Published:Updated:

சிறுவயதில் உயிரிழந்த அப்பா; டெய்லரிங் வேலையுடன் படிப்பு; 200/200 கட் ஆஃப் எடுத்த அரசுப்பள்ளி மாணவி

மாணவி பிருந்தா

என்னுடைய அப்பா தலையில் அடிப்பட்டதினால் தான் உயிரிழந்தார். அதிலிருந்தே நான் மருத்துவம் (நரம்பியல் வல்லுநர்) படித்து அனைவருக்கும் சேவை செய்ய வேண்டும் எனும் எண்ணம் எனக்குள் வந்துவிட்டது. மருத்துவம் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால், பொறியியல் படிப்பை தொடருவேன்

சிறுவயதில் உயிரிழந்த அப்பா; டெய்லரிங் வேலையுடன் படிப்பு; 200/200 கட் ஆஃப் எடுத்த அரசுப்பள்ளி மாணவி

என்னுடைய அப்பா தலையில் அடிப்பட்டதினால் தான் உயிரிழந்தார். அதிலிருந்தே நான் மருத்துவம் (நரம்பியல் வல்லுநர்) படித்து அனைவருக்கும் சேவை செய்ய வேண்டும் எனும் எண்ணம் எனக்குள் வந்துவிட்டது. மருத்துவம் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால், பொறியியல் படிப்பை தொடருவேன்

Published:Updated:
மாணவி பிருந்தா

விழுப்புரம் தேவநாத சுவாமி நகர் பகுதியை சேர்ந்த மாணவி பிருந்தா. விழுப்புரம் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரையில் பயின்ற இம்மாணவி... 12-ம் வகுப்பு சென்ற போது அங்கு புதிதாக தொடங்கப்பட்ட `அரசு மாதிரி உண்டு உறைவிடப் பள்ளியில்' சேர்ந்து தங்கிப் படித்து வந்திருக்கிறார். இந்நிலையில், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், 600-க்கு 593 மதிப்பெண்களை பெற்று அசத்தியிருந்தார் அம்மாணவி. இதில் மொழிப்பாடங்களை தவிர்த்து கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய 4 பாடங்களிலும் 100/100 மதிப்பெண்கள் பெற்று அசத்தியிருந்தார்.

அண்ணா பல்கலைக்கழகம், மாணவி பிருந்தா
அண்ணா பல்கலைக்கழகம், மாணவி பிருந்தா

பின், அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பிற்காக விண்ணப்பித்திருந்தார் அம்மாணவி. அண்மையில், அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட பொறியியல் படிப்பிற்கான தரவரிசை பட்டியலில், அரசுப்பள்ளி அளவில் 200/200 கட் ஆஃப் பெற்று தமிழகத்தில் முதலிடம் பெற்று மீண்டும் அசத்தியுள்ள மாணவி பிருந்தா, பொதுப்பிரிவு வரிசையில் 35-வது இடத்தைப் பெற்றிருக்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்நிலையில், அந்த மாணவியிடம் பேசினோம். "எங்க வீட்டில், நாங்க மூன்று பேரும் பெண் பிள்ளைகள்தான். என்னுடைய அப்பா, நான் 7-வது படிக்கும் போதே தவறிவிட்டார். அதிலிருந்து பால்கடை வேலைக்கு சென்று, எங்க மூன்று பேரையும் பத்திரமா வளர்த்தெடுத்தது எங்க அம்மா விஜயலட்சுமி தான். குடும்ப வருமானமும் குறைவாக இருந்ததினால், அக்கா நான் எல்லாம் சேர்ந்து டெய்லெரிங் கத்துகிட்டு எங்க செலவை பார்த்துகிட்டோம். நான் 12-ம் வகுப்பு சென்ற போது, அரசு மாதிரி உண்டு உறைவிடப் பள்ளியை விழுப்புரம் மாவட்டத்தில் முதன் முதலாக தொடங்கினார்கள். நானும் அந்தப் பள்ளியில் படிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. கொரோனா சமயத்தில் 11-ம் வகுப்பு பாடத்தை சரியாகப் படிக்க முடியாத சூழல் ஏற்பட்டிருந்தாலும் அதையும் சேர்த்து எங்களுக்கு பாடம் நடத்தினார்கள் ஆசிரியர்கள்.

அரசுப்பள்ளி மாணவி பிருந்தா
அரசுப்பள்ளி மாணவி பிருந்தா

காலை 5 மணிக்கு பணிக்கு வரும் ஆசிரியர்கள் இரவு 10 மணி வரை கூட இருந்து அர்ப்பணிப்போடு பாடங்களைப் பயிற்றுவித்து, படிப்பதற்கு உதவி செய்வார்கள். உணவு முதற்கொண்டு அனைத்து வசதிகளும் அங்கு நன்றாக தான் இருக்கும். மாவட்ட ஆட்சியர் உட்பட பல உயர் அதிகாரிகள் அடிக்கடி நேரில் வந்து ஆய்வு மேற்கொள்வதோடு, ஊக்கமும் கொடுப்பார்கள். அண்ணா பல்கலைக்கழகத்தின் தரவரிசை பட்டியலில் அரசுப்பள்ளி அளவில் முதலிடம் பெற்றிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. அதை எப்படி சொல்வதென்றே தெரியவில்லை. நீட் தேர்வையும் நன்றாக எழுதியுள்ளோன். என்னுடைய ஆசை மருத்துவம் படிக்க வேண்டும் என்பதுதான். ஏனெனில், என்னுடைய அப்பா தலையில் அடிப்பட்டதினால் தான் உயிரிழந்தார். அதிலிருந்தே நான் மருத்துவம் (நரம்பியல் வல்லுநர்) படித்து அனைவருக்கும் சேவை செய்ய வேண்டும் எனும் எண்ணம் எனக்குள் வந்துவிட்டது. மருத்துவம் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால், பொறியியல் படிப்பை தொடருவேன்" என்றார்.