Published:Updated:

பட்டாசால் காற்று மாசுபாடு; கோவை சம்பவத்தை திசை திருப்பும் செயலா! - சுற்றுச்சூழல் ஆர்வலர் சொல்வதென்ன?

காற்று மாசுபாடு

தீபாவளி அன்று காலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை காற்று தரக்குறியீடு அதிகபட்சமாக சவுகார்பேட்டையில் 786 AQI ஆகவும், நுங்கம்பாக்கத்தில் 563AQI ஆகவும், வளசரவாக்கத்தில் 545 AQI ஆகவும் பதிவாகி உள்ளது.

பட்டாசால் காற்று மாசுபாடு; கோவை சம்பவத்தை திசை திருப்பும் செயலா! - சுற்றுச்சூழல் ஆர்வலர் சொல்வதென்ன?

தீபாவளி அன்று காலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை காற்று தரக்குறியீடு அதிகபட்சமாக சவுகார்பேட்டையில் 786 AQI ஆகவும், நுங்கம்பாக்கத்தில் 563AQI ஆகவும், வளசரவாக்கத்தில் 545 AQI ஆகவும் பதிவாகி உள்ளது.

Published:Updated:
காற்று மாசுபாடு

தீபாவளி பண்டிகையில் பட்டாசு வெடித்ததன் விளைவாக நேற்று முன்தினம் (25.10.2022) உலகிலேயே அதிகம் காற்று மாசடைந்துள்ள நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் டெல்லியை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை பிடித்திருக்கிறது சென்னை. ஆரோக்கியமான காற்றின் தர அளவு 0-50 AQI (AQI- Air Quality Index) வரை இருத்தல் வேண்டும். பொதுவாக தென் சென்னையின் AQI 50 முதல் 60 வரை இருக்கும். ஆனால் தீபாவளி தின இரவில் காற்று மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கையின் படி சென்னையில் காற்றின் தரம் 786AQI ஆகும். இது ஒருவர் ஒரு நாளைக்கு 31 சிகரெட் பிடித்ததற்கு சமமாகும்.

காற்று மாசுபாடு
காற்று மாசுபாடு

காற்றின் தரம் 300 AQI-க்கு மேல் சென்றால் அது அபாயகரமான நிலையாகக் கருத்தப்படுகிறது. 24.10.2022 திங்கள் கிழமை இரவு ஆலந்தூர், பெருங்குடி, சவுக்கார்பேட்டை, திருவல்லிக்கேணி, நுங்கம்பாக்கம், வளசரவாக்கம், வேளச்சேரி, கிண்டி, மணலி, எண்ணூர், கொடுங்கையூர், தி.நகர், பாரிஸ், வண்டலூர், அடையார் உள்ளிட்ட சென்னையின் பல பகுதிகளில் காற்றின் தரம் தரம் குறைந்து புகை மூட்டத்துடன் காணப்பட்டது. தீபாவளி அன்று காலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை காற்று தரக்குறியீடு அதிகபட்சமாக சவுகார்பேட்டையில் 786 AQI ஆகவும், நுங்கம்பாக்கத்தில் 563AQI ஆகவும், வளசரவாக்கத்தில் 545 AQI ஆகவும் பதிவாகி உள்ளது. இரவு 11 மணி முதல் 1 2மணி வரை அளவில் சென்னையின் நுண்துகள் அளவுகள் 950 ug/m3 ஆக பதிவாகியுள்ளது, இது கடந்த ஆண்டுகளில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகம் ஆகும்.

வழக்கம்போல வாகனங்கள் பயன்படுத்தி, தொழிற்சாலைகள் செயல்பட்டு வெளியிடும் காற்று மாசுபாட்டு அளவை விட தீபாவளி நாளன்று பட்டாசு வெடித்த புகையின் மூலம் காற்று மாசுபாடு 10 முதல் 15 மடங்கு வரை அதிகமாக பதிவாகி உள்ளது. இந்த ஆண்டு மட்டும் தீபாவளி தினத்தன்று பட்டாசு வெடித்ததன் காரணமாக சென்னை மாநகர் முழுவதும் 211 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டிருக்கின்றன. 

