Published:Updated:

முழுக்க செக்கச் சிவந்த வானம்... பற்றியெரியும் கலிஃபோர்னியா காடுகள்! #CaliforniaFires

கலிஃபோர்னியா காட்டுத்தீ
கலிஃபோர்னியா காட்டுத்தீ ( AP )

தீயணைப்புப் படை வீரர்கள் சூழந்திருந்த நெருப்புக்கு மத்தியில் மூழ்கிப் போகும் அளவுக்கு அதன் வீரியம் இருந்ததாக, அருகிலிருந்த குளத்தை நோக்கி உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடிய அப்பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அமெரிக்காவின் வடக்கு கலிஃபோர்னியா பகுதியில் காட்டுத்தீ தீவிரமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. அந்தப் பகுதியின் மலையடிவாரத்திலிருந்த ஒரு குக்கிராமம் வரை பரவிய காட்டுத்தீயில் இதுவரை 10 பேர் பலியாகியுள்ளனர், மேலும் 16 பேரைக் காணவில்லை, 4 பேர் உடல் முழுக்கக் கடுமையான தீக்காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கலிஃபோர்னியா மாகாணத்தின் பெரும்பகுதி வானத்தைப் புகைமூட்டம் சூழந்துவிட்டது. அதனாலும் கடுமையான வெப்பம் நிறைந்த காற்று காரணமாகவும் தீயணைப்பு ஹெலிகாப்டர்கள் வானில் பறப்பது சிரமமாகியுள்ளது.

காட்டுத்தீயால் செக்கச் சிவந்திருக்கும் வானம்
காட்டுத்தீயால் செக்கச் சிவந்திருக்கும் வானம்
AP

சியர்ரா நிவேடா மலையின் அடிவாரத்தில் இரண்டு நாள்களுக்கு முன்னர் காட்டுத்தீ பரவத் தொடங்கியது. தீயணைப்புப் படை வீரர்கள் சூழந்திருந்த நெருப்புக்கு மத்தியில் மூழ்கிப் போகும் அளவுக்கு அதன் வீரியம் இருந்ததாக, அருகிலிருந்த குளத்தை நோக்கி உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடிய அப்பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர். அந்தக் குக்கிராமத்தில் வாழ்ந்த 525 பேரும் அச்சத்தில் உரைந்து போயுள்ளனர்.

சான் ஃப்ரான்சிஸ்கோவில் சில வாரங்களுக்கு முன்னர் தொடங்கிய இந்தக் காட்டுத்தீ, இதுவரை 2,000-க்கும் மேற்பட்ட வீடுகளும் கட்டடங்களும் நெருப்புக்கு இரையாகியுள்ளது. இதுவரை ஏற்பட்டுள்ள சேதங்களை மொத்தமாகக் கணக்கிட்டால் இவையனைத்தையும்விட அதிகமாக இருக்குமென்று அதிகாரிகள் கணிக்கின்றனர். இழப்புகளைக் கணக்கிடும் குழு இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏற்பட்ட சேதங்களைக் கணக்கிட முயன்று கொண்டிருக்கின்றன.

காட்டுத்தீ
காட்டுத்தீ
AP

இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர். 12,500 சதுர கிலோமீட்டர் பரப்பளவு காட்டுத்தீக்கு இரையாகியுள்ளது. கலிஃபோர்னிய கவர்னர் கேவின் நியூசமிடம் பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இழந்த உயிர்களுக்குத் தன் இரங்கல்களைத் தெரிவித்ததோடு, இதைச் சமாளிக்க நிர்வாகத்தின் முழு ஒத்துழைப்பும் கிடைக்குமென்று உறுதியளித்துள்ளதாக, வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜட் டீர் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு