Published:Updated:

``எதை நம்பி இனிமே வாழுறதுன்னே எங்களுக்குத் தெரியலை தாயீ!" - கஜா புயல் பாதிப்பினால் தவிக்கும் மக்கள்

``எதை நம்பி இனிமே வாழுறதுன்னே எங்களுக்குத் தெரியலை தாயீ!" - கஜா புயல் பாதிப்பினால் தவிக்கும் மக்கள்

``என் புள்ளைங்க எல்லோரையும் கட்டிக் கொடுத்து அனுப்பிட்டேன். நான் மட்டும் தனியா இந்தக் குடிசையில இருந்தேன் தாயீ. இந்தப் புயல் வந்து ஒட்டுமொத்தமா என் குடிசையைத் தூக்கிட்டுப் போயிடுச்சு. இப்போ ஒதுங்க கூட இடம் இல்லாம தவிச்சிட்டு கிடக்கேன்."

``எதை நம்பி இனிமே வாழுறதுன்னே எங்களுக்குத் தெரியலை தாயீ!" - கஜா புயல் பாதிப்பினால் தவிக்கும் மக்கள்

``என் புள்ளைங்க எல்லோரையும் கட்டிக் கொடுத்து அனுப்பிட்டேன். நான் மட்டும் தனியா இந்தக் குடிசையில இருந்தேன் தாயீ. இந்தப் புயல் வந்து ஒட்டுமொத்தமா என் குடிசையைத் தூக்கிட்டுப் போயிடுச்சு. இப்போ ஒதுங்க கூட இடம் இல்லாம தவிச்சிட்டு கிடக்கேன்."

Published:Updated:
``எதை நம்பி இனிமே வாழுறதுன்னே எங்களுக்குத் தெரியலை தாயீ!" - கஜா புயல் பாதிப்பினால் தவிக்கும் மக்கள்

`கஜா' புயல் ஏற்படுத்திய பாதிப்பிலிருந்து இன்றளவும் மக்கள் மீள்ந்தபாடில்லை. உடைமைகளையும், வீட்டையும் தொலைத்துவிட்டு உயிரை மட்டும் ஏந்தி அன்றாட பிழைப்புக்கு வழி தெரியாமல் தவித்து வரும் மக்கள் ஏராளம். ஒருபக்கம் தன்னார்வலர்கள், மறுபக்கம் அரசாங்கம் என்று சுழன்று வேலை செய்தாலும் சில நாள்களில் சரியாகக்கூடிய அளவுக்கா இருக்கிறது கஜா புயலின் தீவிரம். தன்னார்வலர்களோடு சேர்ந்து மக்களுக்குத் தேவையான உதவிகள் செய்துவரும் கிரேஸ் பானுவிடம் பேசினேன். 

``தஞ்சாவூரைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு வந்துருக்கோம்மா. இங்கே அன்றாடத் தேவைகளை நிறைவேற்றிக்க முடியாம நிறைய மக்கள் தவிச்சிட்டு இருக்காங்க. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு நாளைக்கான உணவையோ, ஒரு நாளுக்கான நல்ல வாழ்வையோ நம்மால தர முடியும். ஆனா, நிரந்தர நிம்மதியை அரசாங்கமும் பணம் உள்ளவங்களாலேயும்தான் தர முடியும். பணம் வைச்சிருக்குறவங்ககூட ஒருத்தர், இரண்டு பேருக்கு தங்களுடைய விருப்பத்தின் பெயரில் ஒரு குடும்பத்துக்கு வீடு கட்டிக் கொடுக்கலாம். மத்தவங்களுக்கு?! அரசாங்கம் இந்த மக்களுக்காகச் சின்னதா ஒரு வீடு கட்டிக் கொடுத்தா இப்போ இவங்க இருக்கிற சூழலுக்கு அவங்களுக்கு ரொம்ப உதவியா இருக்கும்.  இங்கே பலர் கேட்கிற கேள்விகளுக்கும், அவங்களுடைய கண்ணீருக்கும் என்கிட்ட பதிலே இல்லம்மா..!

