Published:Updated:

19 ஆண்டுகளில் 29 யானைகள் ரயில் மோதி பலி... கோவை - பாலக்காடு வழித்தட பிரச்னைக்கு தீர்வு என்ன?

ரயில் யானை

19 ஆண்டுகளில் 29 யானைகள் கோவை - பாலக்காடு வழித்தடத்தில் ரயில் மோதி உயிரிழந்துள்ளன. ஆனால், தற்போதுவரை அந்தப் பிரச்னைக்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பதே கசப்பான உண்மை.

19 ஆண்டுகளில் 29 யானைகள் ரயில் மோதி பலி... கோவை - பாலக்காடு வழித்தட பிரச்னைக்கு தீர்வு என்ன?

19 ஆண்டுகளில் 29 யானைகள் கோவை - பாலக்காடு வழித்தடத்தில் ரயில் மோதி உயிரிழந்துள்ளன. ஆனால், தற்போதுவரை அந்தப் பிரச்னைக்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பதே கசப்பான உண்மை.

Published:Updated:
ரயில் யானை

சம்பவம் 1:

கோவை நவக்கரை அருகே, திருவனந்தபுரம் - சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் மோதி ஆண் யானை படுகாயமடைந்தது. வனத்துறை அந்த யானையை மீட்டு சிகிச்சை அளித்தனர். ஆனால், அந்த யானை சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.

யானை
யானை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சம்பவம் 2:

கேரள மாநிலம், பாலக்காடு அருகே 30 வயது மதிக்கத்தக்க ஆண் யானை தண்டவாளத்தைக் கடந்துகொண்டிருந்தது. அப்போது அசுர வேகத்தில் வந்த சென்னை மெயில் என்ற ரயில் மோதி அந்த யானை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கோவை மதுக்கரை முதல் கேரளா பாலக்காடு வரை இருக்கும் ரயில்வே தண்டவாளங்கள், யானைகளுக்கு எமனாக மாறி உயிரைப் பறித்துக்கொண்டிருக்கின்றன. தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா, கோவை - பாலக்காடு வழித்தடத்தில் யானைகள் ரயிலில் அடிபட்டு இறப்பது குறித்து தெற்கு ரயில்வேயிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார்.

ரயில் தண்டவாளம் யானை
ரயில் தண்டவாளம் யானை

அதற்கு பதிலளித்த பாலக்காடு கோட்ட மூத்த பொறியாளர் அனந்தராமன், ``2016 முதல் 2021 வரை 8 யானைகள் ரயிலில் அடிபட்டு பலியாகியுள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

2017-ல் 6 கி.மீ தூரத்துக்கு தண்டவாளத்தின் இருபுறமும் சீர் செய்வதற்கு ரூ.2.43 கோடி செலவிடப்பட்டுள்ளது. 2020-ல் அகலப்படுத்துவதற்கு 5 கி.மீ தூரத்துக்கு ரூ.1.59 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், 7.5 கி.மீ தூரத்துக்கு அகலப்படுத்துவதற்கு 3 கோடியே 10 லட்சம் அளவுக்கு ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன” என்று கூறியுள்ளார்.

யானை
யானை

2002 முதல் தற்போதுவரை, 19 ஆண்டுகளில் 29 யானைகள் இந்த வழித்தடத்தில் ரயில் மோதி உயிரிழந்துள்ளன. ஆனால், தற்போதுவரை அந்தப் பிரச்னைக்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பதே கசப்பான உண்மை.

தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் இதை அம்பலப்படுத்தியுள்ள சமூக ஆர்வலர் பாண்டியராஜன், ``காடுகள் இருப்பதற்கு யானைகள்தான் காரணம். ஆனால், அப்படிப்பட்ட யானைகள் மரணத்துக்கு எந்த நடவடிக்கையும் இல்லாமல் அரசுத்துறைகள் மௌனமாக இருப்பதால்தான் தகவல்களைக் கேட்டேன். இந்த வழித்தடத்தில் ஏ லைன், பி லைன் என இரண்டு தடங்கள் உள்ளன.

பாண்டியராஜன்
பாண்டியராஜன்

இதில், பி லைன் வனப்பகுதியில் அதிக தூரம் பயணிக்கிறது. இரவு நேரத்தில் பி லைனில் ரயில் போக்குவரத்தை முற்றிலும் தடை செய்ய வேண்டும். பி லைனை ஏ லைன் அருகே அமைப்பது மட்டும்தான் நிரந்தர தீர்வு. தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மரத்தை வெட்டினால் 100 மரங்களை வளர்க்க வேண்டும் எனச் சொல்கிறார்கள்.

அதுவே ரயில் மோதி ஒரு யானை உயிரிழந்தால், தெற்கு ரயில்வே 100 யானைகளை வளர்க்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வர வேண்டும். யானையைக் கொல்ல யாருக்கும் உரிமை இல்லை. எனவே, அவர்களுக்கு இந்த மாதிரியான தண்டனைதான் வழங்க வேண்டும். ரயில்வேயில் எவ்வளவோ செலவு செய்வதாக கூறுகின்றனர்.

ஏ லைன், பி லைன் வழித்தடம்
ஏ லைன், பி லைன் வழித்தடம்

அதைத் தொழில்நுட்ப வல்லுநர்களின் கருத்துகளைக் கேட்டு ஆக்கபூர்வமாகச் செய்ய வேண்டும். இப்போது தொழில்நுட்பம் எவ்வளளோ வளர்ந்துவிட்டது. இனியும், பழைய தொழில்நுட்பத்தைக் காரணம் காட்டி யானைகளை பழிவாங்கக் கூடாது. தண்டனையைக் கடுமையாக்கினால்தான் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்” என்றார்.

