Published:Updated:

பைக்காரா காட்டுக்குள் நுழைந்த வேட்டை கும்பல்; மடக்கிப்பிடித்த வனத்துறை!

கைதான வேட்டை கும்பல்

"அவர்களிடம் இருந்து ஒரு நாட்டு துப்பாக்கி, 2 வெட்டு கத்திகள் மற்றும் 2 கார்களையும் பறிமுதல் செய்தோம். தொடர் வனவிலங்கு வேட்டைகளில் ஈடுபட்டு வந்தார்களா என விசாரணை நடத்தி வருகிறோம்"

வனங்கள் அடர்ந்த நீலகிரியில் வனத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளன. அதிலும் குறிப்பாக கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் வனவிலங்கு வேட்டை கட்டுப்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது. நாட்டுத் துப்பாக்கி புழக்கமும் அதிகரித்திருக்கிறது.

இந்த நிலையில் வனப்பகுதியில் கையில் துப்பாக்கியுடன் வேட்டை கும்பல் ஒன்று உதவுவதாக நீலகிரி வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. உடனடியாக விரைந்த வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். காப்புக் காட்டுக்குள் நள்ளிரவில் உலவிய 5 பேரை மடக்கிப்பிடித்து கைது செய்துள்ளனர்.

கைதான வேட்டை கும்பல்
கைதான வேட்டை கும்பல்

வேட்டை கும்பல் குறித்து தெரிவித்த வனத்துறை அதிகாரிகள், " கூடலூர் பகுதியைச் சேர்ந்த குட்டி கிருஷ்ணன், திவாகர், சுரேஷ், மணிஷ் மற்றும் விவேக் ஆகிய பேரும் நாட்டுத் துப்பாக்கியுடன் வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு நாட்டு துப்பாக்கி, 2 வெட்டு கத்திகள் மற்றும் 2 கார்களையும் பறிமுதல் செய்தோம். தொடர் வனவிலங்கு வேட்டைகளில் ஈடுபட்டு வந்தார்களா என விசாரணை நடத்தி வருகிறோம். இந்த கும்பலுடன் தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்தும் விசாரித்து வருகிறோம்" என்றனர்.