Published:Updated:

சமூக விரோதமாக செயல்படுவது மக்களா அரசா ? இயக்குநர் அமீர் காட்டம்

சமூக விரோதமாக செயல்படுவது மக்களா அரசா ? இயக்குநர் அமீர் காட்டம்
News
சமூக விரோதமாக செயல்படுவது மக்களா அரசா ? இயக்குநர் அமீர் காட்டம்

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின்போது,போலீசாரே ஆட்டோவைக் கொழுத்தி, பொருள்களை சேதப்படுத்தி போராட்டத்தைக் கலவரமாக மாற்றியதை நாம் அறிவோம்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்தப் போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 13 பேர் இறந்துள்ளனர். இந்நிலையில், இந்தச் சம்பவத்துக்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்புகளும் கண்டனங்களும் வலுக்கின்றன. நேற்று (24.5.18) சென்னையில் அனைத்துக் கட்சிகளின் சார்பில் கோட்டை முதல் சேப்பாக்கம் வரை அரசுக்கு கண்டனம் தெரிவித்து ஊர்வலம் நடத்தப்பட்டது. ஊர்வலத்தில் இயக்குநர் ராம் மற்றும் அமீர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இந்தப்போராட்டத்தின்போது நம்மிடம் பேசிய இயக்குநர் அமீர், "இலங்கைக்கு அடுத்தபடியாக அரசே உள்நாட்டு மக்களைக் கொல்லும் சம்பவம் தமிழகத்தில் அரங்கேறியுள்ளது. மக்களுக்கு எதிராக அரசின் நடவடிக்கைகள் இருப்பது வேதனை அளிக்கிறது. துப்பாக்கிச்சூட்டுக்கு போராட்டத்தில் சமூகவிரோதிகள் கலந்துவிட்டதாக காரணம் கூறுகிறார்கள். யார் தான் சமூக விரோதி.  சுற்றுச்சூழலைப் பாதிக்கும் ஆலையை மூட வலியுறுத்தி எதிர்ப்பை தெரிவித்துப் போராடும் அனைத்துப் பொதுமக்களும் சமூக விரோதியா, சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் சமூக விரோதியா அல்லது ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழலில் பாதிப்பு ஏற்படுவதை அறிந்தும், ஆலையை நடத்த அனுமதி வழங்கும் அரசு சமூக விரோதியா?

இதற்குமுன் சில கட்சியினராலும் சில இயக்கத்தினராலும் ஏற்படுத்தப்பட்ட இதைவிட கொடுமையான குறிப்பிடத்தக்க கலவரங்களின் போதெல்லாம் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதா, இப்போது ஏன். தேவைக்கேற்ப வளைத்துக்கொள்வதற்குத் தான் சட்டமா. உரிமைக்காக போராடும் பொதுமக்களின் மேல் அரசுக்கு ஏன் இவ்வளவு வஞ்சம்" என வேதனை தெரிவித்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அதைத் தொடர்ந்து பேச ஆரம்பித்த இயக்குநர் ராம் அவர்கள், ``மொத்த அரசும் ஸ்டெர்லைட் ஆலைக்கு சாதகமாக இருப்பதற்கு காரணம், ஸ்டெர்லைட் ஆலை மூலம் ஆண்டிற்கு 78,000 கோடி வருவாய் அரசுக்கு கிடைக்கிறது. இப்போராட்டம் மரபு ரீதியான போராட்டம்தான். போரட்டத்தை கலவரமாக மாற்றியது, துப்பாக்கிச்சூடு நடத்தியது என எல்லாம் திட்டமிடப்பட்டவை. போலீஸ்  வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டது துப்பாக்கிச்சூட்டிற்கு முக்கிய காரணமாக கூறப்பட்டது, இதில் எந்த அளவுக்கு உண்மைத்தன்மை இருக்கிறது என்று தெரியவில்லை. காரணம், மெரினாவில் ஜல்லிக்கட்டுப் போரட்டத்தின்போது, போலீசாரே ஆட்டோவைக் கொழுத்தி, பொருள்களைச் சேதப்படுத்தி போராட்டத்தைக் கலவரமாக மாற்றியதை நாம் அறிவோம். உணர்வுகளுக்காகவும் உரிமைக்காகவும் போராடும் மக்களின் பிரச்னைகளைக் கருத்தில் கொள்ளாது ஒடுக்கும் பாசிச ரீதியிலான ஆட்சி நடைபெறுகிறது' என தெரிவித்தார்.