Published:Updated:

சென்னையில்... 16 சிகரெட்டுகள் புகையை சுவாசித்த மக்கள்! தீபாவளியின் காற்று மாசு..!

தீபாவளி

காற்று மாசுபாட்டுக்கான தரக்குறியீடு 50 முதல் 100 என்கிற அளவில் இருப்பதுதான் சிறந்தது. ஆனால் மணலியில் 221, ஆலந்தூரில் 218, வேளச்சேரி 203, கொடுங்கையூர் 187, அரும்பாக்கம் 212, ராயபுரம் 232, பெருங்குடி 280, எண்ணூர் 238 என்ற அளவுகளில் காற்று மாசுபாட்டு தரக்குறியீடு பதிவாகியிருக்கிறது.

சென்னையில்... 16 சிகரெட்டுகள் புகையை சுவாசித்த மக்கள்! தீபாவளியின் காற்று மாசு..!

காற்று மாசுபாட்டுக்கான தரக்குறியீடு 50 முதல் 100 என்கிற அளவில் இருப்பதுதான் சிறந்தது. ஆனால் மணலியில் 221, ஆலந்தூரில் 218, வேளச்சேரி 203, கொடுங்கையூர் 187, அரும்பாக்கம் 212, ராயபுரம் 232, பெருங்குடி 280, எண்ணூர் 238 என்ற அளவுகளில் காற்று மாசுபாட்டு தரக்குறியீடு பதிவாகியிருக்கிறது.

Published:Updated:
தீபாவளி

தீபாவளி பண்டிகை கொண்டாடி முடிக்கப்பட்டிருக்கும் நிலையில் பட்டாசு வெடித்ததன் காரணமாக சென்னையில் காற்றுமாசு பெருகியிருப்பதாக மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்திருக்கிறது. கடந்த 24 மணி நேரக்கணக்கில் காற்று மாசுபாட்டுக் குறியீடு 192 ஆக உயர்ந்திருக்கிறது.

இந்திய அளவில் பெருவாரியான மக்களால் கொண்டாடப்படுகிற பண்டிகையாக தீபாவளி இருக்கிறது. கொரோனா பேரிடர் காரணமாக கடந்த 2 ஆண்டுகளில் தீபாவளியை பிரம்மாண்ட மாகக் கொண்டாட முடியவில்லை. ஆனால், இந்த ஆண்டு நாடு முழுவதும் தீபாவளி வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. தீபாவளி என்றாலே பட்டாசுகள்தான் முதன்மையாக இருக்கும். பட்டாசுகள் வெடிப்பதன் மூலம் அதிக ஒலி காரணமாக ஒலி மாசு, புகை காரணமாக காற்று மாசு ஆகியவை ஏற்படுகின்றன. இதன் காரணமாக பட்டாசுகள் வெடிப்பதில் நேரக்கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தீபாவளி அன்று காலை ஒரு மணி நேரமும், இரவு ஒரு மணி நேரம் என மொத்தம் இரண்டு மணி நேரங்கள்தான் பட்டாசு வெடிக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருக்கிறது. மேலும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் பட்டாசு தயாரிப்பிலேயே நிறைய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

காற்று மாசு
காற்று மாசு

தீபாவளிப் பண்டிகை முடிந்ததையடுத்து மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் இந்தியாவில் 170 நகரங்களில் காற்று மாசுபாட்டின் தரக்குறியீடு கணக்கிடப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சென்னையில் 9 இடங்கள் மற்றும் வேலூர், தூத்துக்குடி, ராமேஸ்வரம், திண்டுக்கல், கோவை உள்ளிட்ட பகுதிகளில் இந்த அளவு கணக்கிடப்பட்டுள்ளது.

காற்று மாசுபாட்டுக்கான தரக்குறியீடு 50 முதல் 100 என்கிற அளவில் இருப்பதுதான் சிறந்தது. காற்றில் இந்த அளவைத் தாண்டினாலே அது சூழலுக்குக் கேடு விளைவிக்கும். ஆனால், சென்னையில் நேற்று காலை முதலே காற்று மாசின் அளவு சராசரியாக 150 என்ற அளவைக் கடந்தது. இந்நிலையில் இன்று காலை 4 மணி நிலவரப்படி, மணலியில் 221, ஆலந்தூரில் 218, வேளச்சேரி 203, கொடுங்கையூர் 187, அரும்பாக்கம் 212, ராயபுரம் 232, பெருங்குடி 280, எண்ணூர் 238 என்ற அளவுகளில் காற்று மாசுபாட்டு தரக்குறியீடு பதிவாகியிருக்கிறது.

சென்னையில் 9 இடங்களில், காற்று மாசுபாட்டை அளவிடும் கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும் நிலையில், 8 இடங்களில் 201-300 வரை காற்று மாசுபாட்டுத் தரக்குறியீடு பதிவாகியுள்ளதாக மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

சென்னையை அடுத்து புதுச்சேரியில் 250 என்கிற அளவிலும், திண்டுக்கல்லில் 145, தூத்துக்குடியில் 94, வேலூரில் 145 என்ற அளவுகளில் காற்று மாசுபாட்டின் அளவு பதிவாகியுள்ளது. காற்று மாசுபாட்டுத் தரக்குறியீடு 101 முதல் 200 வரை இருப்பது மிதமானது.

அதுவே 201 முதல் 300 வரை சென்றால் மோசமானது என்ற வகையில் சென்னை மற்றும் புதுச்சேரியில் மோசமான அளவில் காற்று மாசு ஏற்பட்டிருக்கிறது. ஒரு நாளைக்கு 16 சிகரெட்டுகள் புகைத்தால் எந்த அளவு நச்சுப்புகையை உள்வாங்கி யிருப்போமோ அந்த அளவுக்கு நச்சுப்புகையை சென்னைவாசிகள் சுவாசித்துள்ளனர்.

பட்டாசு
பட்டாசு

இந்த மோசமான விளைவுகள் காரணமாகவே பட்டாசுகள் வெடிக்க வேண்டாம் என சூழலியலாளர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர். என்னதான் நேர அளவு நிர்ணயிக்கப்பட்டாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் நாள் முழுவதும் மக்கள் பட்டாசுகளை வெடித்த வண்ணம் இருந்தனர். இந்த மாசுபாடுகளோடு மட்டுமல்லாமல் பட்டாசுக் குப்பைகளை அள்ளுவதற்கும் அதை அப்புறப்படுத்துவதற்கும் தூய்மைப் பணியாளர்கள் சிரமப்பட வேண்டியிருக்கிறது என்றும் கூறப்படுகிறது.