இந்த காற்று மாசுபாடு குறித்து பிரபாகரன் அவர்களிடம் பேசினோம். அவர் கூறியதாவது, “ தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின் ஒரு அங்கமாக பட்டாசு வெடித்ததன் மூலம் சென்னை மாநகர முழுவதும் காற்று மாசு அதிகரித்துள்ளது. கடந்த மூன்று நான்கு வருடங்களை விட, இந்த வருடம் தீபாவளியால் ஏற்பட்ட காற்று மாசு மிக அதிகம். இது மனித சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் செயலாகும். மக்கள் அனைவரும் புகையில்லா தீபாவளியை கொண்டாட முன் வர வேண்டும். காற்று மாசுபடுவதன் மூலம் தூய்மையான காற்றை சுவாசிக்க முடியாமல் பல கர்ப்பிணி பெண்களும், ஆஸ்துமா நோயாளிகளும், முதியவர்களும், குழந்தைகளும், சிரமப்படுகின்றனர்.  கொண்டாட்டம் என்பது பட்டாசு வெடிப்பதில் அல்ல. இதை ஒரு அறிவார்ந்த தமிழ் சமூகம் கைவிட வேண்டும். பட்டாசு தயாரிப்பதில் இருந்து அதை அப்புறப்படுத்துவது வரையில் அனைவருக்கும் தீங்கு ஏற்படுகிறது.  பட்டாசு தயாரிப்பு பணியில் ஈடுபடும் தொழிலாளர்களும் உற்பத்தி செய்யும் போது வேதி நச்சுப் பொருள்கள் அவர்களை பாதிக்கின்றன. பட்டாசு வெடிக்கும் பொழுதும் பல வேதியியல் நச்சுப் பொருள்களும் காற்று மண்டலத்தில் கலக்கின்றன. இதை சுவாசிக்கும் மனிதர்களையும் பாதிக்கிறது. பட்டாசு வெடித்த பின்னரும், அதனை அப்புறப்படுத்தும் தூய்மை பணியாளர்களையும் நச்சுப் பொருள்கள் பாதிக்கின்றன. உழைக்கும் வர்க்கத்தை பெருமளவு பாதிக்கிறது. சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்லாது, மனித இனத்திற்கும் தீங்கு விளைவிக்கும் பட்டாசுகளை அரசு தடை செய்ய வேண்டும். அதேசமயம் சிவகாசியில் செயல்படும் பட்டாசு தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு மாற்று தொழில்கள் ஏற்படுத்தி தர வேண்டும். அவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் அதனை உறுதிப்படுத்த வேண்டும்.” இவ்வாறு கூறினார்.

இதுகுறித்து பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் அவர்களிடமும் பேசினோம். “ சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு பல காரணங்கள் உள்ளன. நாம் அனைவரும் பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்படுத்துகிறோம், இதன் காரணமாகவும் சுற்றுச்சூழல் பாதிப்படைகிறது. பவானி ஆற்றில் கழிவுநீர் கலப்பதால் நுரையாய் வெளிவந்து கொண்டிருக்கிறது, அது குடிநீரிலும் கலக்கிறது, நிலத்தடி நீரையும் பாதிக்கிறது. உயிர்களை பலியிடுவது தவறுதான். ஆனால் அனைவரும் அசைவம் உண்ணுகிறார்கள், இதுவும் தவறுதான். இப்படி பல உதாரணங்கள் உள்ளன.

உமா ஆனந்தன்
உமா ஆனந்தன்

ஆனால் தீபாவளி என்பது வருடத்தில் ஒரு நாள் மட்டுமே கொண்டாடுகிறோம். பட்டாசு வெடித்து கொண்டாடுவதே தீபாவளி. இந்து பண்டிகையை கொண்டாடுவதால் இவ்வாறு கூறுகிறார்கள். இதேபோல் ஒவ்வொரு இந்து பண்டிகையையும் அழிக்க நினைக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் ஒரு நாள் தீபாவளி பண்டிகையை மட்டும் நம்பி வருடம் முழுவதும் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள், சிவகாசி தொழிலாளர்கள். பட்டாசு வெடிக்காமல் இருந்தால் இவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும். கோவையில் நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்திலிருந்து மக்களை திசை திருப்புவதற்காகவே இதுபோன்று செயல்படுகிறார்கள். கொசுக்கடி போன்று இருக்கிற விஷயங்களை எல்லாம் பூதாகரமாக பெரிதாக்க வேண்டாம்.”  எனக் கூறினார் உமா ஆனந்தன்.