Published:Updated:

நிரந்தர வருமானம் தரும் காடு வளர்ப்பு... ஒரு வழிகாட்டுதல்! #DoubtOfCommonMan

காடு
News
காடு

மியாவாக்கி முறை'யில் குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் மரங்களை வளர்க்கலாம். உதாரணமாக, 1000 சதுர அடி நிலத்தில், 300 முதல் 400 மரங்கள் வரை வளர்க்கலாம்.

Published:Updated:

நிரந்தர வருமானம் தரும் காடு வளர்ப்பு... ஒரு வழிகாட்டுதல்! #DoubtOfCommonMan

மியாவாக்கி முறை'யில் குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் மரங்களை வளர்க்கலாம். உதாரணமாக, 1000 சதுர அடி நிலத்தில், 300 முதல் 400 மரங்கள் வரை வளர்க்கலாம்.

காடு
News
காடு

ஆண்டுக்காண்டு வெயிலின் வீரியம் அதிகமாகிக்கொண்டே போகிறது. மழைப் பொழிவின் தன்மையும் மாறிவிட்டது. சிலநேரம், மொத்தமாகக் கொட்டுகிறது. சிலநேரம் பெய்யவேண்டிய பருவத்தில்கூட பெய்யாமல் தவிக்கவிடுகிறது. எல்லாவற்றுக்கும் காரணம் பருவநிலை மாற்றம். இந்த மாற்றத்துக்கு ஒரே தீர்வு, மீண்டும் பூமியை பசுமையாக்குவது; காங்கிரீட் காடுகளாக மாற்றுவதை நிறுத்துவது. சமீப காலங்களில் இது தொடர்பான விழிப்புணர்வு மக்கள் மத்தியில் அதிகரித்திருக்கிறது. காடு வளர்ப்பு குறித்து பெருமளவு ஆர்வம் காட்டத் தொடங்கியிருக்கிறார்கள். விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில், "எனக்கு சிவகங்கையில் கொஞ்சம் நிலம் இருக்கிறது. அங்கு ஓர் காடு உருவாக்க வேண்டும். யாரை அணுக வேண்டும்?" என்ற கேள்வியை எழுப்பியிருந்தார் விவேகானந்தன் என்ற வாசகர். தட்பவெப்ப மாற்றத்தை சரிசெய்ய காடு வளர்ப்பு அவசியம். எந்த ஒரு நிலத்திலும் எடுத்த எடுப்பிலேயே மரத்தை வளர்த்துவிட முடியாது. மண்ணுக்கு ஏற்ற மரங்களை வளர்த்தால் விரைவாக காடு உருவாகும். நாம் வளர்க்கும் காடு வருமானத்தையும் கொடுப்பதாக இருக்கவேண்டும். காடு வளர்க்க நிலத்தின் மண்ணைப் பரிசோதித்து, அதற்கு எந்தமாதிரியான மரங்கள் ஏற்றவை என்பதை கண்டறிய வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் மண் பரிசோதனை நிலையங்கள் இருக்கின்றன. அங்குள்ள அதிகாரிகளிடமே மர வகைகளை பரிந்துரைக்கச் சொல்லி நடலாம். இதுதவிர, மாவட்ட வேளாண் மையம், வனத்துறை அலுவலகம் என பல மையங்களிலும் ஆலோசனைகள் கொடுக்கப்படுகின்றன.

காடு
காடு

எப்போது நடலாம்?

மரக்கன்றுகளை நட மழைக்காலமே சிறந்தது. பருவமழை துவங்கும் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலம் இதற்கு ஏற்றது. தாழ்வான பகுதிகள் என்றால், டிசம்பர், ஜனவரி மாதங்கள் ஏற்றவை. மரக்கன்றுகளை காலை 6 மணி முதல் 10 மணிக்குள் நடுவது நல்லது. இல்லையேல் மாலை 3 மணி முதல் 6 மணிக்குள் நடலாம்.

கேள்வி கேளுங்க
கேள்வி கேளுங்க

மரக்கன்றுகளை எங்கே வாங்கலாம்?

வனத்துறை அலுவலகங்கள் அருகில் இருந்தால், அவர்களிடம் விசாரித்து வாங்கலாம். வனத்துறை தோட்டங்களில் குறைந்த விலையில் தரமான மரக்கன்றுகள் கிடைக்கும். இல்லையென்றால் நர்சரிகளில் நீங்கள் விரும்பும் மரக்கன்றுகளை வாங்கி நடலாம். மரக்கன்றுகளை வாங்கும் இடத்திலேயே, அவற்றை பராமரிப்பது, உரமிடுவது குறித்த ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்ளலாம்.

காடு
காடு

என்னென்ன மரங்களை வளர்க்கலாம்?

மணற்பாங்கான கரையோர நிலங்களில் முந்திரி, சிவகுண்டலம், பூவரசு, தென்னை, பனை, புங்கன், வேம்பு, நெட்டிலிங்கம், அழிஞ்சி, நாட்டு வாதுமை ஆகிய மரங்களை வளர்க்கலாம். சிறுமர வகைகளான புங்கன், சரக்கொன்றை, கல்யாண முருங்கை, முருங்கை, பெருங்காலி, தங்கபட்டி, மயில்க் கொன்றை, கோவர்தனம், பவழமல்லி, மந்தாரை, தங்க அரளி, ரெட் கார்டியா, செண்பகம், கறிவேப்பிலை ஆகிய மரங்களையும் வளர்க்கலாம். மரச்சாலைக்கு அனுப்ப வேம்பு, மகிழம், செவ்வில்வம், மலைவேம்பு, பிணாரி, இலவம்பஞ்சு, ஒதியமரம், வாகைமரம், கொண்டைவாகை, இயல்வாகை, வாதா நாராயண மரம், பூந்திக்கொட்டை மரம், மாவுக்காய், நுணா, பாலை, தேன்பூச்சி, மூக்குச்சளி மரம், தூங்குமூஞ்சி ஆகிய மர வகைகளை வளர்க்கலாம். பழவகை மரங்கள் தேவைப்பட்டால், நாவல், நெல்லிக்காய், பலா மரம், வில்வமரம், மாமரம், இலுப்பை, கொடுக்காப்புளி, கொய்யா, விளாம்பழம், சப்போட்டா, அத்தி, இலந்தை, சீதாப்பழம், மாதுளை ஆகிய மர வகைகள் ஏற்றவை. அரசமரம், ஆலமரம் போன்றவை பரந்து வளரக்கூடிய பெரிய மரங்கள். அவை விசாலமான இடமாக இருந்தால் மட்டுமே வளர்க்கப்பட வேண்டும்.

வருமானத்துக்கு வழி கொடுக்கும் மரங்கள்! பொதுவாக காடுகள் மேகக் கூட்டங்களை இழுத்து, மழையைப் பொழியவைக்கும். மழைத் தண்ணீரை பூமிக்கு அடியில் சேமித்து வைத்துக் கொள்ளும். மரங்களுக்கு தண்ணீர் தேவைப்படும்போது, வேர்மூலமாக இலைகளுக்கு போகும். பயிர்கள் காயும்போதும் மரங்கள் மட்டும் வாடாமல் இருப்பதற்கு இதுதான் காரணம். மரம் வளர்ப்பு நிரந்தரமான வருமானத்தைக் கொடுக்கும். வேலியில் சவுண்டல், வேப்ப மரம் போன்றவற்றை நடலாம். தேக்கு, வருமானம் கொடுப்பதற்கு நீண்ட காலமாகும். ஆனால், வேப்பமரம் 5 வருடத்தில் பலன் கொடுத்துவிடும். இதுபோக ரோஸ்வுட், சந்தன மரங்களையும் தோட்டத்தில் வளர்க்கலாம். நிலத்தின் உள்ளே ஊடாக நெல்லி, கொய்யா, பப்பாளி, முருங்கை ஆகிய மரங்களை நடலாம். ஒரே வகையான மரங்களை மட்டும் வளர்க்காமல், காடுபோல பல அடுக்கு முறையில் பழ மரங்கள், தீவன மரங்கள், எரிவாயு மரங்கள், நார் மரங்கள், வேலி மரங்கள், மருத்துவ குணமுள்ள மரங்கள் என பல வகையான மரங்களை வளர்க்க வேண்டும். இவை அனைத்தும் ஒவ்வொரு சீசனில் வருமானத்தைக் கொடுக்கும். பொதுவாக, மரம் வளர்ப்பு என்பது அரசுப்பணியில் கிடைக்கிற பென்சன் போல. நம் கடைசிக் காலத்தில் நமக்குக் கைகொடுக்கும். காடுகளை வளர்ப்பது குறித்து அடிப்படையான விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார், ஓய்வுபெற்ற வனத்துறை உதவி வனப்பாதுகாவலர் ராஜசேகரன். "காடுகளை வளர்ப்பதற்கு முக்கியமான தேவை தண்ணீர் மற்றும் மண். காடு என்றாலே தேக்கு, குமிழ் போன்ற நீண்டகால மரங்கள்தான் நினைவுக்கு வரும். ஆனால், காடு வளர்ப்பில் வருமானமும் சேர்த்துப்பார்க்கவேண்டும் என்றால், சவுக்கு, பெருமரம், வேப்ப மரம் உள்ளிட்ட குறைந்த காலத்தில் வருமானம் கொடுக்கக் கூடிய மரங்களை நடலாம். இதுபோக காடு வளர்ப்பை வேளாண் காடு வளர்ப்பாக மாற்றிக்கொள்ளவேண்டும். வேளாண் காடு வளர்க்கும்போது, நீண்டகால மரங்கள், குறுகிய கால மரங்கள், விவசாய ஊடுபயிர்கள், கால்நடைகள், பண்ணைக்குட்டை மீன் வளர்ப்பு என பலவற்றையும் ஒருங்கிணைத்தால் காடு வளர்ப்பில் வருமானத்தை அள்ளலாம்" என்றார்.

