Published:Updated:

5 நாடுகளுக்குக் குறி! - காலநிலைக்கு எதிரான போரைத் தொடங்கிய இளம் ஆர்வலர்கள்

உலக வெப்ப மயமாதலுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காத நாடுகளைக் குறிவைத்து ஐ.நாவில் புகார் அளித்துள்ளார் கிரேட்டா

Young Climate Activist
Young Climate Activist ( AP )

ஸ்வீடனைச் சேர்ந்த காலநிலை ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க், தற்போது நியூயார்க்கில் நடந்துவரும் ஐ.நா காலநிலை தொடர்பான மாநாட்டில் கலந்துகொண்டுள்ளார். அவருடன் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இளம் காலநிலை ஆர்வலர்களும் இந்த மாநாட்டில் கலந்துகொண்டு உலக வெப்ப மயமாதலுக்கு எதிராகத் தலைவர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் 10 முதல் 17 வயது மட்டுமே இருக்கும்.

Greta Thunberg
Greta Thunberg
AP

சில தினங்களுக்கு முன்பு பல ஆயிரக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள், மக்களைத் திரட்டி காலநிலைக்கு எதிரான பேரணி நடத்தி நியூயார்க்கை அதிரவைத்தார் கிரேட்டா. அந்த நிகழ்ச்சியில், ``காலநிலை மாற்றம் மிகவும் மோசமடைந்து வருகிறது. இதைத் தடுக்க நம்மால் முடிந்த அனைத்து விஷயங்களையும் செய்ய வேண்டும். நம்மிடமிருந்து பறிக்கப்படும் எதிர்காலத்துக்காக நாம் ஏன் பள்ளிக்குச் செல்ல வேண்டும், படிக்க வேண்டும். சிலரின் லாபத்துக்காக நமது எதிர்காலம் எப்போதோ விற்கப்பட்டுவிட்டது” என அவர் பேசிய வார்த்தைகள் கவனம் ஈர்த்தன.

இதையடுத்து, ஐ.நா-வில் நடந்த கூட்டத்தில் கிரேட்டா எழுப்பிய கேள்வி உலகத் தலைவர்களின் பார்வையை அவர் பக்கம் திருப்பியது. நீங்கள் (உலகத் தலைவர்கள்) என் கனவைத் திருடிவிட்டீர்கள். உங்கள் வெற்று வார்த்தைகளால் என் குழந்தைப் பருவம் காலியாக உள்ளது. மக்கள் துன்பத்தில் உள்ளனர். அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாகச் செத்து மடிந்து வருகின்றனர். ஆனால், நீங்கள் பணம் மற்றும் பொருளாதார வளர்ச்சியின் கற்பனைக் கதைகளைப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு எவ்வளவு தைரியம்?” எனக் கூறியிருந்தார்.

Greta Thunberg
Greta Thunberg
AP

இவரின் பேச்சைக் கேட்டு அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் கிரேட்டாவை வெகுவாகப் பாராட்டியிருந்தார். இதற்கு அடுத்தபடியாக அனைத்து இளம் காலநிலை ஆர்வலர்களும் இணைந்து ஐந்து நாடுகளுக்குக் குறிவைத்துள்ளனர். ஜெர்மனி, பிரான்ஸ், பிரேசில், அர்ஜென்டினா, துருக்கி ஆகிய நாடுகள், பாரிஸ் ஒப்பந்தத்தின்படி நடக்கவில்லை என்றும் வெப்ப மயமாதலைக் குறைக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் இந்த ஐந்து நாடுகள் மீதும் ஐ.நா-வில் புகார் அளித்துள்ளனர்.

`உங்களை நம்பமாட்டோம்; மன்னிக்கவும் மாட்டோம்!’ -  ஐ.நா-வில் கர்ஜித்த சிறுமி கிரேட்டா தன்பெர்க்

புகார் அளித்த பிறகு, ``நீங்கள் (ஐந்து நாடுகள்) செய்யும் வேலை போதுமானதாக இல்லை. இதுவே நாங்கள் உங்களுக்கு அனுப்ப விரும்பும் செய்தி” என கிரேட்டா பேசியுள்ளார். ``இந்த ஐந்து நாடுகளும் தங்கள் பணத்தைச் செலவழிக்கத் தயங்குகின்றன. அதனால்தான் வெப்ப மயமாதலுக்கு எதிராக இவ்வளவு மெதுவாக வேலை செய்கின்றன. அந்த நாட்டுத் தலைவர்கள் அனைவரும், அங்குள்ள கிராமங்கள் மற்றும் நகரங்களுக்குச் சென்று காலநிலை மாற்றத்தால் மக்கள் படும் அவதிகளை நேரில் பார்க்க வேண்டும்” என்று ஸ்மித் என்ற ஆர்வலர் கூறியுள்ளார்.

Young Climate Activist
Young Climate Activist
AP

பாரிஸ் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உலக வெப்ப மயமாதலை 2 டிகிரி குறைக்க வேண்டும் என்ற உறுதிமொழியை ஏற்று அதன்படி அனைத்து நாடுகளும் செயல்பட வேண்டும் என அனைத்து நாடுகளும் இளம் காலநிலை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.