஆண்கள் வந்ததும் அந்த உறுப்பின் வழிதானே. இதற்கு சில பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், பலரும் வரவேற்பு தெரிவித்துவருகின்றனர்'' என்றார் விரிவாக.