கேள்வி கேளுங்க
கேள்வி கேளுங்க

விரைவாக காடு வளர்க்க, 'மியாவாக்கி முறை'யை பின்பற்றலாம்!

'மியாவாக்கி முறை'யில் குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் மரங்களை வளர்க்கலாம். உதாரணமாக, 1000 சதுர அடி நிலத்தில், 300 முதல் 400 மரங்கள் வரை வளர்க்கலாம். 10 வருடத்தில் வளரக்கூடிய மரங்களை, இரண்டே வருடத்தில் வளர்ப்பதுதான் 'மியாவாக்கி முறை'யின் சிறப்பம்சம். ஒரு குழி எடுத்து அதில் அதிகமான மரக்கன்றுகளை நடும்போது சூரிய ஒளியைப் பெறுவதற்காக போட்டிபோட்டுக் கொண்டு வளரும். ஆழமான குழியாக எடுத்து நடவு செய்யும்போது வேர் வேகமாக பூமிக்குள் இறங்கும். குறைவான இடங்கள் இருக்கும் இடங்களில் இதுபோல குட்டிக் காடுகளை வளர்க்கலாம். 

எப்படி நடவு செய்வது?

காலி இடங்களில் மூன்றடி ஆழத்துக்குக் குழியெடுக்க வேண்டும். அந்தக் குழிக்குள் நமக்குக் கிடைக்குற குப்பைகளைக் கொட்டி நிரப்பவேண்டும். மேலே அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா மாதிரியான நுண்ணுயிர் உரங்களைப்போட்டுச் செடிகளை நெருக்கமாக நட்டு வைக்க வேண்டும். இப்படி நடும்போது, நம் நாட்டு மர கன்றுகளாக நடுவது நல்லது. பெரிய செடிகளின் வேர் பிளாஸ்டிக் பாக்கெட்டைச் சுற்றியே இருக்கும். அந்தச் செடிகளை மண்ணில் நடும்போது வேர் நேராகப் போகாது. அதனால், நடுத்தரமான செடிகளை நடுவது நல்லது. இந்த முறையில் அதிக அளவிலான காடுகளையும் உருவாக்க முடியும். இந்த முறையில் நடவு செய்ய ஜூன் முதல் டிசம்பர் மாதம் வரையுள்ள மழைக்காலம்தான் சரியானது. நடவு செய்ததும் தண்ணீர் விட வேண்டும். அதன்பிறகு இரண்டு அல்லது மூன்று தண்ணீர் கொடுத்தால் போதும். பிறகு, தானாக காடு உருவாகிவிடும்.