இங்கே குறிப்பா பெண்களுடைய நிலைமை ரொம்பவே மோசமா இருக்கு. வயசுப் பிள்ளைகள் இருக்கிற வீட்ல மாதவிடாய்க்கான துணிகூட கிடைக்காம அவதிப்படுறாங்க. நிவாரணப் பணியில ஈடுபடுறவங்க இதை கவனத்துல வைச்சு நாப்கின், உள்ளாடைகள் வாங்கி கொடுத்து அவங்க சிரமத்தைப் போக்கணும். இப்போதைக்குக் குடிசையை தார்ப்பாய் கொண்டு மூடி சமாளிக்கிறாங்க. ஆனா அது ரொம்ப நாளைக்கு நிக்காதே... அரசாங்கம் வீடு கட்டித் தர்ற வசதிகளைச் செய்யணும். காலத்தால அழிக்க முடியாத வலியை ஏற்படுத்தியிருக்கு கஜா. அதை அந்த மக்கள் கடந்து வர நாம்தான் உதவணும்'' என்று நிதர்சனத்தோடு சொல்லி முடித்தார் கிரேஸ் பானு.

இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள வயதான பாட்டி காவேரியிடம் பேசினோம்.

``புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கந்தர்வகோட்டை ஊராட்சியில் இருக்கேன். என் புள்ளைங்க எல்லோரையும் கட்டிக் கொடுத்து அனுப்பிட்டேன். நான் மட்டும் தனியா இந்தக் குடிசையில இருந்தேன் தாயீ. இந்தப் புயல் வந்து ஒட்டுமொத்தமா என் குடிசையை தூக்கிட்டுப் போயிடுச்சு. இப்போ ஒதுங்க கூட இடம் இல்லாம தவிச்சிட்டு கிடக்கேன். பக்கத்து வீட்டுல உள்ளவங்கதான் உதவி பண்ணிட்டு இருக்காங்க. அவங்க கொடுக்கிற சாப்பாட்டைத்தான் சாப்பிடுறேன். மாத்து துணி இல்ல.. சாப்பாடு இல்ல.. தங்குறதுக்கு குடிசையும் இல்லம்மா.. அரசாங்கம் எங்க ஜனங்களுக்கு ஏதாவது உதவி பண்ண நல்லா இருக்கும். மெட்ராசுல இருந்து பலர் எங்களுக்கு உதவி பண்ணன்னு வர்றாங்க. அவங்க எல்லோருக்கும் நன்றி..

இங்கே கைக்குழந்தைகளை வைச்சிட்டு பொடுசுங்க கஷ்டப்பட்டுட்டு இருக்குதுங்க. ஈரத்துணியோடதான் பொம்பளை ஆளுங்க இருக்கோம். மாத்திக்க துணி வாங்கணும்னாகூட காசு வேணும்லம்மா. ஆதார், ரேஷன் கார்டுன்னு எல்லாமே போயிடுச்சு. பொழப்புக்கும் வழி தெரியாம ஆம்பளை ஆளுங்க தவிச்சிட்டு இருக்காங்க. எதை நம்பி இனிமே வாழுறதுன்னே எங்களுக்குத் தெரியலை தாயீ'!" எனக் கண் கலங்கினார்.

`குடிசை மாற்று வாரியம்'ன்னு திட்டமெல்லாம் கொண்டு வந்தாங்க. அதெல்லாம் சென்னை போன்ற பெரிய நகரங்களில் வசிக்கிற மக்களுக்கு மட்டுமானது தானா..! குடிசை எல்லாத்தையும் இழந்துட்டு நிற்கதியா நிற்கிற மக்களை இத்தனை நாள்கள் கண்டுகொள்ளாமல் இருந்ததற்கான காரணம் என்ன?! குடிசை வீடுகளை மாற்றி ஊருக்கு வெளியே ஒரு அடுக்குமாடி குடியிருப்பை கட்டி, கால் கூட நீட்ட முடியாத அந்த வீட்டில் வசிப்பதற்குச் சொந்த ஊரில் அழகான குடிசையில் வாழ்வது சொர்க்கம்தான்.. ஆனாலும், இது மாதிரியான சூழல் ஏற்படும்போது அதற்கு மாற்றாக ஒரு தனி வீட்டை அரசாங்கம் கட்டிக் கொடுக்குமா என்கிற ஏக்கம் அனைவருக்குள்ளும் எழுகின்றது. இனியும் அரசு கைக்கட்டி மக்களுடைய கண்ணீரை வேடிக்கை தான் பார்க்குமா.. அல்லது அவர்களுக்கு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்திக் கொடுக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்..!