கேரளாவைச் சேர்ந்த சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் குருவாயூரப்பன், ``ஏ லைன் காட்டுக்கு வெளியேவும், பி லைன் காட்டுக்கு உள்ளேயும் செல்கிறது. 90 சதவிகித விபத்துகள் பி லைனில்தான் நடக்கின்றன. யானைகளுக்கு ஏ லைன், பி லைன் வித்தியாசம் தெரியாது. யானை அதன் பகுதியில்தான் நடமாடிக் கொண்டிருக்கிறது. தண்டவாளங்களைக் கடக்கும்போது, வேகமாக வரும் ரயில்கள் மோதி யானைகள் உயிரிழக்கின்றன. அந்தப் பகுதியில் மலை, பாறை, வளைவு எனப் பல சிக்கல்கள் இருக்கின்றன.

குருவாயூரப்பன்
குருவாயூரப்பன்

அந்த மாதிரியான இடங்களில் யானையால் எளிதில் கடக்க முடியாது. ரயில் வேகத்தைக் குறைக்க வேண்டும் எனக் கூறிய பிறகு, குறிப்பிட்ட சில ரயில்களுக்கு மட்டுமே வேகத்தைக் குறைத்தனர். மற்ற ரயில்கள் எப்போதும் போல வேகமாகத்தான் செல்கின்றன. வேகத்தைக் குறைப்பது தற்காலிக தீர்வுதான். யானை ஏன் தண்டவாளத்துக்கு வருகிறது என அதிகாரிகளே கேட்கும் நிலையில்தான் அரசுத்துறைக்கு இதில் புரிதல் உள்ளது.

2007-ம் ஆண்டு யானை வருகையைத் தடுக்க மின்வேலி அமைத்தல், மிளகாயில் க்ரீஸ் வைத்து கட்டுவது, ரப்பர் புல்லட் வைத்து அடிப்பது போன்ற நடவடிக்கைகளில் இறங்கினர். தனது வழித்தடத்தைத் தடுத்ததால், யானை அருகில் உள்ள பழங்குடி கிராமங்களுக்குச் சென்று தனது வழித்தடத்தைத் தேடும்போது அங்குள்ள மக்கள் தாக்கப்பட்டனர். இப்படி தொடர்ந்து யானையை விரட்டுவதற்குதான் முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர்.

அது எதுவுமே கை கொடுக்கவில்லை. இது ஒன்வே ட்ராக் இல்லை. எனவே, ரயில்கள் ஏ லைனிலும் வரலாம். ஆனால், தங்களது வசதிக்காக ரயில்வே துறையினர் அதைச் செய்ய மறுக்கின்றனர். 2004-ம் ஆண்டில் இருந்து இதற்காக பல வழிகளில் போராடிக் கொண்டிருக்கிறோம். அடுத்தகட்டமாக சட்டரீதியான போராட்டங்களை மேற்கொள்ள இருக்கிறோம்” என்றார்.

பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி எம்.பி சண்முகசுந்தரம், மத்திய சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு எழுதியுள்ள கடிதத்தில், ``காஷ்மீர் மாநிலத்திலும், பிரம்மபுத்திரா நதியிலும் மற்றும் அசாம் மாநிலத்திலும் மத்திய அரசு ரயில் பாலத்தை கட்டியுள்ளது. உத்தராஞ்சல் மாநிலத்தில் ஹரித்வார் பகுதியில் அடர்ந்த காட்டுப் பகுதியில் இருந்த ரயில் பாதையை இடமாற்றமும் செய்திருந்தது.

சண்முகசுந்தரம் எம்.பி
சண்முகசுந்தரம் எம்.பி

ஆனால் யானைகளின் வாழ்வாதாரமான வாளையார் காட்டுப் பகுதியில் செல்லும் ரயில் பாதையை இடமாற்றம் செய்ய பாலக்காடு கோட்டம் மறுக்கிறது. அதுவும் 16 கி.மீ.,தான் புதிய பாதை அமைக்க வேண்டும். தோராய மதிப்பீடு ரூ.160 கோடி. தடுப்பு நடவடிக்கைகளுக்கு கோடி கணக்கில் செலவிடுவதை விட இந்த புதிய வழித்தடம் அமைப்பது யானைகள் ரயிலில் அடிபடுவதை தடுக்கும் நிரந்தரத் தீர்வாகும்” என வலியுறுத்தியுள்ளார்.

யானைகள் மட்டுமல்ல, அது வனப்பகுதி என்பதால் மான், மாடு, முயல் என பல்வேறு விலங்குகள் இந்த தண்டவாளத்தில் உயிரிழந்துள்ளன. ரயில்வே துறை அளித்துள்ள பதிலில், இந்தப் பிரச்னை தொடர்பாக வனத்துறையுடன் ஆலோசிக்க வாட்ஸ்அப் குழு வைத்திருப்பதை எல்லாம் நடவடிக்கையாக மேற்கோள் காட்டுகின்றனர்.

நேரடியாக பேசும் தொலைவில் இருந்துகொண்டு, வாட்ஸ்அப் குழு தொடங்கி என்ன செய்துவிட முடியும்? இது அவர்களின் பிரச்னைதானே என்ற அலட்சிய போக்கு அரசுத்துறைகளிடம் தொடரும் வரை யானைகளின் உயிர்களை ரயில் தண்டவாளங்கள் காவு வாங்கிக் கொண்டேதான் இருக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism