Published:Updated:

யு.கே.ஜி குழந்தையை அடித்த ஆசிரியர்கள்; உளவியல் காரணமென்ன? - எக்ஸ்பர்ட் பதில்

பள்ளிக் குழந்தைகள்

கண் பார்த்ததை கை எழுதுகிற அளவுக்கு கைக்கு கட்டுப்பாடு வந்திருக்கும். ஆனால், சில குழந்தைகளுக்கு `வளர்ச்சி தாமதம்' (Developmental Delay) இருக்கலாம்.

யு.கே.ஜி குழந்தையை அடித்த ஆசிரியர்கள்; உளவியல் காரணமென்ன? - எக்ஸ்பர்ட் பதில்

கண் பார்த்ததை கை எழுதுகிற அளவுக்கு கைக்கு கட்டுப்பாடு வந்திருக்கும். ஆனால், சில குழந்தைகளுக்கு `வளர்ச்சி தாமதம்' (Developmental Delay) இருக்கலாம்.

Published:Updated:
பள்ளிக் குழந்தைகள்

`பள்ளி மாணவர்களை அடித்த ஆசிரியர்கள்' - இப்படியான செய்திகள் வெளிவரும்போதெல்லாம். அது மாணவர்களின் எதிர்கால நன்மைக்குத்தான்; ஆசிரியர்கள் ஒன்றும் மாணவர்களின் எதிரிகள் கிடையாது என்ற வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. பெரிய வகுப்பு மாணவர்களுக்கு இப்படியான சம்பவங்கள் நிகழும்போதே, அதைப் பெற்றோர்களால் ஏற்க முடியவதில்லை. ஆனால், சென்னையை அடுத்த பெரம்பூரில் யு.கே.ஜி படிக்கும் குழந்தையை மூன்று ஆசிரியர்கள் சேர்ந்து அடித்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

சில தினங்களுக்கு முன்பு... பெரம்பூரில் உள்ள ஓர் தனியார் பள்ளியில் படிக்கும் ஒரு யு.கே.ஜி குழந்தைக்கு ஏபிசிடி-யும், தமிழ் உயிரெழுத்தும் எழுதத் தெரியவில்லை என்பதற்காக மூன்று ஆசிரியர்கள் அந்தக் குழந்தையைக் கோபத்துடன் கையாண்டதுடன் அடிக்கவும் செய்திருக்கின்றனர். பயந்துபோன அந்தக் குழந்தை அந்த இடத்திலேயே மூர்ச்சையாகிவிட்டது. விஷயம் அறிந்து பதறிய குழந்தையின் பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் கொடுக்க, சம்பந்தப்பட்ட மூன்று ஆசிரியர்களும் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.

பள்ளிக் குழந்தைகள்
பள்ளிக் குழந்தைகள்

விசாரணையின்போது, குழந்தைக்கு ஏபிசிடி-யும் தமிழ் உயிரெழுத்தும் எழுத வராததால்தான் அடித்தார்கள் என்பது தெரிய வந்திருக்கிறது. ஒரு மாணவருக்கு சீக்கிரமே எழுத வரும்; இன்னொரு மாணவருக்குச் சற்று தாமதமாகத்தான் எழுத வரும். இது ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்குமே தெரிந்ததுதான். அப்படியிருந்தும் சில ஆசிரியர்கள் ஏன் மாணவர்களை அடிக்கிறார்கள்? இதற்கு ஏதாவது உளவியல் பின்னணி இருக்கிறதா? உளவியல் ஆலோசகர் பிருந்தா ஜெயராமனிடம் கேட்டோம்.

உளவியல் நிபுணர் பிருந்தா ஜெயராமன்
உளவியல் நிபுணர் பிருந்தா ஜெயராமன்

``யு.கே.ஜி படிக்கிற குழந்தையை எழுதவில்லை என்ற காரணத்துக்காக ஆசிரியர்கள் திட்டுவதோ, அடிப்பதோ கண்டிக்கத்தக்க விஷயம். ஏனென்றால், அந்தக் குழந்தைக்கு தான் என்ன செய்தோம் என்பதும் தெரியாது; தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதும் தெரியாது. `மாணவர்கள் ஏன் எழுதவில்லை' என்கிற காரணங்களைத்தான் ஆசிரியர்கள் ஆராய வேண்டும். அதைவிடுத்து `நான் சொல்லியும் நீ எழுதலையா' என்கிற கோபத்தில் கை ஓங்கிவிடுகிறார்கள்.

வீட்டில் சண்டை; மன உளைச்சல் என்று தங்களுக்கு ஏதாவது பிரச்னை இருந்தால், அதை மாணவர்களின் மீது இறக்கி வைத்துவிடுகின்றனர். ஆசிரியர்களின் இந்த மனநிலையை எக்காரணம் கொண்டும் நியாயப்படுத்த முடியாது. ஆசிரியர்கள் பள்ளிக்கூடத்துக்குள் நுழையும்போதே, வீட்டு பிரச்னைகளை பள்ளிக்கூடத்துக்கு வெளியிலேயே இறக்கி வைத்துவிட்டு வர வேண்டும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

யு.கே.ஜி படிக்கிற வயதில் எல்லா குழந்தைகளுக்குமே கண்களும் கைகளும் இணைந்து செயல்படுவது (Eye hand co-ordination) ஓரளவுக்கு இருக்கும். கண் பார்த்ததை கை எழுதுகிற அளவுக்கு கைக்கு கட்டுப்பாடு வந்திருக்கும். ஆனால், சில குழந்தைகளுக்கு `வளர்ச்சி தாமதம்' (Developmental Delay) இருக்கலாம். இதனால், அந்தக் குழந்தைகளுக்குத் தவழ்வது, நடப்பது, பேசுவது, எழுதுவது என்று அனைத்து அடுத்தகட்ட வளர்ச்சிகளும் சற்றுத் தாமதமாகவே இருக்கும்.

சில குழந்தைகள் கரும்பலகையில் இருக்கிற A-வை எழுத நினைத்தாலும், கை விரல்களால் அதற்கான கோடுகளைச் சரியாகப் போட முடியாது. சில குழந்தைகள் படிக்க முடியாமல் திணறுவார்கள். இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அந்தக் குழந்தைக்கு நான் சொன்ன பிரச்னை இருக்கலாம். இதை ஆசிரியர்கள்தான் கண்டுபிடித்துப் பெற்றோரிடம் தெரிவித்திருக்க வேண்டும்'' என்றவர், தொடர்ந்தார்.

குழந்தைகளை ஆசிரியர்கள் அடிப்பது என்ன மாதிரியான மனநிலை?
குழந்தைகளை ஆசிரியர்கள் அடிப்பது என்ன மாதிரியான மனநிலை?

``சில தனியார் பள்ளிகளில் கிண்டர் கார்டன் குழந்தைகளுக்கு ஆசிரியர் பயிற்சி முடிக்காத பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமித்துவிடுகின்றனர். ஆசிரியர் பயிற்சியில் குழந்தைகளின் உளவியல், குழந்தைகளின் வளர்ச்சி நிலைகளைக் கற்பிப்பார்கள். ஆசிரியர் பயிற்சி பெறாமல் பணிக்கு வந்தவர்களாலும் இப்படிப்பட்ட பிரச்னை வரலாம். இவர்களும் பாடம் சொல்லித்தருவார்கள்.

ஆனால், சிறப்புக் கவனம் செலுத்தப்பட வேண்டிய குழந்தைகளை இவர்களால் கண்டுபிடிக்க முடிவதில்லை. தவிர, அவர்களுக்கு எப்படி பாடம் சொல்லித்தருவது; அவர்களை எப்படிக் கையாள்வது என்பதும் தெரிவதில்லை. விளைவு, சிறு குழந்தைகள் என்றும் பாராமல் அடித்துவிடுகிறார்கள்'' என்கிறார் வருத்தமுடன் பிருந்தா ஜெயராமன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism